Rasi palangal

Wednesday, April 6, 2016

கடகம் துர்முகி வருட பலன்கள் 2016 2017


ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology. மலேசியா வருகை
தமிழக பிரபல சோதிடர்
திரு முருகுஇராசேந்திரன் அவரின் மகன்
தமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்
விஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.
அவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார்.
மலேசியாவில் கோலாலம்பூர்,
தங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 12 வரை
பாா்க்கும் நேரம் காலை 10.00 முதல் மாலை 08.00 வரை
ஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே

நேரில் தொடர்பு கொள்ளலாம்
Murugubalamurugan
C/O Tamil malar Daily
18 Jalan Ipoh Kecil
Off Jalan Ipoh
50350 Kuala lumbur
cell- - 0167642631

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் உள்ளது கண்டு மகிழுங்கள் )

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

கடகம் துர்முகி வருட பலன்கள் 2016   2017
; புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
உயர்ந்த லட்சியங்களை கொண்டவராகவும் விடா முயற்சியுடன் செயல்படுவராகவும் விளங்கும் கடக ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த துர்முகி ஆண்டில் குருபகவான் ஆடி18ஆம் தேதி வரை (02.08.2016) 2ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகள் தாராளமாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். பூர்வீக சொத்துக்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். ஜென்ம ராசிக்கு 2ல் ராகுவும் 8ல் கேதுவும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இதுமட்டுமின்றி உங்கள் ஜென்ம ராசிக்கு 5ல் சனி சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்துகளால் வீண் விரயங்களும், புத்திர வழியில் மனநிம்மதி குறைவும் உண்டாகும். வரும் ஆடி 18ஆம் தேதி முதல் (02.08.2016) குரு 3ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகளில் சற்றே நெருக்கடிகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை குறைத்து கொள்ள முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும்.  கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மனநிம்மதியை அளிக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகளுக்குப்  பின்பே அனுகூலம் உண்டாகும். எந்தவொரு விஷயத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதே உத்தமம். 

உடல் ஆரோக்கிய   
உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்திலுள்ளவர்களால் உண்டாக கூடிய மருத்துவ செலவுகளாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து விடக் கூடிய வலிமையும் உண்டாகும். சிலருக்கு வயிறு பாதிப்பு ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரம்
ஆண்டின் முற்பாதியில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நற்பலனை தரும்.

கொடுக்கல் வாங்கல்
பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். குரு பெயர்ச்சிக்குப்பின் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாக கூடும் என்பதால் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இழுபறியான நிலை நீடிக்கும்.

தொழில் வியாபாரிகள்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று நிதானித்து செயல் படவும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் ஆதாயங்கள் தாமதப்படும்.

உத்தியோகம்
பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் இடமாற்றங்கள் யாவும் கிடைக்கப் பெறுவதுடன் நிம்மதியாக செயல்பட முடியும் என்றாலும் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் வீண் பிரச்சனைகளிலிருந்து தப்பித்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது சிறப்பு.

அரசியல்
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்களின் ஆதரவுகளைப் பெற முடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகளையும் செய்ய வேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிப்பதோடு உடல் நிலையும் சோர்வடையும். பெயர் புகழை தக்க வைத்துக் கொள்ள அரும்பாடுபட வேண்டியிருக்கும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய உழைக்க வேண்டி வரும். எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கா விட்டாலும், போட்ட முதலீட்டிற்கு பங்கம் ஏற்படாது. உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, பங்காளிகளிடையே விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடும்.

பெண்கள்
உடல் நிலையில் அதிக அக்கரை எடுத்துக் கொண்டால் மட்டுமே அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப்பல முறை சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். 

மாணவ மானவியர்
கல்வியில் சற்று மந்த நிலை ஞாபக மறதி போன்றவை ஏற்பட்டாலும் வரவேண்டிய மதிப்பெண்கள் தடையின்றி வரும். தேவையற்ற பொழுது போக்குகளையும், நட்பு வட்டாரங்களையும் தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தடை தாமதங்களுக்கு பின் கிடைக்கும்.


அதிர்ஷ்டம் அளிப்பவை 
எண்         1,2,3,9 
நிறம்       வெள்ளை, சிவப்பு
கிழமை     திங்கள் வியாழன்
கல்   முத்து
திசை  வடகிழக்கு 
தெய்வம் வெங்கடாசலபதி

பரிகாரம்;
கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு இந்த துர்முகி வருடத்தில் ஆடி 18ஆம் தேதி முதல் (2.8.2016) குருபகவான் 3ல் சஞ்சரிக்க இருப்பதால் குருப்ரீதி, தட்சிணா மூர்த்திக்கு பரிகாரங்கள் செய்வது நல்லது.  சனி 5ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிக்குரிய பரிகாரங்களை செய்வது எள் எண்ணெயில் தீபமேற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது. சர்ப கிரகங்களான ராகு கேது 2,8ல் சஞ்சரிப்பதால் அம்மன் வழிபாடு விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

No comments: