Wednesday, April 13, 2016

கும்பம் துர்முகி வருட பலன்கள் 2016-2017

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology. மலேசியா வருகை
தமிழக பிரபல சோதிடர்
திரு முருகுஇராசேந்திரன் அவரின் மகன்
தமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்
விஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.
அவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை
மலேசியாவில்
தங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 19 வரை
பாா்க்கும் நேரம் காலை 10.00 முதல் மாலை 08.00 வரை
ஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே

நேரில் தொடர்பு கொள்ளலாம்

cell- - 0167642631

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் 



உள்ளது கண்டு மகிழுங்கள் )

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


கும்பம் துர்முகி வருட பலன்கள் 2016-2017
; அவிட்டம் 3,4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதங்கள்
வெள்ளை உள்ளமும், நெறி தவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த துர்முகி ஆண்டில் உங்கள் ராசியாதிபதி சனி ஜீவன ஸ்தானமான 10ல் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று வேலைபளு அதிகரிப்பதுடன், எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சிறு சிறு போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும் என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். தொடக்கத்தில் குருபகவான் சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். பொருளாதார முன்னேற்றங்களால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலமானப் பலன்கள் ஏற்படும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். வரும் ஆடி 18ஆம் தேதி (02.08.2016) ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதுமட்டுமின்றி சர்ப கிரகமான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகளும் உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள், புத்திர வழியில் மனசஞ்சலங்கள் போன்றவற்றை எதிர் கொள்வீர்கள். தொழில் வியாபாரம்  செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர் பார்க்கும் உயர்வுகள் சற்ற தாமதப்படும். எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமானப் பலனை அடைய முடியும். 

உடல் ஆரோக்கியம்
உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள், சற்று மந்த நிலை, கைகால் அசதி போன்றவை ஏற்படும். அஜீரண கோளாறுகளும் உண்டாகும் என்றாலும் பெரிய அளவில் எந்தவித மருத்துவ செலவுகளும் ஏற்படாது. உடனே சரியாகி அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களால் மன கவலை உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரம்
குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் அமைவதில் சிக்கல் நிலவும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். சிலருக்கு பூமி, மனை போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய சொத்துக்கள் கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கல்
பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும் என்பதால் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. பணவிஷயத்தில் முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவற்றிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். 

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் சிறு சிறு போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றால் வரவேண்டிய வாய்ப்புகளில் தடை தாமதங்கள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து அடைய வெண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் ஓரளவுக்கு அனுகூலங்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. 

உத்தியோகம்
பணியில் சற்று வேலைபளு அதிகரிப்பதுடன், எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினை தற்போது பயன்படுத்தி கொள்வது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமலிருப்பது நல்லது.

அரசியல்
கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும், கௌரவம் புகழ் யாவும் சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். பண வரவுகள் சுமாராகத்தான் இருக்கும். சிலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் ஒரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிரை காப்பாற்ற அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கப் பெற்று அனைத்தையும் சரி செய்ய முடியும். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். தொழிலாளர்களின் உதவியும் கிடைக்கும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணவரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட கூடும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.  திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகள் உண்டாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்த நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

மாணவ மானவியர்
கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அடைய நினைத்த மதிப்பெண்களை அடைந்து விட முடியும். கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் ஆதரவுகளும் கிடைக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் :  5,6,8
நிறம் ; நீலம், பச்சை
கிழமை : புதன், சனி
கல் ; நீலக்கல்
திசை ; மேற்கு
தெய்வம் ; ஐயப்பன்

பரிகாரம்
சனி பகவான் 10ல் சஞ்சரிப்பதால் சனிக்கு பரிகாரங்கள் செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சனி ப்ரீதியாக  ஆஞ்சனேயரை வழிபடுவதும் உத்தமம். குரு பகவான் வரும் ஆடி 18ஆம் தேதி முதல் (02.08.2016) 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டக்கடலை மாலையும் சாற்றுவது நல்லது. 

No comments: