Thursday, December 1, 2016

டிசம்பா் மாத ராசிப்பலன் சுப முகூர்த்த நாட்கள் - 2016

டிசம்பா் மாத ராசிப்பலன்  சுப முகூர்த்த நாட்கள்
 - 2016

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனிசென்னை -- 600 026
தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


 

மேஷம் ; அஸ்வினிபரணிகிருத்திகைம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே நிமிர்ந்த நடையும்கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8ல் சனிசூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள்பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறுவதில் சற்று தாமத நிலை ஏற்படும்கடன்களும் சற்று குறையும்சொந்த வீடு வாகனம்  வாங்கும் விஷயங்களில் கவனம் தேவைஉற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லதுகொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளைய ஈடுபடுத்தாதிருக்கவும்கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற கடின முயற்சிகளை மேற்கொள்ளய நேரிடும்.   வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய வார்கள்அபிவிருத்தியும் பெருகும்.
பரிகாரம்சிவபெருமானை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் 25.12.2016 இரவு 08.52 மணி முதல் 28.12.2016 காலை 09.00 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 1,2,3, ரோகிணிமிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7&ல் சூரியன் சனியும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். 5ல் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும்குடும்பத்  தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்பொன் பொருள் சேரும்கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும்பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள்மிருமண சுப காரியங்கள் கைகூடும்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்அபிவிருத்தியும் பெருகும்தொழில் ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும்பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும்கொடுத்த கடன்களும் வீடு தேடி  வரும்உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்
பரிகாரம்சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 01.12.2016 அதிகாலை 02.36 மணி முதல் 03.12.2016 மதியம் 01.45 மணி வரை.மற்றும் 28.12.2016 காலை 09.00 மணி முதல் 30.12.2016 இரவு 07.37 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் ராகு, 6ல் சூரியன் சனி சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்பண வரவில் இருந்த தடைகள் விலகும்குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும்புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும்சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்பொன் பொருள் சேரும்கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல் பட்டால் எதிர் பார்த்த லாபத்தை அடைய முடியும்உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும்ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும்சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்கூட்டாளிகளையும்தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லதுமறைமுக எதிர்ப்புகள் விலகும்
பரிகாரம்தட்சிணாமூர்த்திக்கு பரிகாரம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 03.12.2016 மதியம் 01.45 மணி முதல் 05.12.2016 இரவு 11.01 மணி வரை.
மற்றும் 30.12.2016 இரவு 07.37 மணி முதல் 2016 மணி வரை.

கடகம்       புனர்பூசம் 4ம் பாதம்பூசம்ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே கொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத உங்களுக்கு தன ஸ்தானமான 2ல் ராகு 7ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாத பிற்பாதியில் ருண ரோக ஸ்தானமான 6ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும்ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும்எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றத்தை பெற முடியும்கணவன் மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும்உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும்உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள்பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லதுதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை.
பரிகாரம்முருக பெருமானைன வழிபாடு செய்வதுஅம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம் 05.12.2016 இரவு 11.01 மணி முதல் 08.12.2016 காலை 05.26 மணி வரை.

சிம்மம்     ;  மகம்பூரம்உத்திரம்ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் உங்களுக்கு   ஜென்ம ராசியில் ராகு, 4ல் சனி சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 2ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும்கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும்உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்கடன்கள் யாவும் படிப்படியாக குறையும்தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள்கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள்தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும்தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.
பரிகாரம்துர்கை அம்மனை வழிபடுவது சிவ வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 08.12.2016 காலை 05.26 மணி முதல் 10.12.2016 காலை 08.28  மணி வரை.

கன்னி ;  உத்திரம் 2,3,4, அஸ்தம்சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு  ஜென்ம  ராசிக்கு 3ல் சனி சூரியன் சஞ்சாரம் செய்வதும், 11ம் தேதி முதல் செவ்வாய் 6ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும்குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும்பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்கடன்கள் குறையும்கணவன்மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும்பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும்நினைத்தது நிறைவேறும்கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லதுதொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும்அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும்வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும்கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும்உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.
பரிகாரம்தட்சிணாமூர்த்தியை வழிபடவும்
சந்திராஷ்டமம் 10.12.2016 காலை 08.28 மணி முதல் 12.12.2016 காலை 08.50 மணி வரை.

துலாம்   ; சித்திரை3,4, சுவாதிவிசாகம்1,2,3 ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே உயர்ந்த நிலையை அடைய வேண்டிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு  ஜென்ம ராசிக்கு 2ல் சனிசூரியன் 4ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாதுஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வதுபேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதுதேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லதுஅடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும்புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும்.
பரிகாரம்சனி பகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 12.12.2016 காலை 08.50 மணி முதல் 14.12.2016 காலை 08.14 மணி வரை.

விருச்சிகம்விசாகம்4ம் பாதம்அனுஷம்கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே தன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன்சனி சஞ்சரிப்பதும் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 11ல் குரு சஞ்சரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள்பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம்எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமானப் பலன்களைப் பெற முடியும்குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும்கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பதுபிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லதுபணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும் என்றாலும் சிந்தித்து செயல்படவும்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும்கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும்உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்த் உயர்வுகளை பெற முடியும்
பரிகாரம்சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது  ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 14.12.2016 காலை 08.14 மணி முதல் 16.12.2016 காலை 08.51 மணி வரை.

தனுசு ; மூலம்பூராடம்உத்திராடம்1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே வேகமாக பேசினாலும்திருத்தமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12ல் சூரியன்சனி  சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் 11ம் தேதி முதல் செவ்வாய் 3ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும்கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாதுஉற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள்அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவைபணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும்தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம்சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது  தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 16.12.2016 காலை 08.51 மணி முதல் 18.12.2016 மதியம் 12.41 மணி வரை.

மகரம்உத்திராடம் 2,3,4, திருவோணம்அவிட்டம்1,2,ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே
தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு  9ல் குருலாப ஸ்தானமான 11ல் சூரியன்சனி சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும்பொருளாதார  நிலை சிறப்பாகவே இருக்கும்குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்திருமணம் போன்ற மங்களகரமாக சுப காரியங்கள் கை கூடும்எந்த வித பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும்ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.  எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கரை எடுத்த கொள்வது நல்லதுசிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லைஉத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும்வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும்
பரிகாரம்சர்ப சாந்தி செய்வது முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 18.12.2016 மதியம் 12.41 மணி முதல் 20.12.2016 இரவு 08.41 மணி வரை.

கும்பம் ; அவிட்டம்3,4, சதயம்பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே
மற்றவரின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8ல் குரு, 10ல் சனி சஞ்சரித்தாலும்மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் தேவையற்ற வீண் பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாதுஉடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம்பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.  பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது மூலம் வீண் விரயங்களை தவிர்க்கலாம்உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை ஏற்படும்புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன் படுத்தி கொள்வது நல்லதுதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும்கூட்டாளிகள் மற்றும் தொழிலார்களை அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்குரு ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபடுவதுராகு கேதுவை வழிபடுவதுஉத்தமம்.
சந்திராஷ்டமம் 20.12.2016 இரவு 08.41 மணி முதல் 23.12.2016 காலை 08.06 மணி வரை.

மீனம்  பூரட்டாதி4ம் பாதம்உத்திரட்டாதிரேவதி
அன்புள்ள மீன  ராசி நேயர்களே புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி சாய்க்காத உங்களுக்கு ருண ரோக ஸ்தானமான 6ல் குரு சஞ்சரிப்பதும்களத்திர ஸ்தானமான 7ல் குரு, 10ல் சுக்கிரன்சஞ்சரிப்பதும்மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்பணவரவுகள் மிக சிறப்பாக இருக்கும்சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும்.  உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் பணிபுரிய முடியும்.  திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும்உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும்கூட்டாளிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும்எதிர் பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்வேலை பளுவும் குறைவாகவே இருக்கும்பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும்கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்அடிக்கடி பயணங்கள் வாய்ப்புகள் அமையும்
பரிகாரம்தினமும் விநாயகரை  வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 23.12.2016 காலை 08.06 மணி முதல் 25.12.2016 இரவு 08.52 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

01.12.2016 கார்த்திகை 16ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியைதிதி மூல நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம்வளர்பிறை

04.12.2016 கார்த்திகை 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமிதிதி உத்திராட நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் தனுசு இலக்கினம்வளர்பிறை

05.12.2016 கார்த்திகை 20ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டிதிதி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம்வளர்பிறை

09.12.2016 கார்த்திகை 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை தசமிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்த யோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் விருச்சிக இலக்கினம்வளர்பிறை

16.12.2016 மார்கழி 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரிதியை திதி புனர்பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் தனுசு இலக்கினம்தேய்பிறை





No comments: