Friday, January 27, 2017

இன்று - 27.01.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
27.01.2017, தை 14, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 05.37 வரை பின்பு  வளர்பிறை பிரதமை, உத்திராடம் நட்சத்திரம் இரவு 09.49 வரை பின்பு திருவோணம், சித்தயோகம் இரவு 09.49 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் 0, ஜீவன் 0, தை அமாவாசை, அம்மன் வழிபாடு நல்லது, சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

செவ்




கேது 
சுக்கி  
               
திருக்கணித கிரக நிலை
27.01.2017



சூரிய சந்தி
ராகு
புதன் சனி 



               
குரு 


இன்றைய ராசிப்பலன் -  27.01.2017
மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
மிதுனம்
இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.
கடகம்
இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும்.
சிம்மம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் புதிய பதவிகள் வந்து சேரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
கன்னி
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.
துலாம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
தனுசு
இன்று உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பணபற்றாக்குறை நீங்கும்.
மகரம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகள் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.
கும்பம்
உறவினர்களுக்கிடையே வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மீனம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும்.
Post a Comment

Intha Naal