Sunday, February 7, 2016

வார ராசிப்பலன் பிப்ரவரி 7 முதல் 13 வரை 2016

வார ராசிப்பலன் பிப்ரவரி 7 முதல் 13 வரை   2016

கணித்தவர்
ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No:: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை&600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


பிப்ரவரி 7 முதல் 13 வரை   2016



இந்த வார சுப முகூர்த்த நாட்கள்

07.02.2016 தை 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்தசிதிதி உத்திராட நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை.

10.02.2016 தை 27 ஆம் தேதி புதன்கிழமை துவிதியைதிதி சதய நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை

12.02.2016 தை 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்த்திதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை


மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ராசிக்கு 10ல் சூரியன், 9ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியை குரு பார்வை செய்வதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். 7ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் எல்லா நன்மையும் கிட்டும் 

வெற்றிதரும் நாட்கள்  7,8,9,10,13

ரிஷபம்  ;கிருத்திகை 2,3,4. ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் செவ்வாய் 9ல்  சூரியன் சஞ்சாரம் செய்வதால் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். 7ல் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும்.  பணம் கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசர்த்து சென்றால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கைகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வதால் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

வெற்றிதரும் நாட்கள்  9,10,11,12

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 8ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட் பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் 3ல் ராகு 6ல் சனி சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாகும் என்பதால் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. 7&ஆம் வீட்டிற்கு குரு பார்வையிருப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்  11,12,13
சந்திராஷ்டமம் 07.02.2016 அதிகாலை 01.12 மணி முதல் 09.02.2016 காலை 04.11 மணி  வரை. 

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே, தன ஸ்தானமான 2ல் குரு சஞ்சரிப்பது பணவரவுகளில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 4ல் செவ்வாய் 7ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவை உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முடிந்து வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தெய்வ காரியங்களுக்காகவும், பொதுநலத் திட்டங்களுக்காகவும் சிறுசிறு செலவுகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும், சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள்  7,8,13
சந்திராஷ்டமம் 09.02.2016 காலை 04.11 மணி முதல் 11.02.2016 காலை 05.40 மணி  வரை. 


சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய், 5ல் சுக்கிரன் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் யாவும் குறையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். குருப் ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

வெற்றிதரும் நாட்கள்  7,8,9,10
சந்திராஷ்டமம் 11.02.2016 காலை 05.40 மணி முதல் 13.02.2016 காலை 07.12  மணி  வரை. 

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் சனி 4ல் புதன், சுக்கிரன், 6ல் கேது சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாக்கும். தொழில், வியாபாரத்திலிருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மயான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் மேலும் நற்பலன்கள் உண்டாகும். 

வெற்றிதரும் நாட்கள்  9,10,11,12

சந்திராஷ்டமம் 13.02.2016 காலை 07.12 மணி முதல் 15.02.2016 காலை 09.53 மணி வரை. 

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசியில் செவ்வாய்,  4ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். என்றாலும் 11ல் குரு சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த வகையின் லாபம் கிட்டும். முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.

வெற்றிதரும் நாட்கள் 11,12,13

விருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, தன ஸ்தானமான 2ல் சுக்கிரன் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்  7,8,13

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் கேது, 9ல் குரு, 11ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் ஜென்ம ராசியை குரு பார்வை செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் தடைப்பட்டு கொண்டிருக்கும் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும். உங்களுக்கு இருந்த வந்த கடன் பிரச்சனைகளும் வம்பு வழக்குகளும் குறையும். சேமிப்புகளும் பெருகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்கள் தேடி வரும். சனிக்கிழமைகளில் சனிக்குரிய பரிகாரங்களை செய்து வருவது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள்  9,10,

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசியிலேயே சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்ற கவனம் செலுத்துவது சிறப்பு. 10ல் செவ்வாய், 11ல் சனி சஞ்சாரம் செய்வதால் பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெறும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.  

வெற்றிதரும் நாட்கள் & 7,8,11,12

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 7ல் குரு சஞ்சரித்து ஜென்ம ராசியை பார்வை செய்வதாலும் 11ல் சுக்கிரன், புதன் சஞ்சாரம் செய்வதாலும் நினைத்தது நிறைவேறும்.  தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப் பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். தினமும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

வெற்றிதரும் நாட்கள்  9,10,13

மீனம் ; பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 10ல் சுக்கிரன், புதன் 11ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபார ரீதியாக உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். போட்டிகள் விலகும். வம்பு வழக்குகளில் இருந்த இழுபறிநிலை மறையும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழ்படுவது சிறப்பு.

வெற்றிதரும் நாட்கள்  7,8,11,12






No comments: