Saturday, March 5, 2016

வார ராசிப்பலன் மார்ச் 6 முதல் 12 வரை 2016


                                                 வாங்கி படிக்க தவறாதீர்கள் 

மாா்ச் 2016 

ஓம்சரவணபவா இதழுடன்

2016-2017 தமிழ் புத்தாண்டு பலன்கள்

(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,


அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது)



வார ராசிப்பலன் மார்ச் 6 முதல்  12   வரை   2016

கணித்தவர்
ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                    Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

 மார்ச் 6 முதல்  12   வரை   2016


மேஷம்   ; அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11ல் புதன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் லாபங்கள் அமையும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு கிட்டும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 6,7,8,9

ரிஷபம்  ;கிருத்திகை 2,3,4. ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10ல் புதன் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள் சனி 7ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் -8,9,10,11

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ல் புதன் 6ல் சனி செவ்வாய்  சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கப் பெறும். தினமும் விநாயகரை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள் - 10,11,12

சந்திராஷ்டமம் 05.03.2016 மதியம் 11.25 மணி முதல் 07.03.2016 மதியம் 02.15 மணி வரை. 

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானமான 8ல் சூரியன் புதன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலைகள், வீண்வாக்குவாதங்கள் உண்டாகும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதையும் சமாளித்துவிட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். உத்தியோகஸ்தர்களுள் உடன் பணிபுரிவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவிகளை ஏற்படுத்தும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம். 

வெற்றிதரும் நாட்கள் - 11,12

சந்திராஷ்டமம் 07.03.2016 மதியம் 02.15 மணி முதல் 09.03.2016 மதியம் 03.40 மணி வரை. 


சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு சு ஸ்தானமான 4ல் சனி செவ்வாய் 7ல் சூரியன் புதன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு ஆகும். உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது சற்று கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொள்வதும் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் புத்திர வழியில் மனக்கவலைகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு விரயங்களும் உண்டாகும். அட்டம சனி நடைபெறுவதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களையும் பெரிய முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் - 6,7,8

சந்திராஷ்டமம் 09.03.2016 மதியம் 03.40 மணி முதல்11.03.2016 மதியம்  03.41  மணி வரை. 

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சனி செவ்வாய் 6ல் சூரியன் புதன் சஞ்சாரம் செய்வதால் பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அறிவாற்றலால் எதையும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள் தோன்றும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் சொந்த பூமி, மனை யாவும் சேரும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலமடைவீர்கள். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை உண்டாகும். மகிழ்ச்சி தரக் கூடிய இனிய சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாகச் செயல்படுவார்கள். துர்கை அம்மனை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள் - 8,9,10

சந்திராஷ்டமம் 11.03.2016 பகல் 03.41 மணி முதல் 13.03.2016 மாலை 04.39 மணி வரை.

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ல் சுக்கிரன், 11ல் ராகு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதுடன், குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் நல்பலன் உண்டாகும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய காலம் என்றாலும் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல்களிலும் சரளமான நிலையிருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதால் அபிவிருத்தியையும் பெருக்கிக் கொள்ள முடியும்.உத்தியோகஸ்தர்கள் பிறர்விஷயங்களில்தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம் வினாயகரை வழிபடலாம்.

வெற்றிதரும் நாட்கள் -10,11,12

விருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் சனி செவ்வாய் சுக ஸ்தானமான 4ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாகவே என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

வெற்றிதரும் நாட்கள் - 6,7

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சூரியன் 9ல் குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன் மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப் பெறும். 

வெற்றிதரும் நாட்கள் - 8,9

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு தன ஸ்தானமான 2ல் புதன், 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சிவ பொருமானை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள் - 6,7,10,11 

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே சூரியன் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார நிலை ஒரளவுக்கு திருப்திகரமாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன் மனைவி சற்று அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். உற்றார் உறவினர்களால் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது மனநிம்மதியைத் தரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். சிவபொருமானை வழிபடுவது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் - 8,9,12

மீனம் ; பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
அன்புள்ள மீன  ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 9ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் ஓரளவுக்கு நற்பலன்களை பெற முடியும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலைச்சல்களும் வேலைப் பளுவும் குறையும். சிவபொருமானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் - 6,7,10,11






No comments: