Monday, December 26, 2016

புத்தாண்டு பலன்கள் 2017 கும்பம்

புத்தாண்டு பலன்கள் 2017 கும்பம்
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)


பரந்த நோக்கமும் வெள்ளை உள்ளமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு உங்கள் ராசியாதிபதி சனிபகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டு கோளான குருபகவானும் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும்., சர்ப்ப கிரகங்களான கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு எதிர்பாராத செலவுகளை உண்டாக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாத அளவிற்கு அலைச்சல்கள் ஏற்படும். எடுக்கும் காரியங்களை முடிப்பதற்கு எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் தாமதப்படுவதால் பொருளாதார நிலையும் நெருக்கடிக்கு உள்ளாகும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். ஆண்டின் தொடக்கத்தில் இவ்வளவு பிரச்சினைகளை சந்திக்கும் உங்க ளுக்கு வரும் 27-07-2017-ல் ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்தின்மூலம் ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதையும் சமாளிக்கும் வலிமையும், வல்லமையும் உண்டாகும். இதுமட்டுமின்றி செப்டம்பர் 2-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தினால் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் வாழ்வில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைபட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். உற்றார்- உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் இருந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் வந்துசேரும்.  கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பும், வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு பூமி மனை யோகம் வண்டி வாகன யோகம், யாவும் சிறப்பாக அமையும். சனி 10-ல் சஞ்சரித்தாலும் உங்கள் ராசியாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். கடன்களும் படிப்படியாக குறையும்.

உடல் ஆரோக்கியம்  

உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. உடல்நிலையில் நிம்மதி குறைவும் உண்டாகும். உங்களுடைய முன்கோபமே உங்களுக்கு இருந்த அழுத்தம் உயர்வடைய காரணமாக அமையும். குடும்பத்திலுள்ளவர்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். வீண்வம்பு வழக்கு ஏற்படும்.

குடும்பம், பொருளாதார நிலை 

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடும் பொருளாதார நிலையில் இடையூறுகளும் உண்டாகும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிர்பாராத முன்னேற்றங்களை அடைய முடியும். சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமைவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். 

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் துறைகளில் இருப்போர் எதிலும் சற்று கவனமுடன் இருப்பது நல்லது- ஆண்டின் முற்பாதியில் விரயங்கள் ஏற்பட்டாலும் பிற்பாதியில் அவற்றை ஈடுகட்டும் வகையில் லாபங்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பும் தேடிவரும். வம்பு வழக்குகள் மறையும்.

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறுவிரயங்கள், நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செப்டம்பர் மாதத்திற்குப் பின் ஓரளவுக்கு மேன்மைகளை சந்திப்பீர்கள். அதுவரை போட்டி பொறாமைகளையும், வீண் வம்புவழக்குகளையும் எதிர்கொள்ள நேரிடும். தேவையற்ற பயணங்களாலும்  அலைச்சல்கள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளாலும் அனுகூலமும் ஏற்படும்.

உத்தியோகம் 

பணியில் வேலைப்பளு சற்று அதிகரித்தே காணப்படும். எடுக்கும் வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்துமுடிக்க முடியாதபடி இடை யூறுகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் பிறர் பணிகளையும் சேர்த்து செய்யவேண்டி வரும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகளைப் பெற்றுவிடமுடியும்.

பெண்கள் 

உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருந்தாலும் நீங்கள் நல்லது செய்தாலும் அது மற்றவர்களுக்கு தீமையை போலத் தோன்றும். குரு மாற்றத்திற்குப் பின்பு உங்கள் வாழ்வில் ஓரளவுக்கு பொருளாதார மேன்மைகளைப் பெறுவீர்கள். தடைபட்ட சுபகாரியங்களும் தடைகள் விலகி கைகூடும். கடன்கள் படிப்படியாக குறையும். அசையும் அசையாச் சொத்து சேர்க்கைகளும் அமையும்.

அரசியல் 

அரசியல்வாதிகளுக்கு உடனிருப்பவர்களே போட்டியாக மாறுவார்கள். எடுக்கும் காரியங்களிலும் தேவையற்ற இடையூறுகளை சந்திப்பீர்கள். என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார நிலை உயர்வுக்கு பஞ்சம் இருக்காது. மக்களின் தேவைகளை அறிந்து அவற்றைப் பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்களின் ஆதரவினைப் பெறமுடியும்.

விவசாயிகள் 

விவசாயிகள் பயிர் நன்றாக விளைய அதிகப்படியான உழைப்பினை எதிர்கொள்ள நேரிடும். வேலையாட்களின் பற்றாக் குறையினால் அதிகப் பிரச்சினைகள் உண்டாகும் என்றாலும் பட்ட பாட்டிற்கானப் பலனை எதிர்நீச்சல் போட்டாவது அடைந்துவிடுவீர்கள். வங்கிக் கடன்கள் குறையும்.

மாணவ- மாணவியர்

மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் ஈடுபாடு குறையும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் சற்று தாமதமடையும். எதிலும் முழு முயற்சியுடன் செயல்படுவது நல்லது. பள்ளி, கல்லூரிகளில் பிறர்செய்யும் தவறுகளுக்கு தண்டனையை நீங்கள் அடைவீர்கள். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது.


மாதப்பலன்கள்ஜனவரி

ஜென்ம ராசிக்கு மாத முற்பாதியில் லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 17-ஆம் தேதி முதல் அதிசாரமாக குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத்தேவைகள் பூர்த்தி யாவதுடன் நினைத்ததையும் நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தை அடைந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. பயணங்களால் அனுகூலம் கிட்டும். நீங்கள் முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்:  17-01-2017 அதிகாலை 05.35 மணி முதல் 19-01-2017 மதியம் 03.54 மணி வரை 

பிப்ரவரி

ஜென்ம ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ல் செவ்வாய், விரய ஸ்மாதமான 12-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், அதிசாரமாக குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார ரீதியாக மேன்மையை ஏற்படுத்தும் என்றாலும் நெருங்கி யவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. கணவன்- மனைவியிடையேயும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும், கொடுக்கல்- வாங்கலும் சரளமாக அமையும். பொன்பொருள் சேரும்.  உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். இம்மாதம் சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  13-02-2017 மதியம் 03.11 மணி முதல் 15-02-2017 இரவு 12.36 மணி வரை 

மார்ச்

ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சாரம் செய்வது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும், 2-ல் சுக்கிரன் 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கடன்கள் குறையும். மறைமுக எதிர்ப்புகளும் மறையும். பூர்வீகச் சொத்து விஷயத்திலிருந்து வரும் பிரச்சினைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும், புத்திரவழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிலருக்கு பூமி, மனை வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும், பொன்பொருள் சேர்க்கை களும் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப் பெறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சிவபெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  12-03-2017 இரவு 11.55 மணி முதல் 15-03-2017 காலை 09.11 மணி வரை 

ஏப்ரல்

ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதும், 2-ல் சூரியன் 8-ல் குரு சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்களும் இதனால் நிம்மதியற்ற நிலையும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளிலும் தடை தாமதங்கள் நிலவும். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படு வதால் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டி யிருக்கும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்க்கவும். பணியில் சிறுசிறு நெருக்கடிகள், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  09-04-2017 காலை 06.52 மணி முதல் 11-04-2017 மாலை 04.40 மணி வரை
 
மே

தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன் மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும், ஓரளவுக்கு சாதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினை ஏற்படுத்தும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்திலும் மகிழ்ச்சிகரமான பலன்கள் உண்டாகும். புத்திரவழியில் பூரிப்பு, உற்றார்- உறவினர்கள் ஆதரவு இருக்கும். பூர்வீக சொத்துகளாலும், அசையாச் சொத்துகளாலும் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் எதிர்பாராத வகையில் லாபம் உண்டாகும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள் உத்தியோகஸதர் களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெறும். இம்மாதம் விஷ்ணுவை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  06-05-2017 மதியம் 12.35 மணி முதல் 08-05-2017 இரவு 10.54 மணி வரை 

ஜுன்

ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு, 4-ல் சூரியன், 8-ல் குரு  சஞ்சாரம் செய்வது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்பு, சோம்பல் போன்றவற்றால் அன்றாடப் பணிகளில் தடங்கல்கள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடித்து, நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே சாதகமானப் பலனை அடையமுடியும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகலாம். கொடுக்கல்- வாங்கலிலும் வீண்விரயங்களை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய நிலையும் இதனால் மனசஞ்சலமும் உண்டாகும். சர்ப்பசாந்தி செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்:  02-06-2017 மாலை 06.20 மணி முதல் 05-06-2017 அதிகாலை 04.36 மணி வரை 

ஜுலை

சுக ஸ்தானமான  4-ல் சுக்கிரன், மாதப் பிற்பாதியில் ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் செவ்வாய்  சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். நெருங்கியவர்களிடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொன்பொருள் சேரும். ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்த்தாலே கடன் சுமைகளை குறைக்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கையில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தால் ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  30-06-2017 அதிகாலை 01.34 மணி முதல் 02-07-2017 காலை 10.55மணி வரை மற்றும்  27.07.2017 காலை 10.25 மணி முதல் 29-07-2017 மாலை 06.30 மணி வரை 

ஆகஸ்ட்

பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய்  சஞ்சாரம் செய்வது ஏற்ற இறக்கமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். ஜீவன ரீதியாக ஊதிய உயர்வுகளைப் பெறுவீர்கள். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கும் புதிய வாய்ப்புகள் தேடிவருவதுடன் அதிக லாபம் கிடைக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலிலும் சரள நிலையிருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங் களை மேற்கொள்வீர்கள். இம்மாதம் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்:  23-08-2017 இரவு 08.02 மணி முதல் 26-08-2017 அதிகாலை 03.12 மணி வரை

செப்டம்பர்

ருணரோக ஸ்தானமான 6-ல் ராகு, சஞ்சாரம் செய்வதும், இம்மாதம் 2-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியின் மூலம் குரு பாக்கிய ஸ்தான மான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும், பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் சரளமாக இருக்கும். கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் சற்றே குறைவதால் நிம்மதி நிலவும்.  அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றிகளை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகளுக்கு போட்டிகள் நிலவி னாலும் எதிர்பாராத கௌரவப் பதவிகள் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. இம்மாதம் விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  20-09-2017 அதிகாலை 05.00 மணி முதல் 22-09-2017 மதியம் 12.04 மணி வரை 

அக்டோபர்

களத்திர ஸ்தானமான 7-ல் செவ்வாய் அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது தேவையற்ற வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது உத்தமம். உறவினர்களிடையே பகைமை உண்டாகும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் தேவையற்ற வீண் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறப்பான நிலையிலிருக்கும் எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் உண்டாகும். இம்மாதம் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்:  17-10-2017 மதியம் 12.18 மணி முதல் 19-10-2017 இரவு 08.02 மணிவரை 

நவம்பர்

ருணரோக ஸ்தானமான 6-ல் ராகு, 9-ல் குரு மாதப் பிற்பாதியில் ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும், பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். கடன் சுமைகள் ஓரளவுக்கு குறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து வகையிலிருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் சாதகமான பலனை அடைவீர்கள். உத்தியோகத்தி லிருப்பவர்களையும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைக்க முடியும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்:  13-11-2017 மாலை 06.02 மணி முதல் 16-11-2017 அதிகாலை 02.32 மணி வரை 

டிசம்பர்

ஜென்ம ராசிக்கு 9-ல் குரு, ருணரோக ஸ்தானமான 6-ல் ராகு, மாதப் பிற்பாதியில் லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால், பண வரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப் பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, முடிந்தவரை பிறர் விஷயங் களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய முதலீடு களை தவிர்த்து விடுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் சுமாராக இருக்கும். இம்மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தின் மூலம் சனி லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறு தலாக இருப்பது அற்புதமான அமைப்பாகும். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  10-12-2017 இரவு 11.42 மணி முதல் 13-12-2017 காலை 08.08 மணி வரை 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 5, 6, 8; கிழமை : வெள்ளி, சனி; திசை : மேற்கு; கல் : நீலக்கல்; நிறம் : வெள்ளை, நீலம்; தெய்வம் : ஐயப்பன்.

No comments: