Friday, December 23, 2016

2017- புத்தாண்டு பலன்கள் மகரம்


2017- புத்தாண்டு பலன்கள்  மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள் திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

சற்று பிடிவாதமான குணமிருந்தாலும் இளகிய மனம் படைத்த மகர ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த 2017-ஆம் ஆண்டு  உங்கள் ராசியாதிபதி சனிபவான் ஜென்ம ராசிக்கு 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். இதுமட்டுமின்றி பொன்னவனான குருபகவானும் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் ஆண்டின் செப்டம்பர் வரை சஞ்சாரம் செய்யவிருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்திற்கு மகிழ்ச்சி, சுபிட்சம் யாவும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியம் நடைபெற்று மகிழ்ச்சி அளிக்கும். பணவரவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. பூர்வீகச் சொத்து வழியிலும் சாதகமான பலன்கள் அமையும். உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்ற உறவுகளும் உங்களைத் தேடிவந்து நட்பு பாராட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தை அடைய முடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு உடையவைகளாலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தி லிருப்பவர்கள் கௌரவமான பதவிகளைப் பெற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவார்கள். தற்போது 2, 8-ல் சஞ்சரிக்கும் கேது- ராகு வரும் 27-07-2017 முதல் கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். இதுமட்டுமின்றி செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் குரு 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். என்றாலும் உங்கள் ராசியாதிபதி சனி 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து வெற்றி நடைபோடுவீர்கள்.

உடல் ஆரோக்கியம் 
உடல் ஆரோக்கியமானது அற்புதமான அமையும். நீண்ட நாட்களாக மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்குக்கூட படிப்படி யாக முன்னேற்றம் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருப்பதால் மனநிம்மதி உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை 
குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக அமைந்து பூமி மனை வாங்கும் யோகம், வண்டி வாகன யோகம், பொன்பொருள் சேர்க்கை யாவும் அமையும். சுபகாரியங்களும் கைகூடும். உங்களைப் புரிந்துகொள்ளாமல் பிரிந்த உறவினர்கள்கூட தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. கடன்கள் படிப்படியாக குறையும்.
கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் துறையில் இருப்பவர்கள் அபரிமிதமான லாபத்தை அடையமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரள நிலையில் நடைபெறும். பெரிய தொகையினை ஈடுபடுத்தும் போதும், பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்கும் போதும் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். பெரிய மனிதர்கள் ஆதரவு தேடிவரும்.

தொழில், வியாபாரம் 
தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினையும், அபிவிருத்தியையும் பெறமுடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு டையவைகளால் மேலும் மேலும் முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து நடந்து கொண்டால் நினைத்த முன்னேற்றங்களை அடையலாம்.

உத்தியோகம் உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உற்சாகத்தை உண்டாக்கும். உங்களின் திறமைகளை வெளிபடுத்தி அனை வரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். எதிர்பாராத பதவி உயர்வு, ஊதிய உயர்வு யாவும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பணியில் சிறுசிறு நெருக்கடிகள் அதிகரிக்கும். வேலைப்பளு காரணமாக உடல் நிலை சோர்வடையும். பெரிய கெடுதியில்லை.

பெண்கள் 
உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைவதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன்பொருள் சேரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது என்றாலும் செப்டம்பர் மாதத்திற்குபின் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சேமிப்பும் பெருகும். 
அரசியல் 
அரசியல்வாதிகளின் பெயர், புகழ், உயரக்கூடிய காலமிது. செல்வம் செல்வாக்கு யாவும் உயரும். மக்களிடையே இருந்த பிரச்சினை மறையும். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பிருக்கும். மக்களுக்காகவும், கட்சிக்காகவும் நிறைய செலவு செய்வீர்கள். பெயர் புகழ் கூடும்.

விவசாயிகள் 
விவசாயிகளுக்கும் மகசூல் பெருகும். விளைபொருட்களுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கும். பட்ட பாட்டிற்கெல்லாம் இரட்டிப்பான லாபம் பெறுவீர்கள். கால்நடைகளாலும் காய்கனி, பூ வகைகளாலும் லாபம் கிட்டும். கடன்கள் குறையும். நவீன கருவிகள் வாங்குவீர்கள்.

மாணவ- மாணவியர்
கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி யளிப்பதாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பாராட்டுதல்களையும் பரிசுகளையும் தட்டிச் செல்வீர்கள். கல்விக்காக அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும்.
மாதப்பலன்கள்


ஜனவரி
ஜென்ம ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ல் செவ்வாய், விரய ஸ்தானமான 12-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் லாப ஸ்தானமான 11-ல் சனி சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். நீங்கள் எதிர் பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவன முடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளை குறைப்பதும் நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் அமையும். வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஆதரவு கிட்டும். முருகப்பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  14-01-2017 இரவு 10.57 மணி முதல் 17-01-2017 அதிகாலை 05.35 மணி வரை
பிப்ரவரி
ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், லாப ஸ்தானமான 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் எதிர்பார்த்த முன்னேற்றங் களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தி யோகஸ்தர்களும் எதிர்பார்த்த உயர்வினை அடைவார்கள். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்கு தனவரவுகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று நிதானம் தேவை எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் விரயங்களை தவிர்க்கலாம். முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  11-02-2017 காலை 08.56 மணி முதல் 13-02-2017 மதியம் 03.11 மணி வரை

மார்ச்
ஜென்ம ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ல் சூரியன் சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், சஞ்சாரம் செய்வது குடும்பத்தில் தேவையற்ற பிரச்சி னைகள், அலைச்சல், டென்ஷன்களை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் பண விஷயத்தில் கவனம் தேவை. நண்பர்களே எதிரிகளாக மாறுவார்கள். கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகையாக மாறும். எடுக்கும் காரியங் களில் எதிர்நீச்சல்  போட்டே வெற்றிகளைப் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதே தற்போதைக்கு நல்லது. தொழில், வியாபாரத்தில் ரீதியாக எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. மாதப் பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய விருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சிவவழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்:  10-03-2017 மாலை 04.59 மணி முதல் 12-03-2017 இரவு 11.55 மணி வரை

ஏப்ரல்
மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பது பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் தடையின்றி அமையும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்- உறவினர்களால் ஏற்பட்டப் பிரச்சினைகளும் மறையும். உத்தியோ கஸ்தர்களுக்கு கௌரவமான பதவி கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். பொன்னும் பொருளும் சேரும். அசையாச் சொத்துகளால் லாபம் அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு டையவற்றாலும் லாபம் கிட்டும். துர்க்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  06-04-2017 இரவு 11.01 மணி முதல் 09-04-2017 காலை 06.52 மணி வரை

மே
சர்ப்ப கிரகங்களான 2-ல் கேது 8-ல் ராகு சஞ்சரிப்பதும், சுக ஸ்தானமான 4-ல்  சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும், பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். நினைத்ததை நிறை வேற்றுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யமுடியும். உற்றார்- உறவினர்களின் வருகையும் மகிழ்ச்சியளிக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடமுடியும். தொழில், வியாபாரத்திலும் ஓரளவுக்கு எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். முருகனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்:  04-05-2017 அதிகாலை 04.30 மணி முதல் 06-05-2017 மதியம் 12.35 மணி வரை
ஜுன்
ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, சஞ்சரிப்பதும் மாதப் பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பாகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணம் பலவழிகளில் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைவான லாபங்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். புத்திரவழியில் உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி யினை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில், வியா பாரம் நல்ல நிலையில் நடைபெறும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்:  31-05-2017 பகல் 11.14 மணி முதல் 02-06-2017 மாலை 06.20 மணிவரை மற்றும்  27-06-2017 இரவு 07.59 மணி முதல் 30-06-2017 அதிகாலை 01.34 மணி வரை

ஜுலை
மாதப் முற்பாதியில் 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு சஞ்சரிப்பதும் பயணங்களால் மேன்மையை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும்  இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்பட வுள்ள ராகு- கேது பெயர்ச்சியின்மூலம் கேது ஜென்ம ராசியிலும்,  ராகு 7-லிம் சஞ்சாரம் செய்யவுள்ளதால் நெருங்கியவர்களிடையே வீண் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரமாக செலவுகள் செய்வதையும் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்திலும் கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகளை சந்திப்பீர்கள். போட்ட முதலீட்டை எடுப்பதிலும் சற்று சிரமம் நிலவும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்:  25-07-2017 காலை 06.02 மணி முதல் 27-07-2017 காலை 10.25 மணி வரை

ஆகஸ்ட்
களத்திர ஸ்தானமான 7-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பது கணவன்- மனைவியிடையே தேவையற்ற வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தும் என்றாலும் பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, லாப ஸ்தானமான 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். குடும்பச் சுமைகள் சற்றே குறையும். உற்றார்- உறவினர்கனை அனுசரித்து நடப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுத்தால் வீண்சிக்கல்களில் சிக்கிக்கொள்வீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும்.  எடுக்கும் முயற்சி களில் தடைகளுக்குப் பின் வெற்றி பெறுவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  21-08-2017 மதியம் 03.52 மணி முதல் 23-08-2017 இரவு 08.02 மணி வரை
செப்டம்பர்
ஜென்ம ராசியில் கேது 7-ல் ராகு சஞ்சரிப்பதும், 8ல் சூரியன் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும், இம்மாதம் 2-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியின்மூலம் குரு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டிற்கு மாறுத லாகவிருப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அஜீரணக் கோளாறுகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களாலும் உடல்நிலை பாதிப்படையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் இழுபறிநிலை நீடிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் போகும். உற்றார்- உறவினர்களிடையே வீண்பிரச்சினைகள் அதிகரிக்கும். சனி 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் வலிமையைப் பெறுவீர்கள். சிவனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  17-09-2017 இரவு 12.07 மணி முதல் 20-09-2017 அதிகாலை 05.00 மணி வரை

அக்டோபர்
பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், புதன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கடந்த கால பிரச்சினைகள் யாவும் சூரியனைகண்ட பனிபோல மறையும். குடும்பத்தில் ஓரளவுக்கு நிம்மதியிருக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவும் சாதகமான பலனை அளிக்கும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் ரீதியாக இருந்த பிரச்சி னைகள் விலகி எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். வெளியூர், வெளி நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். நற்பலனை உண்டாக் கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது உத்தமம். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்:  15-10-2017 காலை 06.21 மணி முதல் 17-10-2017 மதியம் 12.18 மணி வரை

நவம்பர்
ஜென்ம ராசிக்கு 10, 11-ல் சூரியன், பாக்கிய ஸ்தானமான 9-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் ஏற்றஇறக்கமான பலன்களை பெறுவீர்கள். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும். பயணங்களிலும் கவனமுடனிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளை சமாளித்தே லாபம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டியிருப்பதால் உடல் நிலை சோர்வடையும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை பிறர் தட்டிச் செல்வார்கள். கவனம் தேவை. முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்  11-11-2017 பகல் 11.44 மணி முதல் 13-11-2017 மாலை 06.02 மணி வரை

டிசம்பர்
மாதப் முற்பாதியில் 11-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் இம்மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தின்முலம் உங்களுக்கு ஏழரை சனி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். சிலருக்கு பூமி மனையால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் அவப்பெயரை எடுப்பீர்கள். சிவபெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:  08-12-2017 மாலை 06.28 மணி முதல் 10-12-2017 இரவு 11.42 மணி வரை

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் :  5, 6, 8; நிறம் : நீலம், பச்சை; கிழமை : சனி, புதன்; கல் : நீலக்கல்; திசை : மேற்கு; தெய்வம் : விநாயகர்.

No comments: