Tuesday, December 27, 2016

புத்தாண்டு பலன்கள் 2017 மீனம்

புத்தாண்டு பலன்கள் 2017   மீனம்


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

சமயத்திற்கேற்றார்போல் வளைந்துகொடுத்து வாழக் கூடிய மீன ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியாதிபதி குரு சமசப்தம ஸ்தானமான 7-ல் அமைந்து ஜென்ம ராசியை பார்வை செய்வதும் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதும், 6-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். பணம் பலவழிகளில் தேடிவருவதுடன் எதிர்பாராத திடீர் தனச்சேர்க்கைகளும் அமையும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தியவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைவார்கள். குடும்பத்தில் சுபிட்சமும், வட்சுமி கடாட்சமும் நிலைத்திருக்கும். பூமி மனை சேர்க்கைகளும், பூர்வீகச் சொத்துகளால் அனுகூலங்களும் அமையும். திருமண சுபகாரி யங்கள் கைகூடும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே அன்யோன் யம் அதிகரிக்கும். புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்கு கடவுளின் அருள்கிட்டும். உற்றார்- உறவினர்கள் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றுவீர்கள். வரும் 27-07-2017-ல் ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்தால் கேது பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான லாபங்கள் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். சேமிப்புகளும் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் தடையின்றி கிடைக்கும். வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தின்மூலம் குருபகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும் சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்து கொள்வதும், தொழில், வியாபாரம், மற்றும் உத்தியோகம் செய்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவதும் நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். 

உடல் ஆரோக்கியம் 

உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். நீண்ட நாட்களாக ஏதாவது ஒரு பிரச்சினைக்காக மருத்துவச் சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்கள்கூட படிப்படியான முன்னேற்றத்தை காண்பார்கள் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு எடுக்கும் காரியங்களில் வெற்றிமேல் வெற்றிகளை பெறுவீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை 

கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் பூரிப்பும், மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்திலும் சுபகாரி யங்கள் கைகூடும். பொன்பொருள் சேரும். வீடுமனை போன்றவற்றை வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகும். புதிய நவீன பொருள் சேர்க்கைகளும் அமையும். கடன்கள் குறையும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறைகளிலிருப்ப வர்களுக்கு ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்த்த லாபங்கள் தடையின்றி அமையும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். ஆண்டின் பிற்பாதியில் பண விவகாரங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை.

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் இரட்டிப்பாக லாபங்கள் கிடைக்கும். போட்டிகளும், மறைமுக எதிர்ப்புகளும் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் மேன்மை கிட்டும். புதிய நவீன கருவிகளை வாங்கி போடுவீர்கள். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். கூட்டுத்தொழிலிலும் கூட்டாளிகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான பதவிகளும், ஊதிய உயர்வு களும், எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்களும் கிடைக்கும். சமுதாயத் தில் பெயர், புகழ், கௌரவம் யாவும் உயரும். உங்கள் திறமைகளுக்கு தகுந்த பாராட்டுதல்கள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் தடையின்றி நிறைவேறும்.

பெண்கள் 

உடல்நிலை சுறுசுறுப்பாக  அமையும். கணவன்- மனைவியிடையே இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை பலப்படும். ஏதாவது உதவி கேட்பீர்களோ என பயந்து ஒதுங்கிய உறவினர்களும் தேடிவந்து நட்பு பாராட்டுவார்கள். இப்பொழுது உங்களின் உதவி அனைவருக்கும் தேவைப்படும். அதனால் நல்ல பெயரும் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தடைபட்ட சுபகாரியங்களையும் நடத்தி பார்ப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வுகள் கிட்டும்.

அரசியல் 

அரசியல்வாதிகளின் பெயர், புகழ், உயரக்கூடிய காலமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். உங்கள் வார்த்தைகளுக்கு மக்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அனைவரிடமும் நல்ல பெயரை எடுப்பீர்கள். பொருளாதாரம் உயர்வடையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

விவசாயிகள் 

விவசாயிகளுக்கு அபரிமிதமான விளைச்சல்கள் பெருகும். சந்தையில் விளைபொருட்களுக்கேற்ற விலை கிடைக்கப்பெறுவதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்திலும் சுபிட்சமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். அரசுவழியில் ஆதரவுகள் கிட்டும். சேமிப்பு பெருகும்.

மாணவ- மாணவியர்

மாணவ- மாணவிகள் சாதனை படைப்பார்கள். நல்ல மதிப்பெண் களை பெற்று பெற்றோர், ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். கல்விக்காக அரசுவழியில் அனுகூலமானப் பலன்களும் கிடைக்கும். நல்ல நண்பர்களின் நட்புகள் உங்களுக்கு உறுதுணையளிப்பதாக அமையும்.

மாதப்பலன்கள்


ஜனவரி

உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும்,  ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் ராகு  சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். காரியங்கள் கைகூடும். பொன்பொருள் சேரும். சிலருக்கு பூமி, மனை, வண்டி வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் போன்றவற்றில் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்:  19-01-2017 மதியம் 03.54 மணி முதல் 22-01-2017 அதிகாலை 04.23 மணி வரை 

பிப்ரவரி

ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் ராகு மாதப் முற்பாதியில் லாப ஸ்தானமான 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபங்களை பெறுவார்கள். குடும்பத்திலும் நிம்மதியான நிலையிருக்கும். தாராள தனவரவுகளால் சேமிப்பும் பெருகும். ஆடை ஆபரணங்கள் சேரும். பூமி மனை வாங்கும் யோகங்கள் அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகளும் குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபத்தை அடைய முடிவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

சந்திராஷ்டமம்:  15-02-2017 இரவு 12.36 மணி முதல் 18-02-2017 பகல் 12.31 மணி வரை 

மார்ச்

ஜென்ம ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவிடையே தேவையற்ற கருத்து வேறு பாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தி லுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர் களும் தேவையற்ற மனசஞ்சலங்களை ஏற்படுத்துவார்கள்.  தொழில், வியாபாரம் செய்பவர்கள் வீண் நெருக்கடிகளையும் போட்டிகளையும் சந்தித்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்துவிட, முடியும். பயணங்களாலும் அனுகூலமான பலன்களை அடையலாம். பேச்சில் நிதானத்துடன் இருப்பதும் முன்கோபத்தை குறைப்பதும் பிறர் விஷயங்களில் தலையிடாதிருப்பதும் நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்:  15-03-2017 காலை 09.11 மணி முதல் 17-03-2017 இரவு 08.40 மணி வரை

ஏப்ரல்

ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் ராகு 11-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கொடுத்த வாக்கு றுதிகளை காப்பாற்றக்கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில், வியாபாரத் திலும் எதிர்பார்த்த லாபத்தை அடைந்துவிடமுடியும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும். தொழிலாளர்களிடையே இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் குறையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வைகளால் லாபம் அமையும். விநாயகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்:  11-04-2017 மாலை 04.40 மணி முதல் 14-0-2017 அதிகாலை 04.09 மணி வரை     

மே

ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் ருணரோக ஸ்தானமான 6-ல் ராகு, 7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டி பொறாமை களும் மறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பொன்பொருள் சேரும். கடன்கள் படிப்படியாக குறையும். பூமி மனை வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர் களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலும் திருப்திகரமாக அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். சிவபெருமானை வழிபடலாம்.

சந்திராஷ்டமம்:  08-05-2017 இரவு 10.54 மணி முதல் 11-05-2017 காலை 10.40 மணி வரை

ஜுன்

குடும்ப ஸ்தானமான 2-ல் சுக்கிரன், முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 7-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களின் பலமும் வலமும் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக சாதிப்பீர்கள். எதிரிகளை ஓட ஓட விரட்டக் கூடிய அளவிற்கு வலிமையும் வல்லமையும் உண்டாகும். பணம் கொடுக் கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் அமையும்.  குடும்பத்திலும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மனநிம்மதியுடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் நிம்மதியான நிலை இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  05-06-2017 அதிகாலை 04.36 மணி முதல் 07-06-2017 மாலை 04.39 மணி வரை 

ஜுலை

சுக ஸ்தானமான 4-ல் சூரியன் செவ்வாய், சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 7-ல் குரு சஞ்சரிப்பதாலும், இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சியின் மூலம் கேது லாப ஸ்தான மான 11-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக அமையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. அசையும் அசையாச் சொத்துகள் வாங்கும் விஷயங் களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளி களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். இம்மாதம் முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  02-07-2017 காலை 10.55 மணி முதல் 04-07-2017 இரவு 10.46 மணிவரை மற்றும்  29-07-2017 மாலை 06.30 மணி முதல் 01-08-2017 காலை 05.42 மணி வரை 

ஆகஸ்ட்

ராசிக்கு 7-ல் குரு, லாப ஸ்தானமான 11-ல் கேது, மாதப்பிற் பாதியில் ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பணவரவுகள் சரளமாக அமைந்து குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். தொழில், வியாபாரத்தில் அனுகூலமானப் பலனை அடையமுடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்புடன் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். இம்மாதம் முருகனை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்:  26-08-2017 அதிகாலை 03.12 மணி முதல் 28-08-2017 மதியம் 01.33 மணி வரை

செப்டம்பர்

பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 6ல் சூரியன், செவ்வாய் நல்ல அமைப்பு என்றாலும் இம்மாதம் 2-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத் தால் அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில்களில் சாதகமான பலன் கிட்டும். புதிய வாய்ப் புகள் கிடைக்கப் பெற்றாலும் எதிர்பார்க்கும் லாபங்கள் தாமதப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற சற்று தாமத நிலை ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் சாதகமானப் பலன்களை அடைய முடியும். உடல் ஆரோக்கித்தில் சற்றே பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். இம்மாதம் குருவுக்கு பரிகாரம் செய்யவும்

சந்திராஷ்டமம்:  22-09-2017 மதியம் 12.04 மணி முதல் 24-09-2017 இரவு 09.52 மணிவரை 

அக்டோபர்

மாத கோளான சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதும், 8-ல் குரு சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பாகும். மாதப் முற்பாதி வரை செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு உயர்வுகள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணவரவுகளிலும் சற்று ஏற்றஇறக்கமான நிலையிருக்கும். உத்தி யோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். குடும்பத்தி லுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல்நிலையில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். இம்மாதம் தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  19-10-2017 இரவு 08.02 மணி முதல் 22-10-2017 காலை 05.50 மணி வரை

நவம்பர்

களத்திர ஸ்தானமான 7-ல் செவ்வாய், 8-ல் குரு, சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள் வீர்கள். உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளை உண்டாக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். பேச்சில் மிகவும் நிதான மாக செயல்படுவது உத்தமம். நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்கள் கூட மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங் களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். இம்மாதம் முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்:  16-11-2017 அதிகாலை 02.32 மணி முதல் 18-11-2017 மதியம் 12.50 மணி வரை 

டிசம்பர்

செவ்வாய் சாதமற்று சஞ்சரிப்பதும், 8-ல் குரு சஞ்சாரம் செய்வதும் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடன் இருப்பது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து விடக்கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்வதால் மட்டுமே நற்பலனை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவும். நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்  13-12-2017 காலை 08.08 மணி முதல் 15-12-2017 மாலை 06.53 மணி வரை 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 1, 2, 3, 9; கிழமை : வியாழன், ஞாயிறு; திசை : வடகிழக்கு; கல் : புஷ்ப ராகம்; நிறம் : மஞ்சள், சிவப்பு; தெய்வம் :  தட்சிணாமூர்த்தி.

No comments: