Tuesday, August 16, 2016

கோட்சாரத்தில் சந்திரன்


கோட்சாரத்தில்  சந்திரன்


«ü£Fì ñ£ñE,
º¬ùõ˜ º¼° ð£ô º¼è¡
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 õìðöQ ݇ìõ˜ «è£J™ ªî¼,
õìðöQ, ªê¡¬ù&600 026
îI›ï£´, Þ‰Fò£.
cell: 0091  7200163001. 9383763001,


Visit as @ www.muruguastrology.com

மனோக்காரகன், மதி, நிலா, பூர்ணன், சந்திரன், அம்புலி போன்ற பல பெயர்களை உடைய மாதுர்காரகன் சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியை பெற்று அதனை பிரதிபலிக்கும் கிரகமாகும். ரோகிணி, அஸ்தம், திருவோணம்  ஆகியவை  சந்திரனின் ஆளுகைக்கு உட்பட்ட நட்சத்திரங்கள் ஆகும். உருவம் குள்ளம். நிறம் வெள்ளை. குலம் வைரியர். உலோகம் ஈயம். ரத்தினம் முத்து. தானியம் நெல், பச்சரிசி. திசை வாயு மூலை. அவயம் தோள்கள். பெண் கிரகம். சமித்து முருங்கு. சுவை இனிப்பு. வாகனம் நரி, முத்து விமானம். துவாரம் இடது மூக்கு. தூபம் சாம்பிராணி. வஸ்திரம் வெள்ளை.வளர்பிறையில் முழுசுபர், தேய் பிறைச் சந்திரனாக இருந்தால் பாவி. அதிதேவதை பார்வதி, விஷ்ணு, கிரகம் அப்பு. சிலேத்தும நாடி. புஷ்பம் வெள்ளலரி பூ. 

கோட்சார ரீதியாக ஜென்ம ராசிக்கு சந்திரன் 1,3,6,7,10,11ல் வரும் போது நற்பலன்களை ஏற்படுத்தும். 8வது ராசிக்கு வரும் போது சந்திராஷ்டமம் உண்டாகிறது. சந்திரஷ்டம நாட்களில் மனக் குழப்பங்கள் உண்டாகும். எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும்.      

சந்திரன் கோட்சார ரீதியாக 12 ராசிகளில் இருந்தால் உண்டாக கூடிய பலன்கள்

ஜென்ம ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் போது நல்ல உடல் ஆரோக்கியம், சந்தோஷமான மனநிலை, விருப்பமான உணவு சாப்பிடும் அமைப்பு, எடுக்கும் செயல்களில் வெற்றி ஏற்படும்.

2ல் வரும் போது அதிகமான செலவு, குடும்பத்தில் கலகம், கவலைகள், சிறு சிறு உடல் நலப் பாதிப்புகள் உண்டாகும்.

3ல் வரும் போது செல்வம், செல்வாக்கு, ஆடை ஆபரணச் சேர்க்கை, தைரியம் உண்டாகும். விரும்பிய உணவு கிடைக்கும்.

4ல் வரும் போது உற்றார், உறவினர்களிடம் பகை, காரியத் தடை, வயிற்று வலி, தாயின் உடல் நிலையில் பாதிப்பு போன்ற பலன்கள் உண்டாகும்.

5ல் வரும் போது சோம்பல் தன்மை, உற்சாகமின்மை, மனக் குழப்பம், பண விரயம், அவமானம் ஏற்படும்.

6ல் வரும் போது ஆரோக்கியத்தில் மேன்மை, தாராள தன வரவுகள், புகழ், புண்ணிய காரியம் செய்திடும் வாய்ப்பு போன்றவை  உண்டாகும்.

7ல் வரும் போது மனமகிழ்ச்சி, பெருமை, சகல சௌபாக்கியங்கள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும்.

8ல் வரும் போது உடல் நிலையில் பாதிப்பு, தேவையற்ற மனக்குழப்பம், நெருக்கமானவர்களிடன் விரோதம், பயம், கஷ்டம், சரியாக சாப்பிட முடியாத நிலை போன்ற அசுபப் பலன்கள் உண்டாகும்.
    
9ல் சஞ்சரிக்கும் போது புத்திரர்களுடன் மனஸ்தாபம், ஊர் விட்டு ஊர் செல்லும் அமைப்பு, குடும்பத்தில் கஷ்டம், மார்பில் நோய் உண்டாகும்.

    10ல் சஞ்சரிக்கும் போது எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் அமைப்பு, உற்றார், உறவினகளால் அனுகூலம், சாப்பாட்டில் பிரியம் ஏற்படும்.

11ல் சஞ்சரிக்கும் காலம் சந்தோஷமான மனநிலை, விரும்பிய உணவு சாப்பிடும் அமைப்பு, எல்லா வகையிலும் லாபம் உண்டாகும்.

12ல் சஞ்சரிக்கும் காலத்தில் மனதில் கவலை, கஷ்டம், அவமானம், உற்றார் உறவினர்களிடம் சண்டைச்  சச்சரவு, உடலில் காயம் உண்டாகும் நிலை போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம்
கோட்சார ரீதியாக சந்திரன் பூமியையும், சூரியனையும் சுற்றி வருகிறது.  ஒரு ராசியில் 2 1/4நாட்களில் சஞ்சரித்து 12 ராசிகளை அதாவது ஒரு ராசி மண்டலத்தை சுற்றி வர 27நாட்கள் ஆகின்றன. ஒருவரது ஜென்மராசிக்கு 8வது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் 2 1/4நாட்கள் சந்திராஷ்டம் நாட்கள் ஆகும். சந்திரன் மனோக்காரகன் என்பதால் இந்த சந்திராஷ்டம் நாட்கள் முழுக்க அசுபமான நாட்களாகும். அந்த 2 1/4நாட்களில் உள்ள நட்சத்திரங்கள் அசுப நட்சத்திரங்களாகும். எனவே சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் வெளியூர் பிரயாணங்கள் செல்வதை தவிர்த்து விட வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. அந்த 2 1/4 நாட்களில் மனக்குழப்பம், உடல் சோர்வு, உண்டாகும். இதற்கு பரிகாரமில்லை எனவே இக்காலத்தில் கூடுமான வரையிலும் தெளிவுடன் செயல்பட வேண்டும். சில வேளைகளில் சந்திராஷ்டமும் அஷ்டமாதிபதியும் சேர்ந்து கோட்சாரத்தில் இருக்க நேரிடுகிறது. அப்படிப்பட்ட காலத்தில் மயக்கம், சோர்வு, உற்சாகமற்ற நிலை, அதிகமாக விட வேண்டிய நிலை ஏற்படும். மனம் தளர்ந்து காணப்படும்.

No comments: