Rasi palangal

Monday, April 11, 2016

துலாம் துர்முகி வருட பலன்கள் 2016 - 2017


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology. மலேசியா வருகை
தமிழக பிரபல சோதிடர்
திரு முருகுஇராசேந்திரன் அவரின் மகன்
தமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்
விஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.
அவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார்.
மலேசியாவில் கோலாலம்பூர்,
தங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 13 வரை
பாா்க்கும் நேரம் காலை 10.00 முதல் மாலை 08.00 வரை
ஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே

நேரில் தொடர்பு கொள்ளலாம்
Murugubalamurugan
C/O Tamil malar Daily
18 Jalan Ipoh Kecil
Off Jalan Ipoh
50350 Kuala lumbur
cell- - 0167642631

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் உள்ளது கண்டு மகிழுங்கள் )

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

துலாம் துர்முகி வருட பலன்கள் 2016 - 2017
; சித்திரை 3,4ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதங்கள்

எதிலும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட துலா ராசி நேயர்களே! உங்களுக்கு என் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த துர்முகி வருடத்தில் உங்களுக்கு ஏழரை சனியில் பாத சனி தொடருவதால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் உண்டாகும் என்றாலும் குரு ஆடி மாதம் வரை லாபஸ்தானமான 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். ராகுவும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் முன்னேற்றங்கள் உண்டாவதுடன் எதையும் எதிர்கொள்ள கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத உயர்வுகளை அடைவார்கள். தொழில் வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் குறைந்து லாபங்கள் பெருகும். பல புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவீர்கள். வரும் ஆடி 18ஆம் தேதி முதல் (02.08.2016) குரு பகவான் விரய ஸ்தானமான 12ம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாவதோடு உற்றார் உறவினர்களால் மன சஞ்சலங்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். கேது 5ல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் வீண் மன சஞ்சலங்கள் பூர்வீக சொத்துகளால் லாபமற்ற நிலைகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிப்பதோடு உடல் நிலையிலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். 

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரண கோளாறு, கை கால் அசதி போன்றவை உண்டாகினாலும், அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் வீண் விரயங்கள், மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.

குடும்பம் பொருளாதாரம்
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் வம்பு வழக்குகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் ஆதாயங்களை அடைய முடியும்.

கொடுக்கல் வாங்கல்
பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையியிருக்கும். சில நேரங்களில் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பணவிஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும்.

தொழில் வியாபாரம்
தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஆதாயத்தையும் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளையும் தொழிலாயர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.

உத்தியோகம்
பணியில் தேவையற்ற குழப்பங்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் இவற்றால் மன உளைச்சல்கள் போன்றவை ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து முன்னேற கூடிய ஆற்றல் உண்டாகும். எல்லா பிரச்சனைகளும் படிப்படியாக விலகும். எதிர் பார்க்கும் ஊதிய உயர்வுகள், இடமாற்றங்கள் போன்றவை கிடைக்கப் பெறும். புதிய வேலைத் தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

அரசியல்
கட்சிப் பணிகளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டிய  சூழ்நிலைகள் ஏற்பட்டு வீண் விரயங்கள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை சரளமாக இருப்பதால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எதிர்பாராத உயர் பதவிகளும் கிடைக்கும். பெயர், புகழ் உயரும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் நீர்வரத்து குறையும் என்றாலும் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது லாபத்தினை பெற்று விடுவீர்கள். புதிய பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் மண வாழ்க்கை சிறப்பாக அமையும். பொன், பொருள் சேரும். பொருளாதாரம் உயரும்.

மாணவ மானவியர்
கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டிய காலமிது. மந்த நிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்பட்டாலும் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைய முடியும். பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற நட்புக்களால் வீண் பழிச் சொற்களும், அவமான படக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும்.


அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்  4,5,6,7,8 
நிறம் வெள்ளை, பச்சை
கிழமை  வெள்ளி, புதன்
திசை  தென் கிழக்கு
கல்  வைரம்
தெய்வம்  லட்சுமி

No comments: