Sunday, April 10, 2016

சிம்மம் துர்முகி வருட பலன்கள் 2016 - 2017


சிம்மம் துர்முகி வருட பலன்கள் 2016  -  2017
; மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்
உயர்ந்த எண்ணங்களுடன், பிறர் மெச்சும் படியாக வாழக்கூடிய யோகம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! உங்களுக்கு என் இதயத் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த துர்முகி ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு அவ்வளவு சாதகமானதாக இருக்காது. குரு பகவானும் ராகுவும் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், கேது 7ல் சஞ்சாரம் செய்வதும், சனி 4ல் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவதே நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம்.  கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். வரும் ஆடி மாதம் 18ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் (02.08.2016) குரு பகவான் தன ஸ்தானமான 2ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தடைவிலகி கைகூடும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல் வாங்கலில் நெருக்கடிகள் குறைந்து சரளமான நிலை எற்படும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்தால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் சிறு சிறு தடைகளுக்குப் பின் கிட்டும். 

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களால் உடல் நிலை சோர்வடையும் குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளாலும் மனநிம்மதி குறையும் என்றாலும் எதையும் எதிர் கொண்டு ஏற்றத்தை அடைவீர்கள்.

குடும்பம் பொருளாதாரம்
இந்த ஆண்டில் குடும்பத்தில் சற்று சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது கணவன் மனைவி விட்டு கொடுத்து நடப்பது  நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்த கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். 

கொடுக்கல் வாங்கல்
ஆண்டின் தொடக்கத்தில் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. குரு பெயர்ச்சிக்குப்பின் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகும்.

தொழில் வியாபாரிகள்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியை பெருக்க முடியும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.

உத்தியோகம்
பணிபுரிபவர்களுக்கு பணியில் வீண் பிரச்சனைகள், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விட முடியும். எதிர் பார்த்த பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிட்டும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். நிலுவையிலிருந்த சம்பள பாக்கிகளும் கைக்கு கிடைக்கும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

அரசியல்
பெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை தடைகளுக்குப் பின்பே காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகளிலும் இடையூறுகளை சந்திக்க நேரிடும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய சற்றே பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்களும் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகளை பெற முடியும். கடன்கள் குறையும். பொருட்களை கையாலுவதில் கவனம் செலுத்துவது நல்லது. 

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக செயல்பட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் குரு பெயர்ச்சிக்குப்பின் தாராள தனவரவு உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.

மாணவ மானவியர்
கல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை போன்றவை ஏற்பட்டாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியரிடம் நற்பெயரை பெறுவீர்கள்.


அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் : 1,2,3,9
நிறம் ; வெள்ளை, சிவப்பு
கிழமை ; ஞாயிறு, திங்கள்
கல் ; மாணிக்கம்
திசை ; கிழக்கு
தெய்வம் ; சிவன்

பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு ஆடி 18ஆம் தேதி வரை (2.8.2016) சாதகமற்று சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருவுக்கு பரிகாரம் செய்வது தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி மஞ்சள் நிற பூக்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு ஜென்ம ராசியிலும் கேது 7ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் அம்மன் வழிபாடுகள் மேற்கொள்வது தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

No comments: