Thursday, September 15, 2016

வார ராசிப்பலன் செப்டம்பர் 18 முதல் 24 வரை 2016

வார ராசிப்பலன்    செப்டம்பர் 18   முதல்  24   வரை   2016
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை - 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

கேது                                  

கிரக   மாற்றம்

19.09.2016 துலா சுக்கிரன்
22.09.2016 புதன் வக்ரம் முடிவுராகு  புதன் ()
செவ்
சனி    

குரு     சுக்கி   சூரியஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மீனம்                                16.09.2016 இரவு 12.10 மணி முதல் 18.09.2016 இரவு 12.54 மணி வரை.
மேஷம்           18.09.2016 இரவு 12.54 மணி முதல் 21.09.2016 அதிகாலை 01.38  மணி வரை.
ரிஷபம்            21.09.2016 அதிகாலை 01.38 மணி முதல் 23.09.2016 அதிகாலை 03.53 மணி வரை.
மிதுனம்          23.09.2016 அதிகாலை 03.53  மணி முதல் 25.09.2016 காலை 08.36 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
18.09.2016 புரட்டாசி 02 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துதியைதிதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை

19.09.2016 புரட்டாசி 03 ஆம் தேதி திங்கட்கிழமை திருதியைதிதி அஸ்வினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன் 9ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். 8ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் எல்லா நன்மையும் கிட்டும்

வெற்றிதரும் நாட்கள்       19,20,23,24.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5ல் சுக்கிரன், குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்பணம் கொடுக்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தனச் சேர்க்கைகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வதால் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

வெற்றிதரும் நாட்கள்                       18,21,22

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6ல் சனி, சஞ்சாரம் செய்வதால்  எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம்வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். குருவுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்       18,19,20,23,24.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட  கடக ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், 6ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பொன், பொருள் சேரும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலும் சரளமாக நடைபெறும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது

வெற்றிதரும் நாட்கள்       19,20,21,22.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 2ல் குரு சுக்கிரன், 5ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைக்கும். துர்கை அம்மனை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

வெற்றிதரும் நாட்கள்                       21,22,23,24.
சந்திராஷ்டமம்                        16.09.2016 இரவு 12.10 மணி முதல் 18.09.2016 இரவு 12.54 மணி வரை.

 கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசியில் குரு, 4ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட் பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் வீண் செலவுகளை தவிர்க்கவும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்கனைள குறைத்து கொள்ள முடியும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்       21,22,23,24.

சந்திராஷ்டமம்                        18.09.2016 இரவு 12.54 மணி முதல் 21.09.2016 அதிகாலை 01.38  மணி வரை.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய் 11ல் ராகு சஞ்சாரம் செய்வதால் ஏற்ற இறக்கமான பலன்களையே பெற முடியும் என்றாலும் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது முன் கோபத்தைக் குறைப்பது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது போன்றவற்றால் குடும்ப ஒற்றமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் கிட்டும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிட்டும். முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.

வெற்றிதரும் நாட்கள்       18,19,20.
சந்திராஷ்டமம்                        21.09.2016 அதிகாலை 01.38 மணி முதல் 23.09.2016 அதிகாலை 03.53 மணி வரை.
விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன், குரு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும் பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சனைகள் யாவும் குறையும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

வெற்றிதரும் நாட்கள்       19,20,21,22.
சந்திராஷ்டமம்                        23.09.2016 அதிகாலை 03.53  மணி முதல் 25.09.2016 காலை 08.36 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 10ல் குரு,  12ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற வீணி விரயங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கணவரவுகள் சுமாராக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற சற்று தாமத நிலை ஏற்படும். தொழில் வியாபாரமும் மறைமுக எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தாலும் நல்ல நிலையில்  நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழ்படுவது சிறப்பு.

வெற்றிதரும் நாட்கள்       21,22,23,24.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 9ல் சூரியன் குரு 11ல் சனி சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரத்திலிருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கப் பெறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் நிம்மதியை நிலை நாட்ட முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் நல்ல நிலையில் நடைபெறும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் மேலும் நற்பலன்கள் உண்டாகும்.

வெற்றிதரும் நாட்கள்       18,23,24.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 8ல் சூரியன் குரு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உங்களுக்கு இருந்த வந்த கடன்கள் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடையவற்றால் லாபங்கள் கிடைக்கும். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள் 19,20.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன  ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் ராகு, 7ல் குரு, 10ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். சனிப்ரீதியாக ஆஞ்சனேயரை வழிபடவும்.

வெற்றிதரும் நாட்கள் 18,21,22.


No comments: