Saturday, April 9, 2016

வார ராசிப்பலன் ஏப்ரல் 10 முதல் 16 வரை 2016

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology. மலேசியா வருகை
தமிழக பிரபல சோதிடர்
திரு முருகுஇராசேந்திரன் அவரின் மகன்
தமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்
விஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.
அவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார்.
மலேசியாவில் கோலாலம்பூர்,
தங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 12 வரை
பாா்க்கும் நேரம் காலை 10.00 முதல் மாலை 08.00 வரை
ஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே

நேரில் தொடர்பு கொள்ளலாம்
Murugubalamurugan
C/O Tamil malar Daily
18 Jalan Ipoh Kecil
Off Jalan Ipoh
50350 Kuala lumbur
cell- - 0167642631


காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் 



உள்ளது கண்டு மகிழுங்கள் )

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


வார ராசிப்பலன் ஏப்ரல்  10 முதல்  16   வரை   2016


கணித்தவர்
ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்

 ஏப்ரல்  10 முதல்  16   வரை   2016


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானமான 8ல் சனி செவ்வாயும் 12ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டிவரும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும். சிவ பெருமானை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள் 12,13

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
பிறருக்கு உதவி செய்வதிலும் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு அட்டம ஸ்தானமான 11ல் சுக்கிரன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு  என்றாலும் 7ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் நிலை சுமாராக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வர வேண்டிய லாபம் வரும். மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். முருகப் பெருமானை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள் 10,11,14,15,16.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்துகொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6ல் சனி செவ்வாய் 10ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், 13ம் தேதி முதல் சூரியன் 11ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு  என்பதால் பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். தினமும் விநாயகரை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள் 12,13.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
நல்ல கற்பனை திறனும். நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ல் சுக்கிரன் 10ல் புதன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு  என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். குடும்பத்திலுள்ளவர்களால் எதிர்பாராத மருத்துவ செலவுகளை சந்தித்தாலும் பெரிய கெடுதியில்லை. பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு சற்று குறைவாகவே இருக்கும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 10,11,14,15,16.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4ல் சனி செவ்வாய் 8ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் வரும் 13ம் தேதி முதல் சூரியன் 9ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஓரளவுக்கு அனுவலங்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன் மனைவியிடையே ஏற்பட கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 10,11,12,13.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
நல்ல நடத்தையும், வசீகர  தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமான பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ல் சனி செவ்வாய் 7ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 12,13,14,15,16.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6ல் சூரியன் 11ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். வரும் 13ம் தேதி முதல் சூரியன் 7ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே மந்த நிலை உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சுமாராகத் தானிருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எதிர் பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமலிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நற்பலனை அடையலாம். சனிபகவானை வழிபாடு செய்வது நல்லது. 

வெற்றிதரும் நாட்கள் 14,15,16.
சந்திராஷ்டமம் 10.04.2016 அதிகாலை01.55மணி முதல் 12.04.2016 காலை 03.28 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்திய சாலியாக வாழும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 13ம் தேதி முதல் சூரியன் 6ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்றாலும் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். சனிப்ரீதி ஆஞ்நேயரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 10,11.
சந்திராஷ்டமம் 12.04.2016 காலை 03.28 மணி முதல் 14.04.2016 காலை 08.28 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4ல் சுக்கிரன் பஞ்சம ஸ்தானமான 5ல் புதன் சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமானப் பலனைப் பெற முடியும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு செலவுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். வேலை பளுவும் குறையும். தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதன் மூலம் அலைச்சல்களை தவிர்க்கலாம். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 10,11,12,13.
சந்திராஷ்டமம் 14.04.2016 காலை 08.28 மணி முதல் 16.04.2016 மாலை 05.17 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11ல் சனி செவ்வாய் 4ல் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழில் ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறுவார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 12,13,14,15,16.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2ல் சுக்கிரன் 10ல் செவ்வாய் 13ம் தேதி முதல் 3ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது யாவும் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லாபத்தைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம் பட செயல்பட்டு உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 14,15,16.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன  ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6ல் ராகு 9ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் இக்காலங்களில் நன்மை தீமை கலந்தப் பலன்களையே பெற முடியும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்கனால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்பபது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்  பெறும். குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 10,11.

Post a Comment

Intha Naal