Monday, January 2, 2017

இன்று - 02.01.2017

இன்று -  02.01.2017

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
02.01.2017, மார்கழி 18, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி மதியம் 03.51 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி, அவிட்டம் நட்சத்திரம் மாலை 04.51 வரை பின்பு சதயம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் - 0, ஜீவன் - 1/2 , மாத சதுர்த்தி விநாயக வழிபாடு நல்லது, சுப நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00

கேது  செவ்
சுக்கி சந்தி  
               
திருக்கணித கிரக நிலை

ராகு
புதன் (வ)
சூரிய
சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  02.01.2017

மேஷம்  இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் எதிர்பார்த்த உதவி இன்று தாமதமின்றி கிடைக்கப் பெறும். உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உங்களின் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். கடன் பிரச்சனைகள் தீரும்.
 ரிஷபம் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உங்கள் உடல் ஆரோக்கியம் இன்று  சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பணிபுரிபவர்க்கு ஊதிய உயர்வு உண்டாகும்.
மிதுனம் இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் இருப்பவர்க்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும்.
கடகம் நீங்கள் இன்று சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எந்த செயலிலும் கவனத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
சிம்மம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். சிலருக்கு புது பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வெளியூர் பயணம் மேற்கொள்பவருக்கு நல்ல அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
கன்னி உங்களுக்கு இன்று தனவரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்கள் தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். சுப முயற்சி தாமதமாகும்.
துலாம் நீங்கள் இன்று மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கப்பெறும்.
விருச்சிகம் உங்களுக்கு இன்று உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற நல்ல பலன்களும் கிடைக்கும்.
தனுசு உங்கள் வீட்டில் தாராள தன வரவும், லஷ்மிகடாட்சமும் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்களை வாங்கவும் விற்கவும் இன்று அனுகூலமான நாளாகும். தொழில் புரிவோர்க்கு அவர்கள் தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
மகரம் இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் தவிர்ப்பது உத்தமம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் சற்று ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இருக்கும். பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
கும்பம் இன்று உங்கள் உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் பொருளாதார தேவைகள் எளிதில் நிறைவேறும், வழக்கு சம்பந்தபட்ட விஷயங்களில் வெற்றி உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம் இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும்சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபிரச்சனையை தவிர்க்கலாம். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வேலை செய்யும் இடங்களில் கவனமுடன் செயல்படவும்.

No comments: