கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in
astro,B.Com.,B.L.,M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை-600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
பிப்ரவரி 14 முதல் 20 வரை 2016
இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
14.02.2016 மாசி 02 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டிதிதி அஸ்வினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை
17.02.2016 மாசி 05 ஆம் தேதி புதன்கிழமை தசமிதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை
19.02.2016 மாசி 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசிதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை
மேஷம் ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே
இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 10ல் புதன், சுக்கிரன் 11ல் சூரியன், சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை நல்லபடி பெருக்க உதவும். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய திருமண சுப காரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். தினமும் விநாயகரை வழிபடவும்.
வெற்றிதரும் நாட்கள் - 14.15,18,19
ரிஷபம் ;கிருத்திகை 2,3,4. ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே
இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் செவ்வாய், 10ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பணம், பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியுடனேயே இருக்க முடியும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது கவனம் தேவை. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றிக் கிடைக்கும். புதிய விடு, மனை வாங்கும் விஷயத்தில் சற்று கவனம் தேவை. குரு ப்ரீதியாக தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 15.16.17.20
மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே
இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் சனி, 9ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகி பொருளாதாரம் மேம்படும். 6ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தடைகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலிருந்த பிரச்சனைகள் விலகி கொடுத்த கடன்கள் வீடு தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபத்தை பெற முடியும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 14,15,18,1
கடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2ல் குரு சஞ்சரிப்பது அற்பதமான அமைப்பு என்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களில் கூட அனுகூலங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமாக நடைபெறும்.என்றாலும் 4ல் செவ்வாய் 8ல் சூரியன் சஞ்சாரம் செற்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களிடம் வீண் பிரச்சனைகள் ஏற்பட கூடும் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். என்றாலும் வேலை பளு சற்ற கூடுதலாகவே இருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. முருகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நற்பலன்களை அடைய முடியும்.
வெற்றிதரும் நாட்கள்- 14,15,16,17,20
சிம்மம் ; மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய், 6ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும் என்றாலும் 7ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபடுகள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் தடையின்ற வெற்றி கிட்டும். பொன் பொருள் சேரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. செய்யும் தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையிருக்கும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அம்மன் வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 15,16,17,18,19
கன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சனி 5ல் புதன், சுக்கிரன் 6ல் சூரியன், கேது சஞ்சாரம் செய்வதால் தொட்டதெல்லாம் துலங்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே இருந்து வந்த பகைமை விலகி ஒற்றுமை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சொந்த வீடு மனை, வண்டி வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வெளிநாடுகளுக்க சென்று பண்புரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். முருகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் மேலும் பல நன்மைகளை அடைய முடியும்.
வெற்றிதரும் நாட்கள் - 18,19,20
சந்திராஷ்டமம் 13.02.2016 காலை 07.12 மணி முதல் 15.02.2016 காலை 09.53 மணி வரை.
துலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே
இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4ல் சுக்கிரன் புதன், சஞ்சரிப்பதும் 11ல் குரு சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் குறையும். சொந்த வீடு, மனை, வாகனங்கள் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்திலிருந்த கடன் சுமைகள் சற்றே குறைவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொன், பொருள், சேரும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கையளிப்பதாய் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவார்கள். எதிர் பார்த்த ஊதிய உயர்வுகளும் கிட்டும். சனிக்கிழமை சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.
வெற்றிதரும் நாட்கள் -14,20
சந்திராஷ்டமம் 15.02.2016 காலை 09.53 மணி முதல் 17.02.2016 மாலை 02.19 மணி வரை.
விருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே
இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4ல் சூரியன், 12 செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் சேமிக்க முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனமுனிருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. துர்க்கையம்மனை வழிபடவும்.
வெற்றிதரும் நாட்கள் - 14,15,16
சந்திராஷ்டமம் 17.02.2016 மாலை 02.19 மணி முதல் 19.02.2016 இரவு 08.47 மணி வரை.
தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே
இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் கேது சூரியன், 9ல் குரு 11ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் குவியும். கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பலருக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும். சிலர் கட்டிய வீட்டை மேலும் புதுப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். கடன்கள் சற்றே குறையும். கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறும். விநாயகரை தினமும் வழிபடவும்.
வெற்றிதரும் நாட்கள் - 15,16,17,18,19
சந்திராஷ்டமம் 19.02.2016 இரவு 08.47 மணி முதல் 22.02.2016 காலை 05.27 மணி வரை.
மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 10ல் செவ்வாய், 11ல் சனி சஞ்சரிப்பதால் ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். சூரியன் 2ல் சஞ்சரிப்பதால் பேச்சியில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலமான பலனை அடைய முடியும். கடன்கள் படிப்படியாகக் குறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் மேவை. உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்து முன்னேற வேண்டியிருக்கும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது.
வெற்றிதரும் நாட்கள் - 18,19,20.
கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியிலேயே சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும் என்றாலும் களத்திர ஸ்தானமான 7ல் குரு, 12ல் சுக்கிரன் புதன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். ஆரோக்கியத்திலும் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகி, அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் கிடைப்பதோடு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். தினமும் விநாயகரை வழிபடவும்.
வெற்றிதரும் நாட்கள் - 14,15,20
மீனம் ; பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே
இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் ராகு 11ல் சுக்கிரன், புதன் சஞ்சாரம் செய்வதால் பல்வேறு பொதுக்காரியங்களில் ஈடுபட்டு பலருக்கு நன்மைகள் செய்யும் வாய்ப்பு உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மற்றவர்களின் பாராட்டுதல்கள் மன மகிழ்ச்சியினை உண்டாக்குவதாக அமையும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றமை பலப்படும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மேலும் நற்பலன்களை பெற முடியும்.
வெற்றிதரும் நாட்கள் - 15,16,17
No comments:
Post a Comment