Rasi palangal

Wednesday, April 13, 2016

தனுசு துர்முகி வருட பலன்கள் 2016&2017

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology. மலேசியா வருகை
தமிழக பிரபல சோதிடர்
திரு முருகுஇராசேந்திரன் அவரின் மகன்
தமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்
விஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.
அவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை
மலேசியாவில்
தங்கும் நாட்கள் ஏப்ரல் 8ம் தேதி முதல் 19 வரை
பாா்க்கும் நேரம் காலை 10.00 முதல் மாலை 08.00 வரை
ஜோதிட ஆலோசனை கட்டனம் 60 வெள்ளி மட்டுமே

நேரில் தொடர்பு கொள்ளலாம்

cell- - 0167642631

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற புதிய நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் உள்ளது கண்டு மகிழுங்கள் )

ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

தனுசு துர்முகி வருட பலன்கள் 2016&2017
; மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

கள்ளம் கபடமின்றி உண்மையை மட்டுமே பேசும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த துர்முகி ஆண்டு உங்களுக்கு சற்று ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த தாகவே இருக்கும். சனி பகவான் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12ல் சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் விரய சனி நடைபெறுகிறது. இதனால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் எதிர்பாராத வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல் டென்ஷன், போன்றவை உண்டாகும். என்றாலும் கேது 3ல் சஞ்சரிப்பதாலும், உங்கள் ராசியாதிபதி குரு வரும் ஆடி மாதம் 18ஆம் தேதி வரை பாக்கிய ஸ்தானமான 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதாலும் குடும்பத்திலும் சுபிட்சமான நிலையே இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பூமி, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். பல வகையான பொது நலக் காரியங்களுக்கான செலவுகள் செய்வீர்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை தடையின்றிப் பெற முடியும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வரும் ஆடி 18ஆம் தேதி முதல் (02.08.2016) குரு 10ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடை தாமதங்கள் ஏற்படும். கேது 3ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எந்த பிரச்சனைகளையும் சமாளிக்கும் அளவிற்கு துணிவும் தைரியமும் கொடுக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். எதிர்பாராத சிறு சிறு உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா வித தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களால் உண்டாகக் கூடிய மருத்துவ செலவுகளை சமாளிக்க கடன் வாங்கவேண்டியிருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாவதால் மனநிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதாரம்
கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பூமி, நிலம், வண்டி, வாகனம் போன்றவற்றால் சிறு சிறு விரயங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்றப் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் அனுகூலமாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

கொடுக்கல் வாங்கல்
பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்க கூடிய அளவிற்கு பலமும் வலிமையும் கூடும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது நிதானித்து செயல் படவும். பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யக் கூடும் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. புதிய ஒப்பந்தங்களில் கையழுத்திடும் போது கூட்டாளிகளை கலந்தாலோசித்து செய்யவும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் சிறு சிறு அனுகூலங்கள் ஏற்பட்டாலும் நிறைய அலைச்சல்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். உடல் நிலை சோர்வடையும்.

உத்தியோகம்
பணியில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக் கொண்டால் வேலை பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும், உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரியக் கூடிய சூழ்நிலைகளும் ஏற்படும். உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும்.

அரசியல்
பெயர், புகழ் மங்கக் கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது கட்சிப் பணிகளுக்காக நிறையப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கும் மற்ற கட்சிகளின் ஆதரவுக் கிடைக்காது. வீண் விரயங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல்கள் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைப் பொருளுக்கேற்ற விலையினைப் பெற இயலாது. பட்டபாட்டிற்குப் பலலின்றிப் போகும். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

பெண்கள்
உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகி அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சேமிக்க முடியாது.

மாணவ மானவியர்
கல்வியில் சுமாரான நிலையே இருக்கும். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுப்பதில் சற்று சிரமம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு திருப்தியளிப்பதாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளின் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.


அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் ; 1,2,3,9
நிறம் ; மஞ்சள், பச்சை
கிழமை ; திங்கள், வியாழன்
கல் ; புஷ்ப ராகம்
திசை ; வடகிழக்கு
தெய்வம் ; தட்சிணாமூர்த்தி

பரிகாரம்
ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது, சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபடுவது உத்தமம், ராசியாதிபதி குரு ஆடி 18ஆம் தேதி முதல் ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீப மேற்றுவது நல்லது. 

No comments: