Rasi palangal

Sunday, April 3, 2016

மேஷம் துர்முகி வருட பலன்கள் 2016-2017ஜோதிட மாமணி, 

முனைவர் முருகு பால முருகன்

 மலேசியா விஜயம்


தமிழக பிரபல சோதிடர் 

திரு முருகுஇராசேந்திரன் அவரின்   மகன்

தமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்

விஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி, 

முனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.

அவர்கள்  குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார். 
தங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 19 வரை 
மலேசியாவில் கோலாலம்பூர், பினாங் 

ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்
ஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே
நேரில் தொடர்பு கொள்ளலாம்
cell- - 0167642631காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் உள்ளது கண்டு மகிழுங்கள் )

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.comமேஷம் ---; துர்முகி வருட பலன்கள் 2016&2017

நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த துர்முகி வருடம் குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5ல் வரும் ஆடி மாதம் 18ஆம் தேதி வரை (02.08.2016) சஞ்சாரம் செய்யவிருப்பதாலும், கேது லாப ஸ்தானமான 11ல் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். குழந்தை பாக்கியமும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் ஏற்படும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த கெடுபிடிகள் வம்பு வழக்குகள் யாவும் விலகும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டி பொறாமைகள் சற்றே குறையும். எந்தவொரு விஷயங்களிலும் கவனமுடன் செயல்பட்டால் எதையும் எதிர் கொண்டு வெற்றிப் பெறக்கூடிய வலிமையை பெறுவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும். பணவரவுகள் தேவைகேற்றபடியிருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் கடனில்லாத கண்ணியமான வாழ்க்கையை வாழ்வீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தினை அடைய முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப்பலன்களை அடைய முடியும் என்றாலும் உங்கள் ஜென்ம ராசிக்கு 8இல் சனி சஞ்சரிப்பதால் அஷ்டம சனி நடைபெறுகிறது இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பயணங்களில் கவனமுடன் இருப்பது, உணவு விஷயத்தில் அக்கரை எடுத்த கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இட மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் எதிர் பார்க்கும் பதவி உயர்வுகள் கிட்டும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம்.

உடல் ஆரோக்கியம்      
உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்ட படியே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட முடியாத அளவிற்கு மனக்குழப்பங்களும், நிம்மதி குறைவும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைக்க முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை  
குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடப்பதின் மூலம் பல நல்ல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள்.

கொடுக்கல் வாங்கல்          
பண வரவுகள் சரளமாக இருக்கும் என்றாலும் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிக்க முடியும் என்றாலும் சில நேரங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேர்ந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகத் தானிருக்கும்.

தொழில் வியாபாம்       
கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்து செல்வதும் தட்டி கொடுத்து வேலை வாங்குவதும் நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள். எதிலும் எதிர் நீச்சல் போட்டு முன்னேறி விடக் கூடிய ஆற்றல் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

உத்தியோகம்      
பணியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர் பார்த்த அளவிற்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும், கிடைப்பதை பயன் படுத்திக் கொள்வது நல்லது. யாருடைய விஷயங்களிலும் தலையீடு செய்யாமல் இருந்தால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

அரசியல்         
மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல் படுவது. தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காதிருப்பது நல்லது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சற்று கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் சொன்னதை செய்து முடிப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

விவசாயிகள்      
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முடிந்த வரை தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாதிருப்பது நல்லது.

பெண்கள்  
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் முடியும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள். முடிந்த வரை குடும்ப பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது மிகவும் நல்லது.

மாணவ மானவியர்     
கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அரசு வழியில் ஒரளவுக்கு உதவிகள் கிட்டும்.

அதிர்ஷ்டம் அளிப்பை

எண்        & 1,2,3,9    
நிறம்        & ஆழ் சிவப்பு
கிழமை      & செவ்வாய்
கல்         & பவளம்
திசை        & தெற்கு
தெய்வம்     & முருகன்

No comments: