வாங்கி படிக்க தவறாதீர்கள்
மாா்ச் 2016
ஓம்சரவணபவா இதழுடன்
2016-2017 தமிழ் புத்தாண்டு பலன்கள்
மார்ச் மாத ராசிப்பலன் -
சுப முகூர்த்த நாட்கள் 2016
மேஷம் ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே தன்னுடைய கௌரவத்திற்கும், பெயருக்கும் களங்கம் எற்படாதவாறு பொறுப்புடன் நடந்து கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு 10ல் சுக்கிரன் 11ல் சூரியன் சாதகமான அமைப்பாகும். இதனால் நினைத்தது நிறைவேறும். உங்களது வெற்றிகள் தொடர்ந்தபடியே இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் கிடைக்கப் பெறும். எதிர்பாராத தீடீர் தன வரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். ணூணவன் மனைவியிடையே ஒற்றுமைசிறப்பாக இருக்கும் என்றாலும் நெருங்கியவர்களிடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் பொருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடனிருப்பது நல்லது. புதிய கூட்டாளிகளின் சேர்க்கை தொழிலில் மேன்மையை உண்டாக்கும்.
பரிகாரம். சிவபொருமானை வழிபடுவது பிரதோஷ கால விரதமிருப்பது உத்தமம்.
சந்திராஷ்டமம் 27.03.2016 இரவு 12.22 மணி முதல் 30.03.2016 பகல் 11.48 மணி வரை.
ரிஷபம் ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 7ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாத கோளான சூரியன் சாதமாக சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக உயர்வுகளே உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவினை உண்டாக்கும். குடும்பவாழ்வில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றி கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். என்றாலும் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கூட்டுத்தொழில் சுமாரான லாபத்தை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையே இருக்கும். வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்விகள் கிட்டும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 03.03.2016 காலை 04.19 மணி முதல் 05.03.2016 மதியம் 11.25 மணி வரை.
மற்றும் 30.03.2016 பகல் 11.48 மணி முதல் 01.04.2016 இரவு 08.22 மணி வரை.
மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும் பிறரை எளிதில் நம்பாத குணமும் கொண்ட உங்களுக்கு 6ல் சனி செவ்வாய் 10ல் புதன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். திருமண சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும். தீடீர் தனவரவுகளும் கிடைக்கப்பெற்று குடும்ப பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய முதலீடுகளில் தொழிலை விரிவு செய்யும் நோக்கமும் நிறை வேறும். நல்ல லாபங்கள் பெருகும்-. கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை எளிதாக ஈடுபடுத்த முடியும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்த்த உத்தி யோக உயர்வையும், தடைப்பட்ட ஊதிய உயர்வையும் பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது பிரதோச கால விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 05.03.2016 மதியம் 11.25 மணி முதல் 07.03.2016 மதியம் 02.15 மணி வரை
கடகம் ; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே எந்தவொரு செயலிலும் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு தன ஸ்தானமான 2&ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதும் மாத கோளான சூரியன் 8ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்திலும் ஒற்றுமையற்ற சூழ்நிலைகளே நிலவும். உங்களின் பேச்சிற்கு மரியாதை இருக்காது. உற்றார் உறவினர்களும் சாதகமின்றி செயல்படுவார்கள். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதால் உங்கள் கௌரவத்தை இழக்ககூடிய நிலை உண்டாகும். பிறருக்கு எவ்வளவு தான் நல்லது செய்தாலும் நன்றியை மறந்துவிடுவார்கள். எதிரிகளின் பலம் அதிகரித்து உங்கள் பலம் குறையும் காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகளும், வீண் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் மன அமைதி குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறும் அமைப்பு போன்றவை ஏற்படும்.
பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 07.03.2016 மதியம் 02.15 மணி முதல் 09.03.2016 மதியம் 03.40 மணி வரை.
சிம்மம் ; மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதும், 4ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் அவ்வளவு திருப்திகரமாக அமையாது. குடும்பத்தில் பொருளாதார ரீதியாக தட்டுபாடுகள் உண்டாகும். எடுக்கும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க முடியாது. உற்றார் உறவினர்களின் வருகை வரவுக்கு மீறிய செலவுகளை உண்டாக்கும். உங்கள் முன்கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எந்த வேலையையும் சிரமப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சினைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாது. தொழில் வியாபாரம் செய்பவார்கள் எதிர் பார்த்த கடனுதவிகள் தாமதப்படும்.
பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 09.03.2016 மதியம் 03.40 மணி முதல்11.03.2016 மதியம் 03.41 மணி வரை.
கன்னி ; உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் 6&ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எல்லா வகையிலும் ஏற்றம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி என பல்வேறு அனுகூலப் பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றங்களை அடைய முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அபிரிமிதமான லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும் எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். எதிர் பாராத தன வரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தி ஆகும். கடந்த கால கடன்களும் குறையும்.
பரிகாரம். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 11.03.2016 பகல் 03.41 மணி முதல் 13.03.2016 மாலை 04.39 மணி வரை.
துலாம் ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மன நிலையை கொண்ட உங்களுக்கு 11&ல் குருவும், ராகுவும் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6&ல் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பாகும். இதனால் பொருளாதார ரீதியாக சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை பலப்படும். எதிலும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் உறவினர்களிடம் நல்லப் பெயரை எடுத்துவிட முடியும். உத்தியோக ரீதியாக வெளியூர் வெளிநாட்டு பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கலிலும் சரளநிலை இருக்கும். கடன்கள் யாவும் குறையும். திருமண சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். உடல் நிலையில் சிறுசிறுப் பிரச்சினைகளை சந்தித்தாலும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். சொந்த பூமி மனை வாங்கும் வாய்ப்பும் அமையும். பொன் பொருள் சேரும்.
பரிகாரம். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ªணையில் தீப மேற்றி வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் 13.03.2016 மாலை 04.39 மணி முதல் 15.03.2016 இரவு 07.58 மணி வரை.
விருச்சிகம்; விசாகம்4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஏழரை சனி தொடருவதும், ஜென்ம ராசிக்கு 4&ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளையே சந்திப்பீர்கள். நெருங்கியவர்களே எதிரிகளாக மாறுவார்கள். குடும்பத்தில் உண்டாக கூடிய பொருளாதார தட்டுபாட்டினால் கடன்கள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். புத்திர வழியில் வீண் செலவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷனை சந்திப்பீர்கள். திறமைகளுக்கு தகுந்த உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும். உயர் அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும். பணம் கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பரிகாரம். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது, சனிப்பரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 15.03.2016 இரவு 07.58 மணி முதல் 18.03.2016 அதிகாலை 02.20 மணி வரை.
தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் ஒதுங்கி கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவது வீண் விரயங்களை ஏற்படுத்தும் அமைப்பு 2ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 3ல் கேது சூரியன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடை தாமதங்களை சந்தித்தாலும் இறுதியில் வெற்றிப்பெற்றுவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த அனுகூலப்பலனை அடைவீர்கள். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களால் சுமாரான சாதகப் பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் விலகி படிப்படியான ஒற்றுமை உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிர்பார்த்த லாபம் அமையும். சிலருக்கு புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் உண்டாகும்.
பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 18.03.2016 அதிகாலை 02.20 முதல் 20.03.2016 பகல் 11.35 மணி மணி வரை.
மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பழகும் நிதானம் கொண்ட உங்களுக்கு 11ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 3&ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். 8ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் வெற்றிமேல் வெற்றிகள் ஏற்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். எதிர்பாராத தீடீர் பண வரவுகளால் பொருளாதார நிலை உயர்வடைந்து கடன்களும் குறையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் லாபமும் அனுகூலமும் உண்டாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். தொழில் வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களுக்கு எல்லா வகையிலும் உயர்வுகள் உண்டாகும்.
பரிகாரம். தினமும் விநாயகரை வழிபடுவது, துர்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 20.03.2016 பகல் 11.35 மணி முதல் 22.03.2016 இரவு 10.59 மணி மணி வரை.
கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டு எல்லா இடத்திலும் மதிப்புடன் வாழும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் அனுகூலப்பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தகுதிக்கேற்ற உயர்வுகளைப் பெறுவார்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். வண்டி வாகனம் ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் ஏற்படும். சிலருக்கு அரசு வழியில் உதவி கிடைக்கும். பகைமை பாராட்டியவர்களும் நேசக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பணவரவுகள் சரளமாக இருக்கும். பழைய கடன்கள் குறைந்து சேமிப்பு பெருகும். உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும்.
பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 22.03.2016 இரவு 10.59 மணி மணி முதல் 25.03.2016 பகல் 11.37 மணி வரை
மீனம் ; பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு 12ல் சூரியன் 6ல் குர சஞ்சரிப்பது சாதமற்ற அமைப்பு என்றாலும் 11ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சுமாரான நற்பலனை பெற முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்க பெறும். நண்பர்கள் சற்று ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக செயல்படுவது பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. குடம்க ஒற்றுமை சுமாராக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்துக் கொள்ளலாம். அதிகாரிகளின் ஆதரவை பெற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று முன்னேற்றப் பலன்கள் உண்டாகும்.
பரிகாரம். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 25.03.2016 பகல் 11.37 மணி முதல் 27.03.2016 இரவு 12.22 மணி வரை.
சுப முகூர்த்த நாட்கள்
06.03.2016 மாசி 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவாதசிதிதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை.
10.03.2016 மாசி 27 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியைசிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை
11.03.2016 மாசி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருதியைசிதிதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை
18.03.2016 பங்குனி 05 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமிதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை
25.03.2016 பங்குனி 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவிதியைதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை.
Contact
FOR YOUR CONSULTATION
PLEASE CONTACT MY POSTAL ADDRESS
JOTHIDAMAMANI
DR MURUGUBALAMURUGAN PHD ASTROLOGY.
NO-19/33 VADAPALANI ANDAVAR KOIL STREET
VADAPALANI, CHENNAI-600026 NEAR BANK OF BARODA
MY CELL - 0091 - 7200163001, 9383763001
HTTPS://WWW.FACEBOOK.COM/MURUGU.BALAMURUGAN
HTTPS://PLUS.GOOGLE.COM/U/0/+MURUGUBALAMURUGAN
HTTPS://TWITTER.COM/MURUGUBALA
YOUTUBE / MURUGUBALAMURUGAN
E-MAIL MURUGU.ASTRO@GMAIL.COM , MURUGU_ASTRO@YAHOO.CO.IN.
WEB WWW.MURUGUASTROLOGY.COM
JOTHIDAMAMANI
DR MURUGUBALAMURUGAN PHD ASTROLOGY.
MY CELL - 0091 - 7200163001, 9383763001
HTTPS://WWW.FACEBOOK.COM/MURUGU.BALAMURUGAN
HTTPS://PLUS.GOOGLE.COM/U/0/+MURUGUBALAMURUGAN
HTTPS://TWITTER.COM/MURUGUBALA
YOUTUBE / MURUGUBALAMURUGAN
E-MAIL MURUGU.ASTRO@GMAIL.COM , MURUGU_ASTRO@YAHOO.CO.IN.
WEB WWW.MURUGUASTROLOGY.COM
BANK ACCOUNTS DETAILS ARE
Name ; Murughu Balamurugan
Bank name - Indianbank
Savings Account No - 437753695
Branch name - Saligramam,
Chennai - 600093.INDIA.
MICR no - 600019072
IFS code ; IDIB000S082
CBS CODE-01078
OR
OR
Name ; Murugubalamurugan
Bank name - Bank of Barado
Savings Account No - 29900100000322
Branch name - VadapalaniChennai - 600026.
INDIA.MICR Code - 600012034
IFSC code ; BARBOVADAPA
CBS CODE-01078
Person you sent money By western union money transfer
Dr. R.Balamurugan PhD Astrology.
S/o M.Rajendran
No-19/33 Vadapalani andavar Koil street
Vadapalani, Chennai-600026 Near Bank of Baroda
No comments:
Post a Comment