Rasi palangal

Monday, April 4, 2016

ரிஷபம் துர்முகி வருட பலன்கள் 2016 2017


ஜோதிட மாமணி, 

முனைவர் முருகு பால முருகன்

 மலேசியா விஜயம்


தமிழக பிரபல சோதிடர் 

திரு முருகுஇராசேந்திரன் அவரின்   மகன்

தமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்
 
விஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி, 

முனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.

அவர்கள்  குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார். 
தங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 19 வரை 
மலேசியாவில் கோலாலம்பூர், பினாங் 

ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்
ஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே
நேரில் தொடர்பு கொள்ளலாம்
cell- - 0167642631காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் உள்ளது கண்டு மகிழுங்கள் )

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

ரிஷபம்  துர்முகி வருட பலன்கள் 2016   2017

தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும், பிடிவாத குணமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த துர்முகி வருடத் தொடக்கத்தில் குருபகவான் 4ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், இந்த ஆண்டு முழுவதும் சனி 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், 4ல் ராகு 10ல் கேது சஞ்சாரம் செய்வதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். வரும் ஆடி 18ஆம் தேதி முதல் (2.8.2016) குரு பஞ்சம ஸ்தானமான 5ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியினைப் பெற முடியும். தடைபட்டு கொண்டிருந்த திருமண சுப முயற்சிகள் தடைவிலகி கை கூடும். நல்ல மண வாழ்க்கை அமையும். குடும்பத்தில் சுபிட்சம், கணவன் மனைவியிடையே ஒற்றுமை, உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும், புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கடன் பிரச்சனைகளால் அவதிபடுபவர்களுக்கு கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறுவதுடன் லாபமும் பெருகும். சனி 7ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது, தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைப்பதுடன் உயர் பதவிகளும் கிட்டும். உடன் பணிபுரிவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வேளை பளுவை குறைத்து கொள்ள முடியும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும். ஏதாவது சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்திலுள்ள பெரியவர்களால் மண கவலை உண்டாகலாம். நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியாக குணமாகுவார்கள். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாதிருப்பதால் வீண் மனக்குழப்பங்களை குறைத்து கொள்ள முடியும்.

குடும்பம் பொருளாதாரம்
இந்த ஆண்டு எல்லா வகையிலும் ஓரளவுக்கு ஏற்றத்தைத் தருவதாக அமையும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். திருமண சுபகாரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பொன் பொருள் சேரும். உற்றார்  உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் நற்பலன்களைப் பெற முடியும். பூர்வீக சொத்துக்களாலும் எதிர்பார்த்த ஆதாயங்களைப் பெறுவீர்கள். முடிந்த வரை குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது நற்பலனை தரும்.

கொடுக்கல் வாங்கல்
பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக  இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு சாதகமாக அமையும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தினை பெற முடியும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும் என்றாலும் அதன் மூலம் அனுகூலம் ஏற்படும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபம் உண்டாகும். சனி 7ல் சஞ்சரிப்பதால் புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சனைகள் உண்டாகும்.

உத்தியோகம்
பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சாதிக்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் கிட்டும். சில சமயங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

அரசியல்
பெயர், புகழ் உயர கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். கட்சிக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் பொருளாதார நிலையில் சிறப்பாக இருக்கும். உடன் பழகுபவர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம். 

விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர் பார்த்த படி இருக்கும். பட்ட பாட்டிற்கான முழுப்பலனையும் தடையின்றி அடைய முடியும். புதிய யுக்திகளையும் கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி, மனை போன்றவற்றையும் வாங்க கூடிய யோகம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். பங்காளிகளை அனுசரித்து செல்வது நல்லது. 

பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும். குடும்பத்திலும் ஒற்றுமை, சுபிட்சம் நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். பொன் பொருள் சேரும் புதிய வீடு கார் போன்றவற்றையும் வாங்குவீர்கள். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

மாணவ மானவியர்
கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளையும், பாராட்டுதல்களையும் பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கைகளையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியிலும் ஆதரவு கிட்டும்.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண்  5,6,8
நிறம்  வெண்மை, நீலம்,
கிழமை  வெள்ளி,சனி
கல்  வைரம்,
திசை  தென்கிழக்கு,
தெய்வம்  விஷ்ணு, லட்சுமி

பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஆடி 18 ம் தேதி வரை (02.08.2016) குரு பகவான் 4ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு பரிகாரம் செய்வது, குருப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது. சனி 7ல் சஞ்சரிப்பதால் சனி ப்ரீதி செய்வது ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். சர்ப கிரகமான ராகு கேது 4,10ல் சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. 

No comments: