Saturday, January 7, 2017

இன்று - 07.01.2017

 இன்று -  07.01.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
07.01.2017, மார்கழி 23, சனிக்கிழமை, நவமி திதி காலை 10.22 வரை பின்பு  தசமி, அஸ்வினி நட்சத்திரம் மதியம் 02.18 வரை  பின்பு பரணி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் &  2, ஜீவன் & 1/2 , இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00. சனி பகவான் வழிபாடு நல்லது.சந்தி


கேது  செவ்
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
-  07.01.2017

ராகு
புதன் (வ)
சூரிய
சனி 

               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  07.01.2017

மேஷம்    இன்று நீங்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் வீட்டிற்கு ஆடம்பர பொருள் சேரும் யோகம் உண்டாகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.
ரிஷபம்    இன்று உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். சுப முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மன அமைதி குறைவும். பணிபுரிவோர்க்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு தாமதப்படும்.
மிதுனம்   இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுப முயறச்சிகளில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.
கடகம்     இன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இருக்கும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். உங்கள் குடும்பத்தில் தாராள பண வரவும், லஷ்மிகடாட்சமும் உண்டாகும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள்.
சிம்மம்     இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
கன்னி     இன்று நீங்கள் செய்யும் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது கூட கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் தவிர்ப்பது உத்தமம். மன அமைதி குறையும்.
துலாம்     உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும் சூழ்நிலை உருவாகும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம்      இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் பொருட்தெக்கம் இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
தனுசு      இன்று நீங்கள் குடும்பத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் மற்றவருடைய நன்மதிப்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெற்றாலும் அவர்களால் வீண் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.
மகரம்     இன்று நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில்  கவனம் செலுத்த வேண்டி வரும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
கும்பம்     இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். மன அமைதி இருக்கும்.


மீனம்            பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். தொழில் சற்று மந்தமாக நடைபெறும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவியால் நற்பலன் ஏற்படும்

No comments: