Wednesday, December 21, 2016

2017- புத்தாண்டு பலன்கள்விருச்சிகம்

2017- புத்தாண்டு பலன்கள்விருச்சிகம் 
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)


பிடிவாத குணமும் சிறந்த பேச்சாற்றலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்களுக்கு எழரைச் சனி நடைபெற்றாலும் செப்டம்பர் 2-ஆம் தேதி முடிய ஆண்டுகோளான குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். திருமண சுபகாரியங்களும் தடையின்றி நிறைவேறும். புத்திரவழியில் பூரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்- உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபரிமிதமான லாபம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறுவதுடன் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளுடன் வேலைப்பளுவை குறைத்துகொள்ள முடியும். தற்போது 4, 10-ல் சஞ்சரிக்கும் ராகு கேது வரும் 27-07-2017-ல் ஏற்படவிருக்கும் சர்ப்ப கிரக மாற்றத்தின்மூலம் கேது 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளும்  நண்பர்களாக செயல்படுவார்கள் என்று சொன் னால் மிகையாது. வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தின்மூலம் குரு பகவான் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் செப்டம்பருக்கு பின்பு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், எதிர்பாராத வீண் விரயங்கள் போன்றவை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து அனைவரையும் அனுசரித்து நடப்பதும் நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை வாழலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம்.

உடல் ஆரோக்கியம் 

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய காலமாகும். உங்களுக்கு ஏழரை சனி தொடருவதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை, ஜீரண கோளாறு போன்றவற்றையும் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்வீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை 

கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். உற்றார்- உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் அனைத்தும் தடையின்றி கைகூடும். ஆண்டின் இறுதியில் பணவரவில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யும் எந்தவொரு காரியத்திலும் நல்ல லாபம் பெறமுடியும்.  கொடுக்கல் வாங்கல்  சரளமான நிலையில் அமையும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல அபிவிருத்தியும் லாபமும் உண்டாகும். தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வங்கிக் கடன்களும் படிப்படியாக குறையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் எதிர்பார்த்த லாபங்கள் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது உத்தமம். 

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும், பதவி உயர்வுகளும் கிட்டும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்பு கிட்டும். ஆண்டின் இறுதியில்  தேவையற்ற மனஉளைச்சல், அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும்.

பெண்கள் 

உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சுபிட்சம், சுப காரியங்கள் கை கூடும் அமைப்புநினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். பணிபுரிபவர்கள் பிறர் விஷயங்களில்  தலையீடு செய்யாதிருப்பது நல்லது.

அரசியல் 

அரசியல் நிமித்தமாகவும் கட்சிப் பணிகளுக்காகவும் நிறைய செலவு செய்ய நேரிட்டாலும்  அரசியல் வாழ்க்கையில் நல்லதொரு முன்னேற்றம் உண்டாவது மட்டுமின்றி எடுக்கும் காரியங்களையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சி  அளிப்பதாக அமையும்.

விவசாயிகள் 

விவசாயிகள் போட்ட முதலீட்டினை எடுக்க எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிர்கள் நாச மடையக் கூடும் என்றாலும் உங்களின் அயராத உழைப்பிற்கானப் பலனை தவறாமல் அடைந்து விடுவீர்கள். காய் கனிகளாலும் லாபம் உண்டு.

மாணவ- மாணவியர்

சில நேரங்களில் கல்வியில் மந்தநிலை, ஞாபகமறதி போன்றவற்றால் சரிவர மதிப்பெண்களைப் பெறமுடியாமல் போகும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். வீண் பொழுதுபோக்குகளை தவிர்த்து கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நினைத்த மதிப்பெண்களை பெறமுடியும்.


மாதப்பலன்கள்ஜனவரி

உங்கள் ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், மாதப் பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறமுடியும். பணவரவுகளும் ஓரளவுக்கு தாராளமாக அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உற்றார்- உறவினர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தை அடைய முடியாவிட்டாலும், போட்ட முதலீட்டை எடுத்துவிடமுடியும். உத்தி யோகஸ்தர்களும் பணியில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்க்கும் உதவிகளைப் பெறமுடியும், நீங்கள் இம்மாதம் சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

சந்திராஷ்டமம்:  10-01-2017 மாலை 06.48 மணி முதல் 12-01-2017 இரவு 07.50 மணி வரை 

பிப்ரவரி

உங்கள் ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் பலமும் வளமும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஓற்றுமை பலப்படும். உற்றார்- உறவினர்களிடம் சற்று விட்டு கொடுத்து நடப்பது நல்லது. பொருளாதார நெருக்கடிகள் குறைந்து தாராள தனவரவுகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடிவரும். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்:  07-02-2017 அதிகாலை 02.43 மணி முதல் 09-02-2017 காலை 05.11 மணி வரை 

மார்ச்

உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புத்திரவழியில் மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகளும் குறையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 06-03-2017 காலை 08.24 மணி முதல் 08-03-2017 பகல் 11.59 மணி வரை

ஏப்ரல்

ஜென்ம ராசிக்கு 11-ல் குரு, மாதப் பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார நிலையிலிருந்த நெருக்கடிகள் குறைந்து தாராள தனவரவு உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களும் சற்று சாதகமாகவே செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். ஏழரை சனி நடப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டிவரும். சனி பகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  02-04-2017 மதியம் 02.05 மணி முதல் 04-04-2017 மாலை 05.23 மணி வரை. மற்றும்  29-04-2017 இரவு 09.46 மணி முதல் 01-05-2017 இரவு 11.35 மணி வரை 

மே

ஜென்ம ராசிக்கு 11-ல் குரு, மாதப் முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக லாபங்களை அடைவீர்கள். போட்டி பொறாமைகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன்- மனைவியிடையே ஒற்றுமை, புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். தெய்வீக காரியங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. குரு பகவானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  27-05-2017 காலை 07.38 மணி முதல் 29-05-2017 காலை 07.56 மணி வரை 

ஜுன்

ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் எதிர்பாராத வீண் விரயங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். உற்றார்- உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது, நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலையிருக்கும் என்றாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. இம்மாதம் நீங்கள் ஆஞ்சநேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 23-06-2017 மாலை 06.22 மணி முதல் 25-06-2017 மாலை 06.04 மணி வரை 

ஜுலை

ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் லாபங்களை அடைவீர்கள். இதுமட்டுமின்றி இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு கேது பெயர்ச்சியின்மூலம் கேது 3-ல்  சஞ்சரிக்க வுள்ளதால்  எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகளும் தோன்றும். கடன் சுமைகளும் குறையும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் எதிர்பார்த்த கௌரமான பதவி உயர்வுகளைப் பெறமுடியும். துர்க்கை அம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்-  21-07-2017 அதிகாலை 04.13 மணி முதல் 23-07-2017 அதிகாலை 04.30 மணி வரை 

ஆகஸ்ட்

உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 9-ல் சூரியன், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் எல்லாவகையிலும் லாபங்களை அடைவீர்கள். குடும்பத்தில் தாராள தனவரவும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவமும் நடைபெறும். எதிர் பாராத வகையில் திடீர் தனவரவுகளும் ஏற்படும். கடன்கள் அனைத்தும் படிப்படியாக குறைந்து கடனில்லாத கண்ணியமான வாழ்க்கை அமையும். உங்களை விட்டு விலகிச் சென்ற உறவுகளும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உதவி கேட்டால் ஒதுங்கியவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவக் காத்திருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும் கூட்டாளிகளும் நம்பிகைக்குரியவர்களாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் உண்டாகும். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  17-08-2017 பகல் 11.59 மணி முதல் 19-08-2017 மதியம் 01.39 மணி வரை 

செப்டம்பர்

ஜென்ம ராசிக்கு 9-ல் சுக்கிரன், 10, 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இம்மாதம் 2-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியின்மூலம் குரு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பணவிஷயங்களில் கவனமுடன் செயல்படுவது உத்தமம். தேவையற்ற எதிர்ப்புகளும் உண்டாகும். வீணான அலைச்சல்களால் உடல் நிலை பாதிப்படையும். எடுக்கும் காரியங்களில் அதன் முழுப் பலனைப்பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் நிலவக்கூடும் என்பதால் ஆடம்பரமாக செலவுகள் செய்வதை குறைத்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்திலும் புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படவும். இம்மாதம் நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  13-09-2017 மாலை 05.47 மணி முதல் 15-09-2017 இரவு 08.37 மணி வரை 

அக்டோபர்

உங்களுக்கு ஏழரை சனி தொடருவது சாதகமற்ற அமைப்பு என்றாலும், ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய், 11-ல் புதன் மாத முற்பாதியில் 11-ல் சூரியன், சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபார ரீதியாக ஏற்றமிகு பலன்கள் உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள் என்றாலும் பண விஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. உற்றார்- உறவினர்களுடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

சந்திராஷ்டமம்:  10-10-2017 இரவு 11.18 மணி முதல் 13-10-2017 அதிகாலை 02.03 மணி வரை 

நவம்பர்

முயற்சி ஸ்தானமான 3-ல் கேது, 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபிட்சம், கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக அமையும். எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படவும். பொருளாதார நெருக்கடிகளும், உற்றார்- உறவினர்களிடையே ஒற்றுமை குறைவுகளும் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமானப் பலன்களைப் பெற சற்று தாமத நிலை ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  07-11-2017 காலை 06.44 மணி முதல் 09-11-2017 காலை 08.03 மணி வரை

டிசம்பர்

ஜென்ம ராசியில் சூரியன், சுக்கிரன், 12-ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது உத்தமம். குடும் பத்தில் வீண் வாக்குவாதங்களும், பொருளாதார தடைகளும் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பதும் கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும் நல்லது. எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது, கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  04-12-2017 மாலை 04.53 மணி முதல் 06-12-2017 மாலை 04.33 மணி வரை 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 1, 2, 3, 9; நிறம் : அடர்சிவப்பு, மஞ்சள்; கிழமை : செவ்வாய், வியாழன்; கல் : பவளம்; திசை : தெற்கு; தெய்வம் : முருகன்.

No comments: