Tuesday, February 9, 2016

ஆசிரியர் பணி சார்ந்த கல்வி


ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No:: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை&600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


     செல்வத்துள் சிறந்த செல்வமாக விளங்குவது கல்வி செல்வமாகும். அந்த கல்வி செல்வத்தை பாகுபாடின்றி மற்றவர்களுக்கு வழங்குவது என்பது மிகவும் புனிதமான பணியாகும். மாதா பிதா குரு தெய்வம். மாதா பிதாவுக்குப் பிறகு வருவது குரு. குரு என்பவர் நல்ல போதனைகளை செய்யக் கூடியவர். பெற்றோருக்கு பிறகு நம்மை கண்டிக்கும் அதிகாரமும் நல்வழிபடுத்தும் நோக்கமும் கொண்டவர். குருவை ஆசிரியர் என்றும் கூறுவர். இவ்வளவு சக்தி வாய்ந்த ஆசிரியர் பணி குறிப்பிட்ட சிலருக்கு தான் அமையும். ஆசிரியர், பேராசிரியர் போன்ற பணி எல்லாருக்கும் எளிதில் அமைந்து விடாது. அதற்கான கல்வியை கற்பதற்கு பலமான கிரக அமைப்பு வேண்டும். பொதுவாக ஆசிரியர் பணியும், மற்றவர்களுக்கு போதிக்கும் ஆற்றலும் பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் பலமாக இருந்தால் எளிதில் அமையும். நவ கிரகங்களில் குரு பகவான் பலம் பெற்றிருந்தால் மற்றவர்களை வழி நடத்தும் பலமும் வலிமையும் இயற்கையாகவே அமையும். குறிப்பாக கல்விக்காரகன் புதன் பகவான் பலம் பெற்றால் சிறப்பான கல்வி  ஆற்றல் அமையும். அது மட்டுமின்றி ஆசிரியர் பணி என்பது ஒருவரின் பேச்சு வன்மையைப் பொருத்து உண்டாகக் கூடிய தொழிலாகும். அதனால் இக்கல்வியை கற்க ஒருவருக்கு வாக்கு ஸ்தானம் என வர்ணிக்கக் கூடிய 2ஆம் வீடு பலம் பெறுவது மிகவும் முக்கியம்.
     2ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், 2ஆம் வீடு புதன், குரு போன்ற கிரகங்களின் வீடாக அமையப் பெற்றாலும், 2ல் புதன் குரு போன்ற கிரகங்கள் அமையப் பெற்றாலும், நல்ல பேச்சு திறன், வாக்கு வன்மை உண்டாகும். பொதுவாக புதனின் வீடான மிதுனம், கன்னி பலம் பெறுவது மிகவும் உத்தமம். புதன் பலம் பெற்று கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெற்றால் நல்ல பேச்சாற்றல் பல்வேறு விஷயங்களை வெளிக் கொண்டு வரும் திறமை இயற்கையாகவே உண்டாகும். புதன் சுக்கிரன் சுபர் பார்வை பெற்றால் இனிமையாகவும், ரசனையுடனும், பேசும் ஆற்றல் உண்டாகும். செவ்வாய் பலம் பெற்று புதனை பார்வை செய்தால் தைரியத்துடன் அதிகாரத்துவமான பேச்சும் மற்றவர்களை கவரும் பேச்சாற்றலும் உண்டாகும். சந்திரன் பலமாக புதனை பார்த்தால் கற்பனை வளத்துடன் கூடிய பேசாற்றல் ஆற்றல் உண்டாகும். குரு புதனை பார்த்தால் நடைமுறைக்கு ஏற்றவாறு பேசும் ஆற்றல் உண்டாகும். சூரியன் புதன் பலம் பெற்றால் சிறப்பான பேச்சாற்றல் உண்டாகும். 
எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னாதிபதி 4ஆம் பாவமான கல்வி ஸ்தானத்தில் அமையப் பெற்றால் அவர் கண்டிப்பாக ஆசிரியராக கல்வியை தேர்வு செய்வார். அந்த லக்னாதிபதி தன்னுடைய 7ஆம் பார்வையாக 10ஆம் இடமான ஜீவன பாவத்தை பார்வை செய்வதால் அந்த ஜாதகருக்கு கல்வி சம்மந்தமாக தொழில் அமையும், அவர் ஆசிரியராக தானும் கல்வி கற்று, கற்ற கல்வியை மற்றவர்களுக்கு போதித்து அறிவுக்கண்களை திறக்க உதவுவார்.
பொதுவாக புதன், குரு போன்ற கிரகங்கள் 10 ஆம் வீட்டில் பலம் பெறுவதன் மூலம் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்க கூடிய அமைப்பு உண்டாகும். பொதுவாக புதன் குரு 10ல் அமையப் பெற்று அதன் திசை நடைபெற்றால் பள்ளி, கல்லூரிகளில் பணி புரியக் கூடிய உன்னத அமைப்பு உண்டாகும்.

No comments: