Tuesday, February 2, 2016

விவசாய துறை கல்வி


விவசாய துறை கல்வி

     நமது நாடு விவசாய நாடு ஆகும் கிராமங்கள் தான் நம் நாட்டின் உயிர் மூச்சு. யானை கட்டி போர் அடித்ததாக வரலாறுகள் கூறுகின்றன. சோழ வளநாடு சோறுடைத்து என்றும் கூறுவார்கள். நமது முக்கிய உணவு அரிசி கோதுமை போன்ற தானியங்கள் ஆகும். நமது உணவு தேவைகளை நம் நாட்டிலேயே தீர்த்து கொள்ளும் அளவு விவசாய மேம்பாடுகள் உள்ளன. படிப்பறிவு இல்லாத காலத்திலேயே விவசாயம் சிறப்பாக நடைபெற்றது. தற்போது நவீன காலமாகி விவசாயத்திற்கு பல கருவிகள் உருவாகி அத்துறையில் கல்வி மற்றும் பட்டக்கல்வியை கற்று விவசாயத்தில் சிறப்பான உயர்வுகளையும் சாதனைகளையும் செய்து வருகிறார்கள். இத்தகைய கல்வி யாருக்கு அமையும் என காண்போம்.

     ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பூமிக்காரகன் என்பதால் இவரும் சனி விவசாயம் பயிர் தொழிலைப் பற்றி கூறுபவர் என்பதால் இவரும் இணைந்திருந்தாலும் கெடாமல் ஒரளவு வலுப் பெற்று அமையப் பெற்ற ஜாதகர்கள் கண்டிப்பாக விவசாயம் சார்ந்த கல்வி கற்க முடியும். 2,4,5,9க்கு அதிபதிகளுடன் செவ்வாய் சனி இருவரும் சம்மந்தமானால் விவசாய சம்மந்தமான கல்வி உயர் கல்வி பட்டக் கல்வி கற்கும் வாய்ப்பு உண்டாகும்.

No comments: