Friday, December 2, 2016

புத்தாண்டு பலன்கள் 2017 மேஷம்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip inastro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை --600 026 தமிழ்நாடு, இந்தியா
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

புத்தாண்டு பலன்கள் 2017


மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆண்டுக் கோளான குருபகவான் ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். சனி அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்ரிப்பதால் அஷ்டமச் சனியும் நடைபெறுகிறது. இது சாதகமற்ற அமைப்பு என்பதால் இக்காலங்களில் நீங்கள் எதிலும் சற்று சிந்தித்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் கேது 11-ல் இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் முழு முயற்சியுடன் பாடுபட்டால் மட்டுமே நற்பலனைப் பெறமுடியும். உற்றார்- உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வரும் 27-07-2017-ல் ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சியின் மூலம் ராகு ஜென்ம ராசிக்கு 4-ஆம் வீட்டிலும், கேது 10-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதன்மூலம் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் பல பிரச்சினைகளை சந்தித்தாலும் உங்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தின் மூலம், குரு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலை உயர்வடையும். வாழ்வில் சிறப்பான மறுமலர்ச்சி உண்டாகும். பூர்வீகச் சொத்து வழியிலிருந்த பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும். உற்றார்- உறவினர்களால் ஓரளவுக்கு நற்பலன்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கைகூடுவதுடன் பெரியோர்களின் ஆசியும், சிறப்பான புத்திரபாக்கியமும் அமையும். பூமி, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் யாவும் சிறப்பாக அமையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் அனுகூலமான பலனை அடையலாம்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது மருத்துவச் செலவுகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்வீர்கள். நெருங்கிய ஒருவரை இழக்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படலாம். உற்றார்- உறவினர்கள் உண்டாக்கும் பிரச்சினைகளால் மனநிம்மதியும் குறையும்.

குடும்பம், பொருளாதார நிலை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினை களும், பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும். என்றாலும் வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தின் மூலம் குரு 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். உங்களுக்கு அஷ்டமச் சனி தொடருவதால் கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடப்பதும், ஆடம்பரமாகச் செலவுகள் செய்வதைத் தவிர்ப்பதும், உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறைகளிலிருப்பவர்கள் ஆண்டின் முற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. தேவையற்ற வம்பு வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும். எதிலும் கவனம் தேவை. வரும் செப்டம்பர் மாதம் ஏற்படவிருக்கும் குருமாற்றத்திற்குப் பிறகு கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய தொழில்களில் கவனம் தேவை. செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு பெரிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும். உடனிருப்பவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய காலம் என்பதால் அவர்களை அனுசரித்து தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்றத்தாழ்வான நிலை நிலவும். பணியில் எவ்வளவுதான் பாடுபட்டாலும் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறாமல் போகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்தாலும் ஊதிய உயர்வுகள் செப்டம்பர் மாதத்திற்குப்பின் தான் கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானம் தேவை. உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பைப் பெற அனுசரித்துச் செல்லுவது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றுவதால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அஷ்டமச் சனி நடைபெறுவதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்ப்பதும், உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. குருப்பெயர்ச்சிக்குப் பின் பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஆண்டின் பிற்பாதியில் கைகூடும்.

அரசியல்

அரசியல்வாதிகள் தங்களின் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள பாடுபட வேண்டிய காலமாகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் அவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். என்றாலும் செப்டம்பர் மாதத்திற்குப் பின் ஓரளவுக்கு சமாளித்து மக்களின் ஆதரவைப் பெற்றுவிடுவீர்கள்.

விவசாயிகள்

விளைச்சல் சிறப்பாக அமைந்து எதிர்பார்த்த லாபம் பெறமுடியும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிட்டும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் ஆண்டின் பிற்பாதியில் குடும்பத்தில் சுப காரியங் களையும் நிறைவேற்றுவீர்கள். பூமி, மனை வாங்கும் வாய்ப்பும் அமையும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைய முடியும். விளையாட்டுப் போட்டிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் அவப்பெயர்கள் உண்டாகும். கல்விக்காக அரசு வழியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும்.

மாதப்பலன்கள்


ஜனவரி

உங்கள் ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், சுக்கிரன், பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பதும் நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பயணங்களால் எதிர்பாராத உயர்வு களைப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 22-01-2017 அதிகாலை 04.23 மணி முதல் 24-01-2017 மாலை 04.36 மணி வரை

பிப்ரவரி

மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானமான 11-ல் கேது சஞ்சாரம் செய்வதும், அதிசாரமாக 7-ல் குரு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால், பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடும். சிலர் விரும்பியவரையே கரம் பிடிப்பர். உற்றார்- உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவதும் உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. சனிபகவானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 18-02-2017 பகல் 12.31 மணி முதல் 20-02-2017 இரவு 12.55 மணி வரை

மார்ச்

இம்மாத முற்பாதியில் லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சாதகமாக சஞ்சாரம் செய்வதாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். தொட்டதெல்லாம் துலங்கும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் குடும்பத்தேவைகள் அனைத்தும் தடை இன்றி பூர்த்தியாவதால் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான லாபம் அமையும் என்றாலும் பெரிய தொகை பிறருக்கு கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். சிலருக்கு பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும் அமையும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 17-03-2017 இரவு 08.40 மணி முதல் 20-03-2017 காலை 09.11 மணி வரை

ஏப்ரல்

ஜென்ம ராசியில் செவ்வாய், ருணரோக ஸ்தானமான 6-ல் குரு, விரய ஸ்தானமான 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தும். மறைமுக எதிர்ப்புகளும், போட்டிகளும் அதிகரிக்கும். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களிலும் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். எந்தவொரு முயற்சி எடுத்தாலும் தடை தாமதங்களை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, சோர்வு இதனால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும். தொழில், வியாபார ரீதியாக மந்தநிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப்போகும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாது. சனிக்கு பரிகாரம் செய்வது, ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 14-04-2017 அதிகாலை 04.09 மணி முதல் 16-04-2017 மாலை 04.40 மணி வரை

மே

உங்கள் ஜென்ம ராசியில் சூரியன், குடும்ப ஸ்தானமான 2-ல் செவ்வாய், ருணரோக ஸ்தானமான 6-ல் குரு, சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை ஏற்படும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை நிதானமாக சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் உதவி கேட்பீர்களோ எனப் பயந்து அவர்களே ஒதுங்கி கொள்வார்கள். பண வரவுகள் சுமாராகத்தான் இருக்கும் என்பதால் ஆடம்பரமாகச் செலவுகள் செய்வதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்தித்தாலும் தேக்கமடையாமல் லாபம் பெறமுடியும். முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் உத்தமம்.

சந்திராஷ்டமம்: 11-05-2017 காலை 10.40 மணி முதல் 13-05-2017 இரவு 11.11 மணி வரை

ஜுன்

உங்கள் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், லாப ஸ்தானமான 11-ல் கேது சஞ்சாரம் செய்வதும், மாதப்பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்களையும், குடும்பத்திலுள்ளவர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி பெரிய தொகையை ஈடுபடுத்துவதும், முன்ஜாமீன் கொடுப்பதும் நல்லதல்ல. தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது மிகவும் கவனம் தேவை. குருபகவானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 07-06-2017 மாலை 04.39 மணி முதல் 10-06-2017 காலை 05.11 மணி வரை

ஜுலை

ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் கேது, 4-ல் புதன் சஞ்சரிப் பதும் மாத முற்பாதி வரை முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் செவ்வாய், சஞ்சாரம் செய்வதும், ஓரளவுக்கு அற்புதமான அமைப்பாகும். இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சியின்மூலம் ராகு ஜென்ம ராசிக்கு 4-ஆம் வீட்டிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றிகளைப் பெறமுடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்றாலும் எதிரிகளும் நண்பர்களாக செயல்பட்டு உங்களுக்கு நற்பலனை உண்டாக்கு வார்கள். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கமான பலன்கள் ஏற்படும் என்பதால் சிக்கனமாக செயல்படுவது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 04-07-2017 இரவு 10.46 மணி முதல் 07-07-2017 பகல் 11.21 மணி வரை

ஆகஸ்ட்

ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், 8-ல் சனி சஞ்சாரம் செய்வது, சாதகமற்ற அமைப்பு என்பதால் முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பதும் நேரத்திற்கு உணவு உண்பதும் நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் நிலவினாலும் எதிர்நீச்சல் போட்டாவது வாழ்வில் முன்னேற்றிவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி, பொறாமைகளை சமாளித்தே ஏற்றம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 01-08-2017 காலை 05.42 மணி முதல் 03-08-2017 மாலை 06.13 மணி வரை மற்றும் 28-08-2017 மதியம் 01.33 மணி முதல் 31-08-2017 அதிகாலை 01.52 மணி வரை

செப்டம்பர்

இம்மாதம் 2-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியின்மூலம் குரு 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார் இது அற்புதமான அமைப்பாகும். அதுமட்டுமின்றி ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், மாதப் பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். கடந்த காலத்திலிருந்த பிரச்சினைகள் யாவும் விலகி பொருளாதாரரீதியாக முன்னேற்றமும் எதிர்ப்புகள் மறையக்கூடிய வாய்ப்பும் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்திலும் மனசஞ்சலங்கள் மறைந்து ஒற்றுமை பலப்படும். கடன்கள் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் போட்டி பொறாமைகளின்றி லாபத்தைப் பெற முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வைகளால் அனுகூலம் உண்டாகும். முருகப்பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 24-09-2017 இரவு 09.52 மணி முதல் 27-09-2017 காலை 09.55 மணி வரை

அக்டோபர்

ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 6-ல் சூரியன் 7-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி விடுவீர்கள். பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் ஓரளவுக்கு அனுகூலப் பலனும் கொடுக்கும். சிலருக்கு பூமி, மனை யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் லாபங்களும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். 8-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நல்லதே நடக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 22-10-2017 காலை 05.50 மணி முதல் 24-10-2017 மாலை 05.42 மணி வரை

நவம்பர்

உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், களத்திர ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிப்பதால் தொட்டது எல்லாம் துலங்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன்பொருள் சேரும். குடும்பத்தில் சுபிட்சமும், பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் அமையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கடன்களும் படிப்படியாக குறையும். தொழில், வியாபார ரீதியாக போட்ட முதலீட்டினைவிட இரட்டிப்பு லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் சிறப்பான உயர்வினை அடைவார்கள். விஷ்ணு வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 18-11-2017 மதியம் 12.50 மணி முதல் 20-11-2017 இரவு 12.44 மணி வரை

டிசம்பர்

உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், களத்திர ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிப்பதால் பண வரவு சிறப்பாக இருக்கும். வரும் 19-ஆம் தேதி அஷ்டமச் சனியும் முடிவடைந்து விடுவதால் கணவன்- மனைவிடையே ஒற்றுமை உண்டாகும். உற்றார்- உறவினர் களிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியாக முன்னேற்றமானப் பலன்களை அடை வீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் வேலையாட்களின் ஆதரவும் உங்களுக்கு மேலும்மேலும் வெற்றியினைத் தேடித்தரும். தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு, தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டாகும். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 15-12-2017 மாலை 06.53 மணி முதல் 18-12-2017 காலை 07.04 மணி வரை

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 1, 2, 3, 9; நிறம் : அடர்சிவப்பு; கிழமை : செவ்வாய்; கல் : பவளம்; திசை : தெற்கு; தெய்வம் : முருகன்.

No comments: