Tuesday, May 31, 2016

ஜீன் மாத ராசிப்பலன் & சுப முகூர்த்த நாட்கள் 2016



காணத்தவறாதீர்,

விஜய் டிவியில் ஜோதிட தகவல்

  

விஜய் டிவியில் காலை 7.20 மணி முதல் 7.30 மணி வரை 

ஜோதிட தகவல் 

என்ற  நிகழ்ச்சியினை  காணத்தவறாதீர்

(ஜோதிட தகவல் அனைத்தும் தற்போது 
 HOTSTAR ல் 



உள்ளது கண்டு மகிழுங்கள் )


ஜீன் மாத ராசிப்பலன் & சுப முகூர்த்த நாட்கள் 2016

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை&600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com




புதன்     
சூரிய  சுக்கி 

கேது
08.06.2016  ரிஷப புதன்
13.06.2016  மிதுன சுக்கிரன்
14.06.2016  மிதுன சூரியன்
17.06.2016  செவ்வாய் துலாம்
27.06.2016  மிதுன புதன்
30.06.2016 செவ்வாய் () நிவர்த்தி



குரு ராகு

சனி செவ் () ()




           


மேஷம் ; அஸ்வினி, பரணி, கிருத்திகை&1ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5ல் குரு சஞ்சரிப்பதும் மாதபிற்பாதியில் சூரியன் 3ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பாகும். இதனால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் சிறப்பான ஆதரவுகளை பெற முடியும். மிக பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வந்து சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களையும், ஆதரவுகளையும் பெற முடியும். கடன்களும் படிப்படியாக குறையும்.

பரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 17.06.2016 இரவு 07.18 மணி முதல் 20.06.2016 மாலை 06.04 மணி வரை.

ரிஷபம்  ;கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே
இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியனும், 7ல் சனி செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும்.

பரிகாரம். சிவவழிபாடு செய்வது, முருகப்பெருமானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 20.06.2016 மாலை 06.04 மணி முதல் 22.06.2016 மதியம் 02.42 மணி வரை.

மிதுனம்; மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 &ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே
எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் ராகு  6ல் செவ்வாய் சனி சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட உயர்வுகள்  எதிர் பார்த்த இட மாற்றங்கள் யாவும் கிடைக்கும். தேவைவயற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம். சிவ பெருமானை வழிபாடு செய்வது பிரதோஷ கால விரதங்கள் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் 22.06.2016 மதியம் 02.42 மணி முதல் 24.06.2016 இரவு 09.24 மணி வரை.

கடகம்     ;  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு குடும்ப ஸ்தானமான 2ல் குருவும், 11ல் சூரியன் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் கடந்த காலங்களிலில் இருந்து வந்த பிரச்சனைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும்வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை பெற்ற மகிழ்வார்கள். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கப் பெற்று வாழ்வில் முன்னேற்றத்தினை பெறுவார்கள்.

பரிகாரம். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 24.06.2016 இரவு 09.24 மணி முதல் 27.06.2016 அதிகாலை 02.22 மணி வரை.

சிம்மம்     ;  மகம், பூரம். உத்திரம்&1& ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சாரம் செய்வதும் 10ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் ஜீவன ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்கனால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். பிள்ளைகளை அனுசரித்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்  பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம். துர்கை அம்மனை வழிபாடு செய்வது தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 27.06.2016 அதிகாலை 02.22 மணி முதல் 29.06.2016 காலை 05.38 மணி வரை

கன்னிஉத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம  ராசிக்கு 3ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 10ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர் பார்த்த இட மாற்றங்கள் கிடைக்கும்.

பரிகாரம். துர்கை அம்மனை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 01.06.2016 இரவு 10.37 மணி முதல் 03.06.2016 இரவு 11.02 மணி வரை.
மற்றும் 29.06.2016 காலை 05.38 மணி முதல் 01.07.2016 காலை 07.29 மணி வரை

துலாம்   ; சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3 &ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே
உயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 11ல் குரு ராகு சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 8ல் சூரியன் சுக்கிரன்  சஞ்சரிப்பதால் நெருங்கிறவர்களிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெறுவதோடு பணியிலும் நிம்மதியுடன் செயல் பட முடியும்.

பரிகாரம். சனி பகவானை வழிபாடு செய்வது, விநாயகரை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 03.06.2016 இரவு 11.02 மணி முதல் 05.06.2016 இரவு 11.28 மணி வரை

விருச்சிகம்; விசாகம்&4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே
தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு   7ல் சூரியன் சுக்கிரன் சஞ்சரிப்பதும் ஏழரை சனி தொடருவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூட சற்று தாமதம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளலாம்.

பரிகாரம். முருக வழிபாடு மேற்கொள்வது சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 05.06.2016 இரவு 11.28 மணி முதல் 08.06.2016 அதிகாலை 01.57 மணி வரை.

தனுசு ; மூலம், பூராடம், உத்திராடம்&1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே
வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 9ல் குரு 6ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள உதவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். பதவி உயர்வுகளும் கிட்டும்.

பரிகாரம். சனி கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீப மேற்றி வழிபடுவது தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 08.06.2016 அதிகாலை 01.57 முதல் 10.06.2016 காலை 08.06 மணி மணி வரை

மகரம்; உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு  லாப ஸ்தானமான 11ல் சனி செவ்வாய்  சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், லாபமும் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.

பரிகாரம். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 10.06.2016 காலை 08.06 மணி முதல் 12.06.2016 மாலை 06.13 மணி வரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4ல் சுக்கிரன் 7ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைபட்ட திருமண சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தைகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடைகளுக்கு பின் அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் சற்று தாமதப்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிவ வழிபாடு முருக வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 12.06.2016 மாலை 06.13 மணி முதல் 15.06.2016 காலை 06.47 மணி வரை.

மீனம் ; பூரட்டாதி&4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன  ராசி நேயர்களே
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு 3ல் சூரியன் 9ல் செவ்வாய்  சனி சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் உண்டாகும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல உயர்வு உண்டாகும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம். விஷ்ணு பகவானை வழிபடுவது சர்ப சாந்தி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 15.06.2016 காலை 06.47 மணி முதல் 17.06.2016 இரவு 07.18 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

02.06.2016 வைகாசி 20 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசிதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை.

06.06.2016 வைகாசி 24 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியைதிதி மிருகசீரிஷ நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

08.06.2016 வைகாசி 26 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்திதிதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை

09.06.2016 வைகாசி 27 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமிதிதி பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை

16.06.2016 ஆனி 02 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசிதிதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

23.06.2016 ஆனி 09 ஆம் தேதி வியாழக்கிழமை திருதியைதிதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். தேய்பிறை.