Thursday, August 18, 2016

வார ராசிப்பலன் ஆகஸ்ட் 21 முதல் 27 வரை 2016

வார ராசிப்பலன்    ஆகஸ்ட் 21 முதல்  27   வரை   2016

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

Visit as @ www.muruguastrology.com





கேது                                  

கிரக   மாற்றம்

25.08.2016 கன்னி சுக்கிரன்



ராகு  சூரிய சுக்கி     

சனி  செவ்     

குரு  புதன்    


இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள் 
மீனம்   20.08.2016 மதியம் 02.53 மணி முதல்22.08.2016 மாலை 04.57 மணி வரை.
மேஷம் 22.08.2016 மாலை 04.57 மணி முதல் 24.08.2016 இரவு 07.10 மணி வரை.
ரிஷபம் 24.08.2016 இரவு 07.10 மணி முதல் 26.08.2016 இரவு 10.21 மணி வரை.
மிதுனம் 26.08.2016 இரவு 10.21 மணி முதல் 29.08.2016 காலை 03.04 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
21.08.2016 ஆவணி 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

22.08.2016 ஆவணி 06 ஆம் தேதி திங்கட்கிழமை பஞ்சமிதிதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
இனிமையான சுபாவம் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 8ல் சனி செவ்வாய் 6ல் குரு  சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் தேவையற்ற வீண் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும், சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     23,24,27

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத ரிஷப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 4ல் சுக்கிரன், 5ல் குரு புதன், சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சியும், ஒற்றுமையும் உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். சிவ பொருமானை வழிபாடு செயயயய்வது நல்லது

வெற்றிதரும் நாட்கள் 21.22.25.26

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் ராகு 6ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும்வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்கயளால் அனுகூலம் ஏற்படும். துர்கை அம்மனை வழிபடவும்.


வெற்றிதரும் நாட்கள்     21,22,23,24,27.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத கடக ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன், ராகு, 3ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும்புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி முன் ஜாமீன் போன்றவற்றை கொடுப்பதால் வீண் பிரச்சனைகளில் சிக்குவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கை நழுவும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் யாவும் தாமதப்படும். குரு ப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது நல்லது

வெற்றிதரும் நாட்கள்     23,24,25,26

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் எதையும் சமாளித்து தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள்  ஜென்ம ராயில் சூரியன், 4ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 2ல் குரு புதன் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     25,26,27.
சந்திராஷ்டமம்                      20.08.2016 மதியம் 02.53 மணி முதல்22.08.2016 மாலை 04.57 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் சனி செவ்வாய், சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 12ல் சூரியன் ராகு சஞ்சாரம் செய்வதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கொடுக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது ---உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     21,22,27.
சந்திராஷ்டமம்                      22.08.2016 மாலை 04.57 மணி முதல் 24.08.2016 இரவு 07.10 மணி வரை.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதில் அலாதி பிரியம் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள்   ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன் ராகு, சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலுதம், ஏழரை சனி தொடருவதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகி ஒற்றுமை குறைவு ஏற்படும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை அளிக்கும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்களை எதிர் கொள்ள நேரிடும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். சனிப்பரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     21.22.23.24.
சந்திராஷ்டமம்                      24.08.2016 இரவு 07.10 மணி முதல் 26.08.2016 இரவு 10.21 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 11ல் புதன் குரு 10ல் சூரியன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவினை உண்டாக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனி பகவானை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     23,24,25,26.
சந்திராஷ்டமம்                      26.08.2016 இரவு 10.21 மணி முதல் 29.08.2016 காலை 03.04 மணி வரை


தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே ஏழரை சனியில் ஜென்ம சனி தொடருவதும் 10ல் குரு புதன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும்உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடனிருப்பது நல்லது. சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.


வெற்றிதரும் நாட்கள் 25,26,27.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே பாக்கிய ஸ்தானமான 9ல் குரு புதன் லாப ஸ்தானமான 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். நினைத்தது நிறைவேறும். கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 21,22,27.

கும்பம்  அவிட்டம் 3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
வேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய கும்ப ராசி நேயர்களே உங்கள்  ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன் ராகு, 8ல் புதன் குரு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்றுவதில் தாமதநிலை உண்டாகும். எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலை பளு கூடுதலாகும். Êசர்ப சாந்தி செய்வது உத்தமம்.
வெற்றிதரும் நாட்கள்                     23,24.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மற்றவர்களின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட மீன  ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன் ராகு, 7ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார  நிலை சிறப்பாகவே இருக்கும். எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலையிருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடையின்றி நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் கா£ரியங்களில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
வெற்றிதரும் நாட்கள்     21,22,25,26.


Post a Comment

Intha Naal