Saturday, February 11, 2017

இன்று - 11.02.2017

இன்று -  11.02.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
11.02.2017, தை 29, சனிக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 05.05 தேய்பிறை துதியை, ஆயில்யம் நட்சத்திரம் காலை 08.54 வரை பின்பு மகம், மரணயோகம் காலை 08.54     வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, சனி பகவான் வழிபாடு நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.

செவ்
சுக்கி



கேது 
திருக்கணித கிரக நிலை
11.02.2017
சந்தி
சூரிய புதன்
ராகு
சனி


               
குரு (வ)


இன்றைய ராசிப்பலன் -  11.02.2017
மேஷம்
இன்று நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இதுவரை இருந்த கடன் பிரச்சனைகள் குறையும் 
ரிஷபம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.
மிதுனம்
இன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருள் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் லாபகரமாக இருக்கும்.
கடகம்
இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு குறையும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் வெற்றி அடையலாம்.
சிம்மம்
இன்று உங்களுக்கு விடியற்காலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
கன்னி
இன்று சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனை குறையும். பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் தீரும்.
துலாம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலையில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும்.
தனுசு
இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மன-ஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவுக்கு குறையும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. மற்றவர்களிடம் பேசும்பொழுது கவனமுடன் பேச வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
கும்பம்
இன்று உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படும். வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும்.
மீனம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

No comments: