Rasi palangal

Tuesday, July 26, 2016

குருப்பெயர்ச்சி பலன்கள் மீனம்


குருப்பெயர்ச்சி பலன்கள் மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சிரித்த முகத்துடன் அனைவரிடத்திலும் அன்புடன் பழகும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி குரு ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் 02-08-2016 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம் செய்யவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். திருமணம் போன்ற சுபகாரியங்களும் தடபுடலாகக் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர பாக்கியமும் சிறப்பாக அமையும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். சிலருக்கு சொந்த வீடு, கார் போன்றவை வாங்கும் யோகம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உங்களுக்குள்ள கடன்களும் பைசலாகும். ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்து விஷயங்களிலுள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். கூட்டா ளிகள் சாதகமாக அமைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். சனி 9-ல் சஞ்சரிப்பதால் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு எதிர்பார்த்த உயர்வு களைப் பெற முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறையக் கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பார்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலைகுடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். நினைத்தது நிறைவேறும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். பூர்வீகச் சொத்துகளும் கைக்குக் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கொடுக்கல்- வாங்கல்கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணலாம். கொடுத்த கடன்களும் வீடுதேடி வரும்.  விரோதிகளும் நண்பர்களாவார்கள். நல்ல நட்புகளால் நற்பலன் அமையும். எதிர்பாராத தனவரவுகளும் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.

தொழில், வியாபாரம்செய்யும் தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி மேன்மை உண்டாகும். கூட்டாளி களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய அமைப்பும் உண்டாகும்.

உத்தியோகம்பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த ஊதிய உயர்வு உத்தியோக உயர்வு போன்ற யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங் களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிட்டும்.

பெண்கள்உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன்- மனைவியி டையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும் கிட்டும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் யாவும் சேரும். பண வரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு மண மாகும். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். 
அரசியல்பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தடையின்றிக் காப்பாற்றமுடியும். கட்சிப் பணிகளை சிறப்பாகச் செய்வீர்கள். கட்சிப் பணிகளுக்காக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும்.

விவசாயிகள்பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கு சற்று கூடுதலான விலை சந்தையில் கிடைக்கும். தாராள தனவரவுகளால் நவீன யுக்திகளைக் கையாள முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் கிடைக்கும். வீடு, மனை, புதிய நிலம் போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். கடன்கள் குறையும்.

கலைஞர்கள்சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைக்கும். நினைத்த அளவிற்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொருளாதாரம் மேம்படும். ஆடம்பர கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். சின்னத் திரையில் இருப்பவர்களாலும் ஜொலிக்க முடியும். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வீர்கள்.

மாணவ- மாணவியர்கல்வியில் பல சாதனைகளைச் செய்ய முடியும். நல்ல மதிப்பெண் களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். அரசு வழியில் கிடைக்கப் பெறும் உதவிகள் தக்கசமயத்தில் உதவும். விளை யாட்டு போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெற முடியும். நல்ல நட்புகளால் நற்பலன்கள் தேடி வரும். ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும்.

குரு பகவான் உத்திர நட்சத்திரத்தில் 02-08-2016 முதல் 20-09-2016 வரை சஞ்சாரம்உங்கள் ராசியாதிபதி குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்மராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் நினைத் தது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர பாக்கியம் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் நவீன பொருட் சேர்க்கைகள் அமையும். உற்றார் உறவினர் களின் வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய கூட்டாளி களால் அபிவிருத்தி பெருகும். வேலையாட்கள் ஒற்றுமையுடன் செயல்படு வார்கள். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். பயணங்களால் நல்ல அனுகூலங்கள் ஏற்படும்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 21-09-2016 முதல் 25-11-2016 வரை சஞ்சாரம்ராசியாதிபதி குரு, 5-ஆம் அதிபதி சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல் நிலை அற்புதமாக அமையும். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதாரம் உயர்வடையும். பொன், பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் நல்ல நிலையில் நடைபெற்று லாபம் பெருகும். விரோதிகளும் நண்பர்களாகச் செயல்படுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களும் சாதகமாக மாறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டு தல்களைப் பெறுவார்கள். ராகு பகவான் 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் இருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் அளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். கடன்கள் குறையும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 26-11-2016 முதல் 16-1-2017 வரை சஞ்சாரம்ராசியாதிபதி குரு பகவான் 2, 9-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் அற்புதமான நற்பலன்களை பெறுவீர்கள். செய்யும் தொழில், வியாபாரத்தில் மேன்மை களும் கூட்டாளிகளால் லாபங்களும் உண்டாகும். புதிய நவீன கருவி களை வாங்கிப் போடுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு டையவற்றால் அனுகூலங்கள் ஏற்படும். பணம் தாராளமாக வருவதால் கொடுக்கல், வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கணவன், மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் தடபுடலாக நடந்தேறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடை பெறும். உற்றார், உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வுகளைப் பெற்று முன்னேற முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் துலா ராசியில் 17-01-2017 முதல் 22-02-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் அதிசாரமாக துலாராசியில் 8-ஆம் வீட்டில் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். குரு 8-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள், அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று மந்த நிலை ஏற்படும் என்பதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும் என்றாலும், நிறைய போட்டிகளையும் எதிர்கொள்ளவேண்டி வரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து பொறுப் பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. ஜென்ம ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும்.

குரு பகவான் வக்ர கதியில் 23-02-2017 முதல் 01-06-2017 வரைகுரு பகவான் வக்ர கதியிலிருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுக்காதிருப்பது நல்லது. பணம் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். எடுக்கும் எந்த வொரு காரியத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்திலுள்ளவர்களாலும் வீண் விரயங்கள் ஏற்படும். சனி பாக்கிய ஸ்தானத்திலும், ராகு 6-லும் இருப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே மந்த நிலை நிலவினாலும் பொருள்தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ் தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

குரு பகவான் அஸ்த நட்சத்திரத்தில் 02-06-2017 முதல் 15-07-2017 வரை சஞ்சாரம்ராசியாதிபதி குரு பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் அனுகூலமான நற்பலன்களைத் தடை யின்றிப் பெறுவீர்கள். கடந்த கால பிரச்சினைகள் யாவும் விலகி எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைக் கொடுக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப் பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். சிலருக்கு சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் அமையும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு, வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும், அரசு வழியில் ஆதாயங்களும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும்.

குரு பகவான் சித்திரை நட்சத்திரத்தில் 16-07-2017 முதல் 02-09-2017 வரை சஞ்சாரம்குரு பகவான் 7-ஆம் வீட்டில் செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பொருளாதார உயர்வுகளால் நினைத்தது நிறைவேறும். அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். பணம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். வரும் 27-07-2017ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின்மூலம் கேது 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் செய்யும் தொழில், வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றத்தைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும்.

நட்சத்திரப்பலன்
பூரட்டாதி 4-ஆம் பாதம்மீன ராசியில் ராசியாதிபதி குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்ப தால் எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றிப் பூர்த்தியாகும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். பொன்னும் பொருளும் சேரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடையவார்கள். பொருளாதாரம் உயரும்.

உத்திரட்டாதிமீன ராசியில் சனியின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடை விலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்தியோகத்திலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும்.

ரேவதிமீன ராசியில் புதனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களரமான சுப காரியங் கள் கைகூடும். பொருளாதார உயர்வுகளால் நினைத்தது நிறைவேறும். அசையும், அசையா சொத்துகள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் சிறப்பான லாபம் அமையும். கடன்கள் யாவும் குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பவைஎண்:         1, 2, 3, 9, 10, 11, 12கிழமை:     வியாழன், ஞாயிறுதிசை:     வடகிழக்குநிறம்:     மஞ்சள், சிவப்புகல்:          புஷ்ப ராகம்தெய்வம்:     தட்சிணாமூர்த்தி
பரிகாரம் மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு சாதகமாக சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். சனி 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிக் கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடு வது நல்லது. சனிக்கிழமைகளில் விரதமிருந்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்குப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர் களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, விநாயகர் வழிபாடு மேற்கொள் வது நல்லது. கேது 12-ல் சஞசரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ""ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவே நமஹ"" என்ற பீஜ மந்திரத்தைக் கூறி வருவது, செவ்வல்லிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

No comments: