Rasi palangal

Monday, April 11, 2016

கன்னி துர்முகி வருட பலன்கள் 2016&2017
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology. மலேசியா வருகை
தமிழக பிரபல சோதிடர்
திரு முருகுஇராசேந்திரன் அவரின் மகன்
தமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்
விஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.
அவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை தரவுள்ளார்.
மலேசியாவில் கோலாலம்பூர்,
தங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 12 வரை
பாா்க்கும் நேரம் காலை 10.00 முதல் மாலை 08.00 வரை
ஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே

நேரில் தொடர்பு கொள்ளலாம்
Murugubalamurugan
C/O Tamil malar Daily
18 Jalan Ipoh Kecil
Off Jalan Ipoh
50350 Kuala lumbur
cell- - 0167642631

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் உள்ளது கண்டு மகிழுங்கள் )


கன்னி துர்முகி வருட பலன்கள் 2016&2017
உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2,ம் பாதங்கள்
எப்பொழுதும் குஷியான மனநிலையுடன் செயல்படுபவராக விளங்கும் கன்னி ராசி அன்பர்களே!  உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த துர்முகி ஆண்டு நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். ஜென்ம ராசிக்கு 3ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதும், 6ல் கேது சஞ்சரிப்பதும் சாதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், எதிலும் துணிந்து செயல்படக் கூடிய ஆற்றலும் உண்டாகும். எல்லா வகையிலும் லாபங்கள் பெருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகள் நிலவினாலும் தக்க சமயத்தில் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கணவன் --மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். ஆடை ஆபரணமும் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். குருபகவான் தொடக்கத்தில் விரய ஸ்தானமான 12ல் சஞ்சரிப்பதும் பின்பு வரும் ஆடி 18ஆம் தேதி முதல் (02.08.2016) முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவிருப்பதும் சற்ற சாதமற்ற அமைப்பு என்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது.  உடல் ஆரோக்கியத்திலும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணகோளாறு போன்ற பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை எற்படுத்தும் உணவு விஷயத்தில் கவனமுடன் செயல்பட்டால் உடல் நிலை சிறப்பாக இருக்கும்.

உடல் ஆரோக்கியம்;
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை, அஜீரணகோளாறு போன்ற பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை எற்படுத்தும் உணவு விஷயத்தில் கவனமுடன் செயல்பட்டால் உடல் நிலை சிறப்பாக அமையும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கும் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். 

குடும்பம் பொருளாதாரம்
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் சில தடைகளுக்குபின் கை கூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கணவன்  மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமைப் பாராட்டுவார்கள். சொந்த பூமி மனை வாங்கக் கூடிய யோகங்களும் உண்டாகும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

கொடுக்கல் வாங்கல்
பணம் வரவுகள் சிறப்பாக இருந்தாலும் குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். கடன்கள் படிப்படியாக குறையும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் வெற்றிக் கிட்டும். பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதிகள் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

தொழில் வியாபாரம்
புதிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய நவீன யுக்திகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகளை சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். நல்ல வேலையாட்களும் கிடைப்பார்கள்.

உத்தியோகம்
பணியில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும், உத்தியோக உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். செய்யும் பணிக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனநிம்மதியுடன் பணிபுரிய முடியும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் மூலம் வேலைபளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பமும் தடையின்றி நிறைவேறும். எதிர்பாராத இடமாற்றமும் கிட்டும்.

அரசியல்
பெயர் புகழ் யாவும் உயரும். சமுதாயத்தில் நல்லதொரு இடத்தினைப் பிடிக்க முடியும். வரவேண்டிய வாய்ப்புகள், மாண்புமிகுப் பதவிகள் யாவும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கும் சென்று வரக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். 

விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியிலும் பல மானிய உதவிகள் கிடைக்கப் பெறும். உழைப்பிற்கேற்றப் பலன்களை அடைவதால் பரம திருப்தி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளை கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

பெண்கள்
உடல் நிலையில் சற்ற கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தில் செலவுகளையும் தாராளமாக செய்ய முடியும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்.

மாணவ மானவியர்
மாணவ மாணவிகள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைய முடியும். விளையாட்டுப் போட்டிகளிலும் பரிசுகளை பெற்று பாராட்டுதல்களை அடைவீர்கள். கல்விக்காக பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளின் மூலம் அனுகூலம் கிட்டும்.


அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் & 4,5,6,7,8
நிறம் & பச்சை, நீலம் 
கிழமை & புதன், சனி
கல் & மரகத பச்சை 
திசை & வடக்கு
தெய்வம்& ஸ்ரீ விஷ்ணு

பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருவுக்கு பரிகாரம் செய்வது தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை சாற்றி மஞ்சள் நிற பூக்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வது உத்தமம். ராகு 12ல் சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் அம்மன் வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.

No comments: