Wednesday, January 4, 2017

இன்று - 04.01.2017

இன்று -  04.01.2017

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
04.01.2017, மார்கழி 20, புதன்கிழமை, சஷ்டி திதி மாலை 03.06 வரை பின்பு வளர்பிறை சப்தமி, பூரட்டாதி நட்சத்திரம் மாலை 05.15 வரை பின்பு உத்திரட்டாதி, அமிர்தயோகம்   மாலை 05.15 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் & 1 , ஜீவன் & 1/2 , இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. சஷ்டி விரதம் முருக வழிபாடு நல்லது.


கேது  செவ்
சுக்கி சந்தி  
               
திருக்கணித கிரக நிலை

ராகு
புதன் (வ)
சூரிய
சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  04.01.2017

மேஷம்           இன்று உங்கள் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணிபுரிபவர்க்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும்.
ரிஷபம்           இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் பணிபுரிவோர் தங்களது மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொண்டால் ஏற்படும் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மிதுனம்         இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும். அலுவலகங்ளில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்ச்சிகள் வெற்றியை தரும்.
கடகம் இன்று உங்கள் ராசிக்கு பகல் 11.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும், தொழில் சம்பந்தமாக எடுக்கப்படும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்பட்டால் பிரச்சனைகள் குறையும்.
சிம்மம் இன்று நீங்கள் சற்று குழப்பமுடன் காணப்படுவீர்கள். இன்று பகல்11.18  க்கு மேல் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வெளி நபர்களிடம் அதிகம் பேசாமல் இருந்தால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
கன்னி இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
துலாம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. தொழில் புரிபவர்க்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும்.
விருச்சிகம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். எந்த செயலையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்கள் அலட்சியத்தால் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் ஏற்படும்.
தனுசு இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.
மகரம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். நீங்கள் செய்யும் வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும்.
கும்பம் உங்களுக்கு பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்க கூடிய நாளாக இந்த நாள் அமையும். மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். தொழில் புரிவோர் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் லாபம் அடையும் வாய்ப்பு உண்டாகும்.

மீனம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் ஒருசிலருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொன்பொருள் சேரும்.

No comments: