Rasi palangal

Wednesday, April 13, 2016

விருச்சிகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology. மலேசியா வருகை
தமிழக பிரபல சோதிடர்
திரு முருகுஇராசேந்திரன் அவரின் மகன்
தமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்
விஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.
அவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை
மலேசியாவில்
தங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 19 வரை
பாா்க்கும் நேரம் காலை 10.00 முதல் மாலை 08.00 வரை
ஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே

நேரில் தொடர்பு கொள்ளலாம்

cell- - 0167642631

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் உள்ளது கண்டு மகிழுங்கள் )

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


விருச்சிகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017
; விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை 

நகைச்சுவையுணர்வும், சிறந்த பேச்சாற்றலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த துர்துகி ஆண்டில் ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. இதுமட்டுமின்றி சுக ஸ்தானமான 4இல் கேதுவும், 10இல் ராகுவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எல்லா இருந்தும் அனுபவிக்க முடியாத அளவிற்கு அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். தொடக்கத்தில் குருவும் 10ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படும். வரும் ஆடி 18ஆம் தேதி முதல் (02.08.2016) குரு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்களும், புத்திர வழியில் மகிழ்ச்சித் தர கூடிய சம்பவங்களும் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்களும் சேரும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே அலைச்சல்கள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிட்டும்.  உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை தடையின்றி அடைவார்கள்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய காலமிது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். கை கால் மூட்டுகளில் வலி, நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவையும் உண்டாகும். எல்லா இருந்தும் அனுபவிக்க இயலாமல் போகும். குடும்பத்திலுள்ளவர்களும் நிம்மதியின்றி இருப்பார்கள்.

குடும்பம் பொருளாதாரம்
திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தொடக்கத்தில் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம் போன்றவற்றால் வீண் செலவுகள் ஏற்படும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க தடையை கொடுக்கும். சுக வாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.  உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. 

கொடுக்கல் வாங்கல்
தொடக்கத்தில் பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால்  கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பின்பு பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்கு பிரச்சனைகளில் இழுபறியான நிலையே நீடிக்கும். எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்தாலும் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.

உத்தியோகம்
பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளிக்க முடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். எதிர்பார்க்கும் சம்பள உயர்வுகளும் கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

அரசியல்
பெயர் புகழ் மங்க கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது. மக்களின் தேவையறிந்து செயல்படுவது நல்லது. கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும் அதற்கேற்ற வருவாய்களும் கிட்டும். பணவரவுகளுக்கு பஞ்சம்  இருக்காது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் சற்று அதிகரிக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல்  சுமாராகத் இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும்.  புழு பூச்சிகளின் தொல்லைகளால் நிறைய வீண் செலவுகள் ஏற்படும். தகுந்த நேரத்திற்கு வேலையாட்கள் கிடைக்காததால் அறுவடையில் தாமதம் உண்டாகும் என்றாலும் ஒரளவுக்கு எதையும் சமாளித்து எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும். அரசு வழியிலும் ஆதரவுகள் கிட்டும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் அக்கரை எடுத்துக் கொண்டால் மட்டுமே அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிக்க முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாவதோடு கடன்களும் குறையும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். கணவனிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. 

மாணவ மானவியர்
கல்வியில் சற்று ஈடுபாடற்ற நிலை ஞாபகமறதி, உடல் நிலை பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். கல்விக்காக சிலருக்கு அலைச்சல்கள் உண்டாகும். நல்ல நட்புக்களாக தேர்ந்தெடுத்து பழகுவது மூலம் அனுகூல பலனை அடையலாம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் : 1,2,3,9
நிறம் ; ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை ; செவ்வாய், வியாழன்
திசை ; தெற்கு
கல் ; பவளம்
தெய்வம் ; முருகன்

பரிகாரம்
குரு பகவான் ஆடி 18ஆம் தேதி வரை 10ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டைக் கடலை மாலை சாற்றி வழிபடவும். சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிக்கு பரிகாரம் செய்வது, ஆஞ்சனேயரை வழிபாடு செய்வது நல்லது. கேது 4ல் ராகு 10&ல் சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபடுவது, விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

No comments: