Rasi palangal

Wednesday, February 3, 2016

பிப்ரவரி மாத ராசிப்பலன் சுப முகூர்த்த நாட்கள் 2016பிப்ரவரி மாத ராசிப்பலன்   சுப முகூர்த்த நாட்கள்  2016மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாதகோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 9ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும்.   தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நல்ல உயர்வு கிட்டும்.  
பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது, சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது, குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 02.02.2016 காலை 09.40 மணி முதல் 04.02.2016 இரவு 07.17 மணி  வரை. 
மற்றும் 29.02.2016 மாலை 05.37 மணி முதல் 03.03.2016 காலை 04.19 மணி வரை.

ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட உங்களுக்கு  ருணரோக ஸ்தானமான 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் சூரியன் 10ல் சஞசாரம் செய்ய இருப்பதும் நல்ல ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம் பட செயல்பட்டு கை நழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள்
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது, குருப்பீரிதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 04.02.2016 இரவு 07.17 மணி முதல் 07.02.2016 அதிகாலை 01.12 மணி  வரை 

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட உங்களுக்கு   6ல் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 8ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும்.
பரிகாரம் சிவ பெருமானை வழிபாடு செய்வது, பிரதோஷ கால விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 07.02.2016 அதிகாலை 01.12 மணி முதல் 09.02.2016 காலை 04.11 மணி  வரை.

கடகம்;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட உங்களுக்கு  மாத கோளான சூரியன் சாதமின்றி சஞ்சரிப்பதும் 4ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பொருளாதார நிலை சுமாராக தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவிவிட்டு கொடுத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் நிம்மதி குறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். வேலை பளுவும் சற்று அதிகரிக்கும்.
பரிகாரம். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 09.02.2016 காலை 04.11 மணி முதல் 11.02.2016 காலை 05.40 மணி  வரை. 


சிம்மம்     ;  மகம், பூரம், உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 6ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்-&மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்&வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.
பரிகாரம். சர்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 11.02.2016 காலை 05.40 மணி முதல் 13.02.2016 காலை 07.12  மணி  வரை

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சனி சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.
பரிகாரம். முருகப்பெருமானை வழிபடுவது, குருப்பீரிதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 13.02.2016 காலை 07.12 மணி முதல் 15.02.2016 காலை 09.53 மணி வரை

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ல் சனியிம் 4ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு ஆகும். இதனால் நீங்கள் எதிலும் சற்று நிதானமுடன் செயல் படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும்.
பரிகாரம். சனி பகவானை வழிபடுவது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 15.02.2016 காலை 09.53 மணி முதல் 17.02.2016 மதியம் 02.19 மணி வரை


விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு ஏழரை சனி தெடருவது சாதமற்ற அமைப்பு என்றாலும் 3ல் சூரியனும் 10ல் ராகுவும் சஞ்சாரம் சேய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின்பே கிடைக்கும். 
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 17.02.2016 மதியம் 02.19 மணி முதல் 19.02.2016 இரவு 08.47 மணி வரை. 

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு  11ல் செவ்வாய் 3ல் கேது சஞ்சரிக்க இருப்பது சாதமான அமைப்பாகும். இதுமட்டுமின்றி மாத பிற்பாதியில் சூரியன் 3ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பே ஆகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 19.02.2016 இரவு 08.47 மணி முதல் 22.02.2016 காலை 05.27 மணி வரை.

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி  ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட உங்களுக்கு  10ல் செவ்வாய், 11ல் சனி சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும்.  பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருக்கும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். போட்டி பொறாமைகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளி நாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.  
பரிகாரம். சிவபெருமானை வழிபடுவது, பிரதோஷ கால விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 22.02.2016 காலை 05.27 மணி முதல் 24.02.2016 மதியம் 04.20  மணி வரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட உங்களுக்கு  10ல் சனி சஞ்சரிப்பதும் 12ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும். 
பரிகாரம். சிவ பொருமானை வழிபடுவது, ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 24.02.2016 மதியம் 04.20 மணி முதல் 27.02.2016 அதிகாலை 04.54 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 10ல் சுக்கிரன் புதன், 11ல் சூரியன் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.  கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் சிலருக்கு உண்டாகும். பொன் பொருள் சேரும் கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். திறமைகளுக்கேற்ற பாராட்டினை பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். 
பரிகாரம். முருகப் பெருமானை வழிபடுவது  விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 27.02.2016 அதிகாலை 04.54 மணி முதல் 29.02.2016 மாலை 05.37 மணி வரை

சுப முகூர்த்த நாட்கள்

03.02.2016 தை 20 ஆம் தேதி புதன்கிழமை தசமிதிதி அனுஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை.

05.02.2016 தை 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசிதிதி மூல நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை.

07.02.2016 தை 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்தசிதிதி உத்திராட நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை.

10.02.2016 தை 27 ஆம் தேதி புதன்கிழமை துவிதியைதிதி சதய நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

12.02.2016 தை 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்திதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

14.02.2016 மாசி 02 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டிதிதி அஸ்வினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

17.02.2016 மாசி 05 ஆம் தேதி புதன்கிழமை தசமிதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

19.02.2016 மாசி 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசிதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

26.02.2016 மாசி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்திதிதி அஸ்த நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை.

No comments: