Rasi palangal

Wednesday, April 13, 2016

மகரம் துர்முகி வருட பலன்கள் 2016-2017

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology. மலேசியா வருகை
தமிழக பிரபல சோதிடர்
திரு முருகுஇராசேந்திரன் அவரின் மகன்
தமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்
விஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.
அவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை
மலேசியாவில்
தங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 19 வரை
பாா்க்கும் நேரம் காலை 10.00 முதல் மாலை 08.00 வரை
ஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே

நேரில் தொடர்பு கொள்ளலாம்

cell- - 0167642631

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் உள்ளது கண்டு மகிழுங்கள் )

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

மகரம் துர்முகி வருட பலன்கள் 2016-2017
; உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதங்கள்
ஆக்கும் சக்தியும், அழிவதை தடுக்கும் சக்தியும் கொண்ட மகர ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த துர்முகி ஆண்டில் உங்கள் ராசியாதிபதி சனி லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் நல்லதொரு அமைப்பாகும்.  இதனால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். சொந்த பூமி, மனை, வண்டி வாகனங்கள் யாவும் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் லாபம் கிட்டும். குரு தொடக்கத்தில் அஷ்டம ஸ்தாமான 8ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும், வரும் ஆடி 18ஆம் தேதி முதல் (02.08.2016) பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால்  திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக அமையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும்.  கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். 2ல் கேது 8ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமாக இருப்பது, உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. 

உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலிருந்த மருத்துவச் செலவுகளும் படிப்படியாக குறையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு அழகான புத்திர பாக்கியம் உண்டாகும். பெரியவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள் மனதில் நிம்மதி ஏற்படும்.

குடும்பம் பொருளாதாரம்
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுப காரியங்களும் தடபுடலாக நடைபெறும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெற்று மனநிறைவு உண்டாகும். பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் உங்களுக்கே சாதகப் பலன் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கல்
பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கல் வாங்கலும் நல்ல நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் எந்த பிரச்சினைகளுமின்றி வசூலாவதால் பணம் புரளும். பெரிய மனிதர்களின் நட்பும், வெளிவட்டாரத் தொடர்புகளும் அனுகூலப் பலன்களை உண்டாக்கும். சேமிப்புகள் பெருகும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எடுக்கும்  முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளாலும் அனுகூலம் ஏற்படும். அரசு வழியில் கிடைக்க வேண்டிய உதவிகளும் தடையின்றி கிடைக்கும்.

உத்தியோகம்
பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உத்தியோகத்தில் வரவேண்டிய ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி வந்து சேரும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் சிறப்பாக இருப்பதால் வேலைப் பளு குறைவதுடன் மனதில் உற்சாகமும் பிறக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைப்பதால் குடும்பத்தோடு சேர முடியும்.

அரசியல்
சமுதாயத்தில் உங்களின் பெயர் புகழ் உயரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி அனைவரிடமும் நல்ல பெயரை எடுப்பீர்கள். மக்களின் ஆதரவால் எல்லா வகையிலும் உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடனிருப்பவர்களிடம் பேச்சில் நிதானம் தேவை.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். வினைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் பொருளாதார நிலை உயர்வடையும். புதிய பூமி மனை போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். கால்நடைகளாலும் லாபம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். சிலருக்கு அழகான புத்திரபாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துகளாலும் லாபம் கிட்டும். நினைத்த காரியங்களை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் பொருளாதார நிலை உயரும். கடன்களும் குறையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிட்டும்.

மாணவ மானவியர்
கல்வியில் திறம்படச் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். நல்ல நட்புகளால் பலவகையிலும் அனுகூலங்களைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்குச் செல்வீர்கள். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும்.


அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் ; 5,6,7,8,
நிறம் ; நீலம், வெள்ளை
கிழமை ; புதன், வெள்ளி
கல் ; நீலக்கல்
திசை ; மேற்கு
தெய்வம் ; ஐயப்பன்

பரிகாரம்


குருபகவான் ஆடி 18ஆம் தேதி வரை 8ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் வியாழக்கிழமைதோறும் விரதமிருந்து தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது. சர்ப கிரகங்களான கேது 2லும், ராகு 8லும் சஞ்சாரம் செய்வதால் ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

No comments: