Rasi palangal

Wednesday, April 13, 2016

மீனம் துர்முகி வருட பலன்கள் 2016-2017

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology. மலேசியா வருகை
தமிழக பிரபல சோதிடர்
திரு முருகுஇராசேந்திரன் அவரின் மகன்
தமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்
விஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.
அவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை
மலேசியாவில்
தங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 19 வரை
பாா்க்கும் நேரம் காலை 10.00 முதல் மாலை 08.00 வரை
ஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே

நேரில் தொடர்பு கொள்ளலாம்

cell- - 0167642631

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் உள்ளது கண்டு மகிழுங்கள் )

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

மீனம் துர்முகி வருட பலன்கள் 2016-2017
; பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அனைவரிடமும் கள்ளம் கபடமின்றி வெள்ளை உள்ளத்தோடு பழகும் மீன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்ட நல்வாழ்த்துக்கள். இந்த துர்முகி ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் 6ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் சற்று நெருக்கடிகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது என்றாலும் ராகு 6ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். வரும் ஆடி மாதம் 18ஆம் தேதி முதல் (02.08.2016) குரு சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சனியும் 9அம் வீட்டில் சஞ்சரிப்பது ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்திலுள்ள எதிர்ப்புகள் விலகி ஓடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி, வாகனங்கள் போன்றவற்றை வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் புதிய யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும், எதிர்பார்க்கும் உயர் பதவிகளும் கிடைக்கப் பெறும். 

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்படக் கூடிய ஆற்றலும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் மறையும். அனைவரும் உங்களிடம் அன்பாக நடத்தும் கொள்வதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். சுக வாழ்க்கை அமையும்.

குடும்ப பொருளாதாரம்
திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்யோன்யமும் அதிகரிக்கும். புத்திர பாக்கியமும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். சொந்த பூமி, மனை போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த சுபசெய்தியும் உங்களுக்கு வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

கொடுக்கல் வாங்கல்
பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண்பீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். சிலருக்குள்ள கடன் பிரச்சனைகளும் தீர்வடையும். இதுவரை இருந்து வந்த வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பாராத தன வரவுகள் தக்க சமயத்தில் வந்தடையும். சேமிப்பும் பெருகும்.

தொழில் வியாபாரம்
பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். புதிய கிளைகளையும் நிறுவி மேன்மையினை அடைவீர்கள்.

உத்தியோகம்
பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக் கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகளால் வேலை பளுவும் குறையும்.

அரசியல்
பெயர் புகழ் உயரக் கூடிய காலமாகும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக சிறு சிறு வீண் செலவுகளை செய்ய வேண்டியிருந்தாலும் பொருளாதார நிலை உயர்வாகவே இருக்கும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விடுவீர்கள். புதிய நவீன முறைகளை பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவீர்கள். வேலையாட்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கை கூடும். சொந்த பூமி, மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.


பெண்கள்
உடல் நிலை மிகவும் அற்புதமாக அமையும். அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக செயல் பட முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அதி நவீனப் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் வந்து சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். மகிழ்ச்சி நிலவும்.

மாணவ மானவியர்
மாணவ மாணவிகள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிப் பரிசுகளை தட்டிக் செல்வீர்கள். சிலருக்கு உயர்கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் ; 1,2,3,9,10,
நிறம் ; மஞ்சள், சிவப்பு
கிழமை ; வியாழன், ஞாயிறு
கல் ; புஷ்ப ராகம்
திசை ; வடகிழக்கு
தெய்வம் ; தட்சிணாமூர்த்தி

பரிகாரம்
குரு பகவான் ஆடி 18ஆம் தேதி வரை 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குருப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை தோறும் கொண்டக்கடலை மாலை சாற்றி நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. சர்ப்ப கிரகமான கேது 12ல் சஞ்சாரம் செய்வதால் தினமும் விநாயகரை வழிபாட செய்வது நல்லது.

No comments: