Wednesday, March 16, 2016

திருமண தடை நீக்கும் திருத்தலங்கள் திருநாகேஸ்வரம்

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

 தினமும்   விஜய் டிவியில் 
காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்


ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


திருமண தடை நீக்கும் திருத்தலங்கள்
திருநாகேஸ்வரம்
     
கோயில் நகரமான கும்பகோணத்தில் அமைந்துள்ள திருக்கோயில் திருநாகேஸ்வரமாகும். ஆதிசேஷன், சூரியன் வழிப்பட்ட தலமாகும். ஆதிசேஷன் மகாசிவராத்திரியன்று குடந்தைக்கு வந்து அச்சுவத்த தீர்த்ததில் நீராடி இறைவனையும், இறைவியையும் முதல் கால பூஜை நேரத்தில் வழிபட்டு அருர் பெற்றதால் நாகேஸ்வரம் என்றும் அவன் மூழ்கி எழுந்த தீர்த்தம் நாக தீர்த்தம் என்றும் வழங்குகிறது. முன் கோபுர வாயில் தாண்டியதும் இடது புறத்தில் உள்ள நாக தீர்த்தம் சிங்க வாயில் கொண்டுள்ளதால் சிங்க தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. திருமண தடை உள்ளவர்கள், நாக தோஷம் உள்ளவர்கள் திருவாதிரை நட்சத்திர நாளில் இத்தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டால் நாக தோஷம் நிவர்த்தியாகி சிறப்பான மண வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

      ஒன்பது நவக்கிரகங்களில் ஒன்றான தலமாகும். இத்தலத்தினை வழிபடும் நாளன்று காலையில் குடந்தைக் கீழ்கோட்டம், நண்பகலில் திருநாகேச்சுரம், மாலையில் திருப்பாம்புரம் என்று ஒரே நாளில் வழிபடுவது சிறப்பாகும். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ராகுபகவானைக்கு பால் அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாக மாறுவது சிறப்பாகும். இத்திருத்தலத்திற்கு சண்பகவனம், கிரிகின்னி கைவனம் என வேறு பெயர்களும் உண்டு. சேக்கிழார் விரும்பித் திருப்பணி செய்த அற்புதத் தலமாகும்.

திருப்பெயர்கள்

சிவபெருமான்   -நாகேஸ்வரர், நாக நாதர் சண்பகா ரண்யேசுவரர்
அம்பாள்           - கிரிகுஜாம்பிகை, குன்றமா முலையம்மை
தலமரம்          -சண்பகம்
தீர்த்தம்            -சூரிய தீர்த்தம்
தல விநாயகர் -செண்பக விநாயகர்
     
அப்பர், சம்மந்தர், சுந்தரரால் பாடல் பெற்ற தலமாகும்

கோயிலின் அமைப்பு
     
இத்தலத்தின் பிரதான வாயில் கிழக்கு, கோபுரம் 5 நிலைகளை கொண்டது. திருத்த கணபதி, நந்தி, சூரிய தீர்த்தம், நூற்றுக்கால் மண்டபம், சூரிய தீர்த்தக்கரையில் மழுப் பொறுத்த விநாயகர் சந்நிதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராசா உருவமுள்ளது. சேக்கிழார் திருப்பணி செய்த மண்டபமுள்ளது. சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்களும் உள்ளது. நடராச சபையும் அதன் எதிரே நால்வர் சந்நிதியும் உள்ளது. இத்தலத்தில் அம்பாள் சந்நிதிகள் இரண்டு உள்ளன. பிறையணி நுதலான் சந்நிதி சுவாமி சந்திதிக்கு அருகிலுள்ளது. மற்றொரு சந்நிதி தனிக்கோயிலாக அமைந்துள்ளது. கிரிகுஜாம்பிகை கதை உருவத்திற்கு தை மாதத்தில் புணுகு சட்டம் சார்த்தப்படுகிறது. கண்டராதித்த சோழன் இத்தலத்தினை கட்டியதாக கருதப்படுகிறது.

திருவிழாக்கள்

      இத்தலத்தில் கார்த்திகை பெரு விழா, வைகாசி மாதத்தில் சேக்கிழார் குருபூஜை போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது.

வழித்தடம்
     
சோழ நாட்டுத் தென்கரைத்தலமாகும். கும்ப கோணத்தித்திலிருந்தும், மற்ற நகரங்களிலிருந்தும் பேருந்துகள் நிறைய செல்கின்றன.

No comments: