Thursday, April 28, 2016

6ஆம் இடமும் எதிரிகளை வெல்லும் திடமும்

மாபெரும் வெற்றி - 16 லட்சத்தை கடந்த வலை பக்கம்.

2011 ஜுலையில் தொடங்கிய எனது வலை பக்கத்தில் ஜோதிட செய்திகளை மட்டும் வெளியிட்டு வருகிறேன்.தற்போது 1000 பதிவுகளை அளித்துள்ளேன். எனது வலை பக்கத்திற்கு தேனை மொய்க்கும் வண்டுகளாக சிறகடித்து வந்தமர்ந்த 16 லட்சத்திற்கும் மேலான அன்பு வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். எனது பதிவுகளுக்கு மதிப்பளிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் மேலும் பல சோதிட செய்திகளை தர காத்திருக்கிறேன். ஆதலால் எனது வலை பக்கத்திற்கு தொடர்ந்து வருகை தரத் தவறாதீர்கள்.

                                                                       

காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  
 விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற  நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் 



உள்ளது கண்டு மகிழுங்கள் )


ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பால முருகன்
                          Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology  
No:19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


6ஆம் இடமும் எதிரிகளை வெல்லும் திடமும்
                                                   
வாழ்வில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் பிரச்சனையே வாழ்க்கையாகிவிடக் கூடாது. விரோதியை விட எதிரியே மேல் என்பார்கள். நண்பர்களை கூட தள்ளி வைத்து பார்க்கலாம். ஆனால் விரோதியையும், எதிரியையும் நம் பார்வையிலேயே வைத்திருப்பது தான் நல்லது. அப்பொழுது தான் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் ஒர் எதிரி இருக்கத் தான் செய்வான். சினிமாவில் ஹீரோ மட்டும் இருந்தால் அவன் எதனால் ஹீரோ என்று புரியாது. அதுவே உடன் ஒரு வில்லன் இருந்தால் தான் அந்த ஹீரோவின் பலம் என்னவென்று மக்களுக்கு புரியும். நம்மை சுற்றி எல்லோருமே நல்லவர்களாக இருந்து விட்டால்  நாம் வாழும் வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். நம் வாழ்வில் எதிரிகளும் விரோதிகளும் இருப்பதே ஆரோக்கியமான விஷயம்.
அப்பொழுது தான் போட்டிகளும் பொறாமைகளும் வளரும். எந்த விதத்தில் திட்டம் தீட்டினால் சரியான பாதையில் செல்ல முடியும். வாழ்வில் உயர்வடைய முடியும். எதிரிகளை வெல்லும் ஆயுதம் எது என்பதை நம்மால் நன்றாக உணர முடியும் நன்மையும் தீமையும் பிற தர வாரா என்பார்கள். எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றலும் வலிமையும், நாம் சந்திக்கும் பிரச்சனைகளிலிருந்து உருவாவதே.
ஆனால் சிலர் சந்தோஷம் வந்தால் துள்ளி குதிப்பார்கள். அதுவே பிரச்சனை என்று ஒன்று வந்து விட்டால் அதற்கு யார் காரணமோ அவர்களை நிந்திப்பார்கள். அதிலிருந்து மீள்வதற்கு என்ன வழி என்று ஆராயாமல் பிரச்சனை செய்தவர்களை பழித்து என்ன பலன், இன்றே வாழ்க்கை முடிந்துவிட்டதை போல சோகத்தில் மூழ்கி விடுவார்கள். இப்படி சோதனை மேல் சோதனைகளை சந்திப்பவர்கள் தங்களுடைய ஜெனன ஜாதகத்தை நல்ல ஜோதிடராக காண்பித்து ஏன் என்னை மட்டும் இந்த எதிரிகள் பாடாய் படுத்துகிறார்கள். எனக்கு இந்த அளவில் எதிர்ப்புகள் உருவாவதற்கு காரணம் என்ன? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல மற்றவர்களிடம் வளைந்து கொடுத்து வாழும் பண்பை வளர்ந்து கொள்ள வேண்டும்.
ஜோதிட ரீதியாக எதிர்ப்புகள் அதிகம் யாருக்கு ஏற்படுகிறது என ஆராய்ந்தோமானால் ஜென்ம லக்னத்திற்கு 6ஆம் அதிபதி பலம் பெற்று லக்னாதிபதி பலம் இழந்து காணப்பட்டால் நிறைய எதிர்ப்புகளையும் எதிரிகளையும் சந்திக்க நேரிடுகிறது. 6ஆம் இடம் தான் ஒருவரது வாழ்வில் ஏற்படக் கூடிய எதிர்ப்பு பற்றியும் அது யார் யாரால் உண்டாகும் என்பது பற்றியும் அறிய உதவுகிறது. 6ஆம் அதிபதி பலம் பெற்று லக்னாதிபதியும் பலம் பெற்றிருந்தாலும் 6ஆம் வீடு உபஜெய ஸ்தானம் என்பதால் 6ல் சனி, செவ்வாய், சூரியன், ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலும் எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய வலிமையும் வல்லமையும் சிறப்பாக இருக்கும். 6ம் வீட்டிற்கு குரு பார்வை இருந்தால் எதிர்ப்புகள் விலகி ஒடும்.
அதுவே 6ம் அதிபதி பலமிழந்திருந்து 6ஆம் வீட்டை சனி, செவ்வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தால் எதிரிகளை சமாளிப்பதற்கே வாழ்வில் நிறைய நாட்களை செலவிட வேண்டியிருக்கும். ஜென்ம லக்னாதிபதி பலமிழந்து  6ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் 6ஆம் வீட்டில் அமைந்திருந்தாலும் அவருக்கு எதிர்ப்பு வெளியிலிருந்து வரத் தேவையில்லை. அவர் செய்யும் செயல்களால் அவருக்கு அவரே  எதிரியாக இருந்து முன்னேற்ற தடைகளை ஏற்படுத்தி கொள்வார்.
ஜென்ம லக்னத்திற்கு 2ஆம் அதிபதி பலம் இழந்து 6ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலும் 6ஆம் அதிபதியின் வீட்டில் இருந்தாலும் குடும்பத்திலுள்ளவர்களாலேயே எதிர்ப்புகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலால் எதிர்ப்புகள், கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாத சூழ்நிலைகளால் வீண் விரோதங்கள் ஏற்படும்.
     3ம் அதிபதி பலமிழந்து 6ம் அதிபதியுடன் இணைந்தோ 6ம் வீட்டிலோ அமையப் பெற்றால் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுடன் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பலம் இழந்த செவ்வாய் 3,6க்கு அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றால் நிச்சயமாக உடன்பிறப்புகளின் எதிர்ப்பை பெறுவார். உடன் பிறந்தவர்களே இல்லை என்றாலும் பங்காளிகளுடனாவது பகைமை ஏற்பட்டு எதிர்ப்புகள் அதிகரிக்கும்.
     4ஆம் அதிபதி பலமிழந்து 6ஆம் அதிபதியுடன் இணைந்தோ, 6ஆம் வீட்டிலோ அமையப் பெற்றால் நெருங்கிய நண்பர்களே எதிரிகளாவார்கள். உடன் பலமிழந்த சந்திரனும் சேர்க்கைப் பெற்றால் தாய் மற்றும் தாய் வழியில் உள்ள உறவுகள் அனைத்தும் எதிராகவே செயல்படும்.
     ஜென்ம லக்னத்திற்கு 5ஆம் அதிபதி பலமிழந்து 6ஆம் வீட்டில் அமைந்தாலும் 6ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றாலும் பெற்ற பிள்ளைகளே எதிரிகளாக மாறுவார்கள்.
     களத்திர ஸ்தானமான 7ஆம் வீட்டை கூட்டுத் தொழில் ஸ்தானம் என்றும் கூறுவர். 7ஆம் அதிபதி 6ஆம் அதிபதியுடன் இணைந்தோ 6ஆம் வீட்டில் அமைந்தோ இருந்தால் கைபிடித்த மனைவியே (கணவனே) எதிரியாக மாறுவாள். உடன் சுக்கிரன் இருந்தால் மண வாழ்க்கையே நரகமாகிவிடும். அளவிற்கு மனைவி மற்றும் மனைவி வழி உறவுகள் எதிர்ப்பாக மாறும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளே எதிரிகளாக மாறுவார்கள்.
     தந்தை ஸ்தானமான 9ஆம் வீட்டின் அதிபதி பலமிழந்து 6ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் 6ஆம் அதிபதியின்  வீட்டில் இருந்தாலும் தந்தையிடமே பகைமை ஏற்படும். தந்தை வழி உறவிகளிடமும் சுமூகமான நிலை இருக்காது. அதிலும் பலமிழந்த 6,9க்கு அதிபதி களுடன் தந்ததை காரகன் சூரியனும் இணைந்திருந்தால் கண்டிப்பாக தந்தையே அந்த ஜாதகருக்கு விரோதியாக மாறுவார்.
     தொழில் ஸ்தானமான 10ஆம் வீட்டின் அதிபதி பலமிழந்து 6ல் இருந்தாலும்  6ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் செய்யும் தொழிலில் எதிர்ப்பு, தொழிலாளர்களிடம் பகைமை உண்டாகும். உத்தியோகஸ்தர்களாக  இருந்தால் சக ஊழியர்களின் எதிர்ப்பிற்கும் வீண் பழி சொற்களுக்கும் ஆளாக நேரிட்டு மனநிம்மதி குறையும். ஏன் வேலைக்கு செல்கிறோம் என்ற அளவிற்கு வெறுப்பு உண்டாகும்.
     அது போல 11ஆம் அதிபதி பலமிழந்து 6ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் 6ஆம் வீட்டில் இருந்தாலும் மூத்த உடன் பிறப்புகளுடன் பகை, நெருங்கிய உறவினர்களின் எதிர்ப்பு போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும். பொதுவாக ஜெனன ஜாதகத்தில் எந்த வீட்டின் கிரகம் பலம் இழந்து அந்த வீட்டின் அதிபதி 6ஆம் வீட்டின் அதிபதியின் சேர்க்கைப் பெற்றோ, 6ஆம் வீட்டில் அமையப் பெற்றோ இருந்தால் அந்த வீட்டின் காரகத்துவத்திற்குரியவர்களால் வாழ்நாளில் நிறைய எதிர்ப்புகள், பகைமை, பிரச்சனைகள் உண்டாகும் .

No comments: