Wednesday, August 10, 2016

கோட்சாரத்தில் சூரியன்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology. 

மலேசியா வருகை

தமிழக பிரபல சோதிடர்
திரு முருகுஇராசேந்திரன் அவரின்
மகன்
தமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்
விஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,
முனைவர்  முருகு பால முருகன் Ph.D in Astrology.
அவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை தந்துள்ளாா்
மலேசியாவில் கோலாலம்பூர்,
தங்கும் நாட்கள் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 21 வரை    

 நேரில் தொடர்பு கொள்ளலாம்
 Murugubalamurugan

18 Jalan Ipoh Kecil

Off Jalan Ipoh

50350  Kuala lumbur

cell- - 0167642631


கோட்சாரத்தில்  சூரியன்
அருக்கன், ஆதித்தன், ரவி, பாஸ்கரன், உதயன், தினேஷ் இப்படி பல பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் சூரியன் ஒரு நெருப்புக் கோள்.  ஒரு ஆண் கிரகம், ராசி சக்கரத்தில் சிம்மம் ஆட்சி வீடு, மேஷம் உச்ச வீடு, சூரியன் துலாத்தில் நீசம் அடையும், பஞ்ச பூதத்தில் நெருப்பு, திசை கிழக்கு, உலோகம் தாமிரம், நவதானியம் கோதுமை, அங்கம் எலும்பு, மார்பு, குலம் க்ஷத்திரியன், நிறம் சிவப்பு, வடிவம் சமம், சமித்து எருக்கு, சுவை கார்ப்பு, வாகனம் மயில், தேர், வஸ்திரம் சிவப்பு துணி, அதிதேவதை சிவன், பஞ்ச பூதம் தேயு, நாடி பித்தம், நட்பு கிரகம் சந்திரன், குரு செவ்வாய். புதன் சமம். சுக்கிரன், சனி, ராகு, கேது பகை. [இதில் சனி ஜென்ம பகை] சூரியன் தான் இருக்கும் வீட்டிலிருந்து 7ம் வீட்டை பார்வை செய்யும். சூரியனின் நட்சத்திரங்கள் கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.

கோள்சார ரீதியாக 12 ராசிகளில் சூரியன்
சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சரியாக ஒரு மாதம் தங்கும். கோட்சார ரீதியாக 3,6,10,11  ஆகிய பாவங்களில் நின்றால் சிறப்பான நற்பலனங்கள்  ஏற்படும். 1,2,4,5,7,8,9,12 போன்ற இடங்களில் சஞ்சரிக்கும் போது அசுபப் பலன்கள் ஏற்படும்.

சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் உடல் நலப்பாதிப்பு, மனக்கவலை, உற்றார், உறவினர்களுடன் விரோதம், அதிகமான அலைச்சல், டென்ஷன் உண்டாகும்.

2ல் சஞ்சரிக்கும் காலத்தில் கெட்ட குணம், தேவையற்ற கெட்ட நடவடிக்கைகள், நஷ்டம்,  அலைச்சல், குடும்பத்தில் அமைதி குறைவு, கண்களில் பாதிப்பு ஏற்படும்.

     3ல் சஞ்சரிக்கும் காலத்தில் நல்ல தேக ஆரோக்கியம், முயற்சிகளில் வெற்றி, சகோதரர்களால் அனுகூலம், சந்தோஷம், உற்றார், உறவினர்களுடன் நல்ல உறவு, நட்பு, செல்வம், செல்வாக்கு எடுக்கும் காரியம் யாவும் வெற்றியை உண்டாகும்.

4ல் சஞ்சரிக்கும் போது மனதில் கஷ்டம், குடும்பத்தில் தேவையற்ற கலகம், எடுக்கும் காரியங்களில் தடை, அலைச்சல் உண்டாகும்.

      5ல் சஞ்சரிக்கும் போது சோம்பல், கஷ்டம், பொருள் நஷ்டம், அதிகமாக செலவழிக்கும் நிலை, நோய் வாய்ப்படும் அமைப்பு போன்றவை உண்டாகும்.

      6ல் சஞ்சரிக்கும் போது நோய்கள் குறையும், பலமும் வலிமையும் கூடும், பகைவர்களை வெல்லும் ஆற்றல் எடுக்கும் காரியங்களில் வெற்றி, செல்வச் சேர்க்கை உண்டாகும்.

7ல் சஞ்சரிக்கும் போது தேவையற்ற அலைச்சல், ஜீரணமின்மை விஷப் பூச்சிகளால் கண்டம், காயம்படும் அமைப்பு, கணவன் மனைவி இடையே பிரச்சனை, குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு, மார்பு நோய்கள் உண்டாகும் அமைப்பு ஏற்படும்.

8ல் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் பெண்களுடன் மனஸ்தாபம், கஷ்டம் கலகம் உடல் நலப் பாதிப்புகள் உண்டாகும்.

9ல் சஞ்சரிக்கும் காலத்தில் எதிர்பாராத இடமாறுதல் அல்லது வேலை மாறுதல், சண்டை சச்சரவுகள், பொருள் நாசம், வியாபாரத்தில் நலிவு, லாபக் குறைவு, தேவையற்ற அவமானங்கள் உண்டாகும்.

10ல் சஞ்சரிக்கும் காலத்தில் சிறப்பான ஆரோக்கியம், காரியங்களில் வெற்றி, உற்றார், உறவினர்களுடன் ஒற்றுமையும் ஆதரவும் பெறும் அமைப்பு, வம்பு வழக்குகளில் வெற்றி, உத்தியோகம், தொழில் நிலையில் உயர்வு, லாபம் உண்டாகும்.

11ல் சஞ்சரிக்கும் காலத்தில் நிறைய லாபம் கிட்டும். திருமண சுபகாரியம் கை கூடும். பெயர், புகழ் உயரும். சகோதரங்களால் அனுகூலம், பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

12ல் சஞ்சரிக்கும் போது வீண் செலவுகள், தொழிலில் நஷ்டம், இடம் விட்டு இடம் செல்லும் அமைப்பு, பணத்தை இழக்கும் நிலை, தூக்கமின்மை, கண்களில் எரிச்சல், வயிறு உபாதைகள் உண்டாகும்.
    
சூரியன் கோட்சார ரீதியாக சஞ்சரிக்கும் ராசி, சூரியனுக்கு நட்பா, பகையா, நீச்சமா ஆட்சியா, உச்சமா என்றும் பார்க்க வேண்டும். உதாரணமாக சூரியன் 3ல் சஞ்சரித்தாலும் அவ்வீடு சூரியனுக்கு அசுபராசியானால் சுப பலனை குறைவாகவே தரும். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது அது ராசிக்கு 3,6,10,11 ம் இடமாக இருந்தாலும் சுப பலன் தர ஏற்படாது. ஏனென்றால் துலாராசி சூரியனின் நீச வீடாகும்.

1,2,4,5,7,8,9,12 ம் ராசிகளில் சஞ்சரித்தாலும் அது சூரியனுக்கு நட்பு, ஆட்சி, உச்சம் வீடானாலும், சுப கிரகமான குருவின் பார்வை இருந்தாலும் சுபப்பலன் ஏற்படும் என்றாலும்  சூரியனுக்கு அசுபர் பார்வையோ சேர்க்கையோ ஏற்பட்டால் அசுப பலனையே தரும். குறிப்பாக சனியால் பாதிக்கப் பட்டால் அதிக துன்பம் உண்டாகும். சூரியன் மிகவும் சக்தி வாய்ந்த வெப்பம் மிகுந்த ஒளி உடைய கோள் என்பதால் சூரியனுக்கு மிக அருகில் மற்ற கிரகங்கள் செல்லும் போது அவை தன் சக்தியை இழக்கின்றன. இதற்கு அஸ்தங்கம் என்று பெயர். புதன் எப்போதும் சூரியனை ஒட்டியே தான் சஞ்சரிக்கும் என்பதால் புதனுக்கும் ராகு கேதுவுக்கும் அஸ்தங்க தோஷம் இல்லை. மற்ற கிரகங்களுக்கு அஸ்தங்க தோஷத்தை தரும் சூரியனையே பலம் இழக்க வைக்கும் சக்தி ராகுவுக்கு உண்டு.

சூரியன் உச்சமாக மேஷத்தில் அமைந்திருந்தால் தனதான்யம், செல்வம், செல்வாக்கு பெருகும். அதிக பலம், சுறுசுறுப்பு, தைரியம், எதிரிகளை வென்றிடும் ஆற்றல், உயர் பதவிகளை அடையும் யோகம் போன்றவை அமையும்.

சூரியன் துலாத்தில் நீசமாக அமைந்திருந்தால் உடல் நிலையில் பாதிப்பு, சோம்பல் தனம், பய உணர்வு, தந்தைக்கு பாதிப்பு, தந்தையால் ஜாதகருக்கு அனுகூலமற்ற நிலை, உண்டாகும்.

     கோட்சார ரீதியாக சூரியனின் சஞ்சாரம் சாதகமற்று அமைந்திருந்தால் சிவ பெருமானை வழிபாடு செய்வதும், தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும் ஆதித்ய ஹ்ருதயத்தை படிப்பதும், பிரதோஷ வழிபாடுகள் மேற்கொள்வதும், கோதுமை தானம் அளிப்பதும், செந்தாமரை மலர்களால் சூரிய பகவானுக்கு அர்ச்சிப்பதும், ஞாயிற்றுக் கிழமைகளில் சர்க்கரை பொங்கல் வைத்து 12 மணியளவில் சூரிய பகவானுக்கு நிவேதம் செய்வதும் மிகவும் நல்லது.

கத்திரி அல்லது அக்னி நட்சத்திரம்.
கோட்சார ரீதியாக சூரியன் 1மாதம் வீதம் ஒரு ராசியில் சஞ்சரிக்கும். மே மாதத்தில் பரணி 3,4ம் பாதம், கிருத்திகை, ரோகிணி 1ம் பாதம் ஆகிய 3 நட்சத்திரங்களில் [சித்திரை, வைகாசி மாதத்தில்] சஞ்சரிக்கும் காலங்களில் அதிகமான வெப்பம் இருக்கும். இக்காலம் கத்திரி, அக்னி நட்சத்திரம் காலமாகும். கத்திரியில் செடிகள் வெட்டுவது, நார் உரிப்பது, வீடு நிலம் போன்றவற்றை பராமரித்து புதுப்பித்தல், விதை விதைப்பது, கிணறு வெட்டுவது, புதிய இடத்தை வாங்குவது, உபதேசம் பெறுவது, குளம், போர் போடுவது, தோட்டம் அமைப்பது, புதிய வண்டி வாகனம் வாங்குவது, அதில் பயணம் செய்ய தொடங்குவது இவற்றை தவிர்த்து விட வேண்டும். பூணூல் போடுவது, காது குத்துவது, மஞ்சள் நீராட்டுவது, யாகம் செய்வது, சத்திரங்கள், ஓட்டல் கட்டி திறப்பது போன்றவற்றை செய்யலாம்.

மல மாதம்
மேஷ ராசி முதல் மீன ராசி வரையில் உள்ள 12 ராசிகளிலும் சூரியன் சஞ்சரிக்கும் காலம் 12 தமிழ் மாதங்களாகும். ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் சந்திரன் சூரியனுடன் கூடும் காலம் அமாவாசையாகும். சூரியனுக்கு 7வது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் பௌர்ணமியாகும். சில மாதங்களில் ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமி வந்து விடும். இதனை மல மாதம் என்கிறோம். இப்படி வரும் மாதங்களில் திருமணம் போன்ற சுபகாரியங்களை செய்வது கூடாது. அப்படி அவசியம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் கிரக பரிகாரம் செய்த பின் செய்யலாம்.
     

No comments: