Thursday, December 15, 2016

புத்தாண்டு பலன்கள் 2017 கன்னிபுத்தாண்டு பலன்கள் 2017 கன்னி

கன்னி   
(உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

எப்பொழுதும் இளமையான தோற்றமுடனேயே காட்சியளிக்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆண்டு கோளான குரு பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல்ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாவதோடு தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எல்லாவசதிகளும் இருந்தும் அனுபவிக்கமுடியாத அளவிற்கு எதிலும் தடைகள் உண்டாகும். பொருளாதாரநிலையிலும் சற்று நெருக்கடிகளை சந்திப்பீர்கள். என்றாலும் சனிபகவான்  முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றல் உண்டாகும்.  27-07-2017-ல் ஏற்படவிருக்கும் சர்ப்ப கிரக மாற்றத்தால் ராகு 11-ல் சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். இதுமட்டுமின்றி வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தின்மூலம் குருபகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக் குள்ள பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையத்தொடங்கும். பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் விலகி தாராள தனவரவுகள் ஏற்படும். சிலருக்கு அசையும், அசையாச் சொத்து சேர்க்கைகளும் அமையும். இதுவரை தடைபட்டு வந்த திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம் மேன்மேலும் உயரும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களும் அன்பாக நடந்து கொள்வார்கள். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீகச் சொத்துகளால் அனுகூலங்களும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காணமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும்.

தேக ஆரோக்கியம் 
உடல்ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு, நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலையால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றும் என்றாலும் சிறுசிறு மருத்துவச் செலவுகளுக்குப்பின் உடனடியாக சரியாகிவிடும். குடும்பத்திலுள்ளவர்கள் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் வலிமையும் வல்லமையும் உண்டாகும்.
குடும்பம், பொருளாதார நிலை 
பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் உடனடியாக சரியாகிவிடும். உற்றார்- உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். உங்களுக்கிருந்த மன சஞ்சலங்கள் பிரச்சினைகள், எதிர்ப்புகள் குறைந்து உங்கள் வலிமையும் வல்லமையும் கூடும். சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். கடன்கள் அனைத்தும் குறையும். சிலருக்கு வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும் அமையும்.

கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் துறைகளில் இருப்பவர்கள் பண விஷயங்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று கவனம் தேவை. கொடுத்த கடன்கள் வசூலாவதில் எந்தத் தடையும் இருக்காது. உங்களுக்கு இருந்துவரும் வம்புவழக்குகள் யாவும் ஒருமுடிவுக்கு வரும். சேமிப்பு பெருகும்.

தொழில், வியாபாரம் 
தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபங்கள் பெருகும். போட்டி பொறாமைகள் மறைந்து எதிரிகளின் பலம்குறையும். போட்ட முதலீட்டைவிட அதிகப்படியான லாபங்களை அடைவதால் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வங்கிக் கடன்களும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கூட்டாளிகளாலும் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகம் 
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் யாவும் கிட்டும். உடன் பணிபுரிபவர்களிடையே இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து பணியில் திருப்திகரமான நிலை நிலவும். வேலைப்பளுவும் குறையும். உயர் அதிகாரிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் சிறப்பான பணி அமையும்.
பெண்கள் 
உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனமுடன் நடப்பது நல்லது. பணவரவுகள் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்யுமளவிற்கு அமையும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்சியளிக்கும். புத்திரவழியில் சிறுசிறு மனக்குழப்பங்கள் உண்டாகும். பொன்பொருள் சேரும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பணவிஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பதை தவிர்த்து விடவும்.

அரசியல் 
அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாகும். உடனிருப்பவர்களை சற்று அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. கட்சிப் பணிக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம் என்றாலும் மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

விவசாயிகள் 
விவசாயிகளின் வாழ்வில் வளம் கொழிக்கும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். பயிர் விளைச்சல்கள் சிறப்பாக அமைந்து லாபங்கள் பெருகும். குடும்பத்திலும் ஒற்றுமை பலப்படும். பூமி, மனை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வம்புவழக்குகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும்.
மாணவ மாணவியர்
மாணவ- மாணவிகளுக்கு ஏற்றம்மிகுந்த பலன்கள் உண்டாகும். பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் ஆதரவாக அமையும். விளையாட்டுப்போட்டிகளில்கூட சிறப்பான வெற்றிகளைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். உடன் பழகும் நண்பர்களின் ஆதரவும் உற்சாகத்தை அளிக்கும்.

மாதப் பலன்கள்

ஜனவரிமுயற்சி ஸ்தானமான 3-ல் சனி, 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும், 17-ஆம் தேதி முதல் அதிசாரமாக 2-ல் குரு சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிமேல்வெற்றி கிட்டும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். சிலர் விரும்பியவர்களையே கை பிடிப்பர். உற்றார்- உறவினர்களும் உங்களைப் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். சிலர் வீடு, மனை, வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 06-01-2017 மதியம் 03.45 மணி முதல் 08-01-2017 மாலை 05.58 மணி வரை 
பிப்ரவரி
அதிசாரமாக தன ஸ்தானமான 2-ல் குரு சஞ்சாரம் செய்வதும், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாதப்பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் குறையும். நினைத்தது நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம் யாவும் இருக்கும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும். பொன்பொருள், ஆடைஆபரணம் சேரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றிலும் சரளநிலை இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் அபரிமிதமான லாபத்தை அடைவார்கள். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 02-02-2017 இரவு 09.11 மணி முதல் 04-02-2017 இரவு 12.20 மணி வரை 
மார்ச்
ஜென்ம ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதும், மாதமுற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறையும். பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்களும் கைகூடும். புத்திரவழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்லபெயரை எடுப்பீர்கள். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கூட்டாளிகளாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் உயர்வுகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். முருகனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 02-03-2017 அதிகாலை 03.16 மணி முதல் 04-03-2017 அதிகாலை 05.42 மணி வரை மற்றும் 29-03-2017 பகல் 11.39 மணி முதல் 31-03-2017 மதியம் 12.35 மணி வரை 

ஏப்ரல்
மாத கோளான சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதும், 8-ல் புதன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனமுடன் இருப்பது உத்தமம். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் குறையும். பணவிஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஆதாயங்களும் அமையும். இம்மாதம் சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்:  25-04-2017 இரவு 09.56 மணி முதல் 27-04-2017 இரவு 09.51 மணி வரை

மே
ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதும், 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலமானப்பலனை பெறுவீர்கள். கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகளும் சுமாராக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்ய கடன்வாங்க வேண்டியிருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களும் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து பணிகளில் கவனம் செலுத்தவும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  23-05-2017 காலை 08.26 மணி முதல் 25-05-2017 காலை 08.33 மணி வரை

ஜுன்
ஜென்ம ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பு ஆகும். எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளிப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் பெரிய மனிதர்களின் ஆதரவினை இழப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு உதவுவார்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். ஓரளவுக்கு லாபமும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தட்சிணாமூர்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  19-06-2017 மாலை 05.29 மணி முதல் 21-06-2017 மாலை 06.52 மணி வரை

ஜுலை
ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 6-ல் கேது சஞ்சரிப்பதும், 10, 11-ல் செவ்வாய் சூரியன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சியின்மூலம் ராகு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளதால் தாராள தனவரவுகள் உண்டாகி உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய வீடுகட்டி குடிபுகும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்க வும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத  லாபம் கிட்டும். கடந்தகால பிரச்சினைகள் யாவும் விலகி வாழ்வில் நல்லதொரு மறுமலர்ச்சி உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிவிடுவீர்கள். உத்தியோ கஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  16-07-2017 இரவு 12.23 மணி முதல் 19-07-2017 அதிகாலை 03.21 மணி வரை

கஸ்ட்
உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 10-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சூரியன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சிதரும் சம்பவங்கள் நடைபெறும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பதும் பிறரைநம்பி வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. கணவன்- மனைவி சற்று அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோஸ்தர்களுக்கும் பணியில் வேலைப்பளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மனநிம்மதியை அளிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நிலவக்கூடிய காலம் என்பதால் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாதிருப்பது நல்லது. சனியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  13-08-2017 காலை 05.54 மணி முதல் 15-08-2017 காலை 09.41 மணி வரை

செப்டம்பர்இம் மாதம் 2-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின்மூலம் குரு தன ஸ்தானமான 2ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும், முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, 11-ல் சுக்கிரன், ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று ஏற்றங்களை அடைவீர்கள். பணவரவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் சுபகாரியங்களும் கைகூடும். பொன்பொருள் சேரும். ஆடை ஆபரணச் சேர்க்கைகளும் அமையும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும் அதனால் வாழ்வில் முன்னேற்றமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விநாயகரை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம்:  09-09-2017 பகல் 11.46 மணி முதல் 11-09-2017 மதியம் 03.04 மணி வரை

அக்டோபர்
உங்கள் ராசியாதிபதி புதன் ஜென்ம ராசியில் உச்சம்பெற்று சஞ்சரிப்பதாலும்  தன ஸ்தானமான 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் புதிய வாய்ப்புகளும் தேடிவரும்.  உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று பதவி உயர்வுகளுடன் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலும் லாபமளிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார்- உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். முன்கோபத்தை சற்று குறைப்பதும், பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் நல்லது. சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம்:  06-10-2017 இரவு 07.35 மணி முதல் 08-10-2017 இரவு 09.33 மணி வரை

நவம்பர்
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதும், மாதப்பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளை சுறுசுறுப்பாகப் செய்து முடிப்பீர்கள். பணம் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார்- உறவினர்களும் உங்களைப் புரிந்துகொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். பொன்பொருள் மற்றும் ஆடை ஆபரணம் சேரும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகும். அனுகூலமான பயணங்களை மேற்கொள்வீர்கள். துர்க்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  03-11-2017 அதிகாலை 05.33 மணி முதல் 05-11-2017 காலை 06.32 மணி வரை. மற்றும்  30.11.2017 மாலை 04.17 மணி முதல் 02-12-2017 மாலை 05.32 மணி வரை

டிசம்பர்
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதும், மாத முற்பாதியில் சூரியன் 3ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும், தொழில், வியாபார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலமும் பல பெரிய மனிதர்களின் நட்பும் கிட்டும், பணியில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் மறையும். குடும்பத்திலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களும் மிகவும் சாதகமாக செயல்படுவார்கள். திருமணப் பேச்சு வார்த்தைகளும் சிறப்பான நற்பலனை உண்டாக்கும். சிலருக்கு புதிய பூமி, மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  28-12-2017 அதிகாலை 01.41 மணி முதல் 30-12-2017 அதிகாலை 04.29 மணி வரை

அதிர்ஷ்டம் அளிப்பை
எண் : 4, 5, 6, 7, 8; நிறம் : பச்சை, நீலம்; கிழமை : புதன், சனி; கல் :  மரகதப் பச்சை; திசை : வடக்கு; தெய்வம் : விஷ்ணு.

No comments: