Rasi palangal

Thursday, March 10, 2016

திருமண தடை நீக்கும் திருத்தலங்கள் ------; திருவாரூர்

திருமண தடை நீக்கும் திருத்தலங்கள் ------;   திருவாரூர்                                    

தலச்சிறப்பு

      திருவாரூர் திருத்தலத்தின் பெரும் சிறப்பாகக் கருதப்படும் மூர்த்தி தியாகராஜப் பெருமான் ஆவார். தியாக ராசர் அஜபா நடனமூர்த்தியாக காட்சி தருகிறார். இத்தலம் பஞ்சபூதத்தலங்களுள் பிருதிவித்தலம் ஆகும். பிறக்க முக்தி தரும் திருவாரூர் என புகழ்ப்படும் தலமாகும். இத்திருக்கோயிலில் தினமும் சாயரட்சை பூஜையின் போது தேவேந்திரனே வந்து பெருமானுக்கு பூஜை செய்வதாக கருதி, அர்ச்சகர் நீண்ட அங்கி, மற்றும் தலைப்பாகை அணிந்து தியாகராசரின் எதிரில் நின்று பூஜை செய்கிறார். சப்தவிடத் தலங்களுள் ஒன்றாக இத்திருத்தலம் கருதப்படுகிறது. மண வாழ்க்கை உண்டாக தடை ஏற்படுபவர்கள் இங்குள்ள, கமல தீர்த்தம், சங்கு தீர்த்தம், வாணி தீர்த்தம் முத்தித் தீர்த்தம் போன்றவற்றில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தால் திருமணத் தடைகள் விலகும்.

திருப்பெயர்கள்

சிவபெருமான் ; வன்மீகநாதன், புற்றிடங் கொண்டார்
அம்பாள்         ; கமலாம் பிகை, அல்லியங்கோதை
தல விருட்சம் ; பாதிரி

பெருமானின் வேறு பெயர்கள்
     
இத்திருத்தலத்தின் பெருமானை வீதிவிடங்கள், தேவ கண்டப் பெருமான், தியாகப் பெருமான், செவ்கழு நீரகழகர், செவ்வந்தித் தோடகர், கம்பிக் காதழகர், தியாகவிநோதர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவ சிந்தாமணி போன்ற பெயர்களால் போற்றப்படுகிறார். 
     
சப்தவிடத் தலங்களைப் பற்றிய பழம் பெரும் பாடல் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீரார் திருவாரூர் தென்நாகை நள்ளாறு
  காரார் மறைக்காடு காறாயில் & பேரான
      ஒத்த திருவாய் மூர் உவந்த திருக் கோளிலி
    சத்த விடங்கத்தலம் என்பதாம்.

கோயிலமைப்பு
     
இத்திருத்தலத்தின் நாற்புறமும் உயர்ந்த மதில்களும், கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் உள்ளது.

சந்நிதிகள்
     
இத்திலத்தில் எழுந்தருளியுள்ள கமலாம் பிகை தாமரை, பாசம், அக்கமாலை, அமைந்த நிலை என நான்கு கரங்களுடனும், பராசக்தி பீடங்களில் ஒன்றாகவும், அம்பிகை தவக் கோலத்தில் தரிசனம் செய்கிறாள். உள்ளே நுழையும் போதே வீதிவிடங்க விநாயகர் தரிசனம் பிரமநந்தி, ஆகாச விநாயகர், அஷரபீடம், மற்றும் சண்முகர், பால சுப்பரமணியர், கலைமகள், மகரிஷிகள் வழிபட்ட லிங்கங்கள், விறன்மீண்டர், இந்திரன், கொடி மரம், துர்க்கை ஜீவரேஸ்வரர், ஏகாதசருத்ரர் வழிபட்ட சிவ லிங்கள், முககுந்தர், இந்திர லிங்கம், போன்ற சந்திதிகளும், மற்றும் துலாபார மண்டம், சித்திர சபா மண்டபம், மகா மண்டபம், ஆயிரங்கால் மண்டம், எண்ணெய் காப்பு மண்டபம் போன்ற மகா மண்டபங்களும் கொண்டு அழகாக இத்திருத்தலம் அமைந்துள்ளது.

பிரம நந்தியின் சிறப்பு
     
பூமிக்கு மழை வேண்டி நீர் கட்டுவது, மாடுகள் பங்கறக்க இவருக்கு அருகு சாத்தி அதை பக்தர்களுக்கு கொடுப்பது, மணமாகதவர்கள் திருமண தடை விலக பரிகாரம் செய்வது போன்றவை இத்திருத்தலத்தில் பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளாகும்.
     இத்திருக் கோயிலில் ஆடிப்பூர விழா, பங்குனி, உத்திரப் பெரு விழா, ஆழித் தேர்விழா போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

செல்லும் வழி

இத்திருக்கோயிலுக்கு மயிலாடுதுறை, சிதம்பரம் தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால் போன்ற ஊர்களிலிருந்து பேருந்துகள் வந்து செல்கின்றன.

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


No comments: