கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in
astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33
வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
இன்றைய பஞ்சாங்கம்
01.02.2017, தை 19, புதன்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 02.20 வரை பின்பு வளர்பிறை சஷ்டி, உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 10.06 வரை பின்பு ரேவதி, சித்தயோகம் இரவு 10.06 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சுபமுகூர்த்த நாள் சகல சுப முயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,
11.00-12.00
செவ் சந்தி
சுக்கி
|
|||
கேது
|
திருக்கணித கிரக நிலை
01.02.2017
|
||
சூரிய
|
ராகு
|
||
புதன் சனி
|
குரு
|
இன்றைய ராசிப்பலன் - 01.02.2017
மேஷம்
உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். சிலருக்கு புது பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். சேமிப்பு உயரும்.
ரிஷபம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.
மிதுனம்
உங்களுக்கு இன்று உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு நல்லது.
கடகம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சனைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபிரச்சனையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதை அல்லது கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.
கன்னி
இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெறும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கப்பெறும். உங்களின் நீங்கள் நினைத்தது எளிதில் நிறைவேறும்.
விருச்சிகம்
நீங்கள் இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.
தனுசு
உங்களுக்கு இன்று பணவரவு சுமாராகத்தான் இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்
இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மிகடாட்சமும் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்களை வாங்கவும் விற்கவும் இன்று அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் தவிர்ப்பது உத்தமம். பூர்வீக சொத்துக்களை விற்பதில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற நல்ல பலன்களும் கிடைக்கும்.
மீனம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் புரிவோர்க்கு அவர்கள் தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சேமிப்பு உயரும்.
No comments:
Post a Comment