Sunday, February 26, 2017

மார்ச் மாத ராசிப்பலன் - 2017

மார்ச் மாத ராசிப்பலன் - 2017

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



                                                               
செவ்   சுக்கி
---சந்தி



சூரிய கேது புதன்
திருக்கணித
கிரக நிலை


ராகு
சனி


குரு  (வ)

கிரக மாற்றம்
02.03.2017 மேஷ செவ்வாய்
05.03.2017 சுக்கிரன் () ஆரம்பம்
11.03.2017 மீன புதன்
14.03.2017 மீன சூரியன்
27.03.2017 மேஷ புதன்

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே தன்னுடைய கௌரவத்திற்கும், பெயருக்கும் களங்கம் எற்படாதவாறு பொறுப்புடன் நடந்து கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானமான 11ம் வீட்டில் மாத முற்பாதியில் சூரியன் புதன் சஞ்சரிப்பதாலும் சனி அதிசாரமாக பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் சாதகமான பலன்களை அடைவீர்கள். குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எல்லா வகையிலும் ஏற்றம் உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். எதிர் பாராத தன வரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தி ஆகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றங்களை அடைய முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் அபிரிமிதமான லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடந்த கால கடன்களும் குறையும்.
பரிகாரம். முருக வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம்  17.03.2017 இரவு 08.40 மணி முதல் 20.03.2017 காலை 09.11 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு சனி அதிசாரமாக அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும்  சுக்கிரன் 11ல் சஞ்சாரம் செய்வதாலும் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல் உண்டாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். உடன் பிறந்தவர்களால் சுமாரான சாதகப் பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் விலகி படிப்படியான ஒற்றுமை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடை தாமதங்களை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகி எதிர்பார்த்த லாபம் அமையும். சிலருக்கு புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் உண்டாகும். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.
பரிகாரம். சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  20.03.2017 காலை 09.11 மணி முதல் 22.03.2017 இரவு 08.33 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம்3,4ம்பாதங்கள்,திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும் பிறரை எளிதில் நம்பாத குணமும் கொண்ட உங்களுக்கு 10ல் சுக்கிரன் 2ம் தேதி முதல் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் அதிகரிக்க கூடிய மாதமாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார ரீதியாக சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலும் ஒற்றுமை பலப்படும். எதிலும் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் உறவினர்களிடம் நல்லப் பெயரை எடுத்துவிட முடியும். உத்தியோக ரீதியாக வெளியூர் வெளிநாட்டு பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கடன்கள் யாவும் குறையும். திருமண சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். உடல் நிலையில் சிறுசிறுப் பிரச்சினைகளை சந்தித்தாலும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்.
பரிகாரம். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்  22.03.2017 இரவு 08.33 மணி முதல் 25.03.2017 அதிகாலை 04.53 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே எந்தவொரு செயலிலும் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப  நண்டுபிடி போட்டு செய்து  முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு சனி பகவான் அதிசாரமாக 6ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள் என்றாலும் மாத முற்பாதியில் சூரியன் 8ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. 2ல் ராகு இருப்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிர்பாராத தீடீர் தன வரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் என்றாலும் நெருங்கியவர்களிடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது மிகவும் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வுகள் கிடைக்கப் பெறும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் அனுகூலப்பலன்களும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் பொருகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடனிருப்பது நல்லது.
பரிகாரம். சிவ வழிபாடு அம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்  25.03.2017 அதிகாலை 04.53 மணி முதல் 27.03.2017 காலை 09.38 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு சமசப்தம ஸ்தானமான 7ல் சூரியன், 8ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை தருவார்கள். குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நியாயப்படி உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் கூட தாமதமாகும். பொருளாதார ரீதியாக தட்டுபாடுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை  வரவுக்கு மீறிய செலவுகளை உண்டாக்கும். உங்கள் முன்கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடித்தால் எடுக்கும் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்க முடியும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எந்த வேலையையும் சிரமப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலிலும் பிரச்சினைகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும்.
பரிகாரம். விநாயகர் மற்றும் முருகப் பெருமானை தரிசனம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  27.02.2017 இரவு 12.09 மணி முதல் 02.03.2017 அதிகாலை 03.16 மணி வரை. மற்றும் 27.03.2017 காலை 09.38 மணி முதல் 29.03.2017 காலை 11.39 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே எவ்வளவு அவசரமான  காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாத முற்பாதியில் சூரியன் 6ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்குமென்றாலும் 4ல் சனி 2ம் தேதி முதல் 8ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். உடல் நிலையில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவினை உண்டாக்கும். குடும்பவாழ்வில் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். என்றாலும் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கூட்டுத்தொழில் சுமாரான லாபத்தை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம். குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது, முருகவழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்      02.03.2017 அதிகாலை 03.16 மணி முதல் 04.03.2017 அதிகாலை 05.42 மணி வரை. மற்றும் 29.03.2017 பகல் 11.39 மணி முதல் 31.03.2017 மதியம் 12.35 மணி வரை.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மன நிலையை கொண்ட உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ம் வீட்டில் அதிசாரமாக சனி சஞ்சரிப்பதும். மாத பிற்பாதியில் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் எல்லா வகையிலும் அனுகூலத்தை தரும் அமைப்பாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தாராள தன வரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்களும் பகைமை மறந்து உறவு கொண்டாடுவார்கள். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உத்தியோக உயர்வும், தடைப்பட்ட ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை எளிதாக ஈடுபடுத்த முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்ததை விட லாபங்கள் சிறப்பாக அமையும்.
பரிகாரம். முருக வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்  04.03.2017 காலை 05.42 மணி முதல் 06.03.2017 காலை 08.24 மணி வரை. மற்றும் 31.03.2017 மதியம் 12.35 மணி முதல் 02.04.2017 மதியம் 02.05 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு சுகஸ்தானமான 4ல் சூரியன் கேது சஞ்சரிப்பது தேவையில்லாத அலைச்சலை தரும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். 2ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சைக் குறைப்பதும், உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. எதிரிகளின் பலம் அதிகரித்து உங்கள் பலம் குறையும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்திலும் ஒற்றுமையற்ற சூழ்நிலைகளே நிலவும். உற்றார் உறவினர்களும் சாதகமின்றி செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்பட்டு மன அமைதி குறையும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்றாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது நம்பிக்கையை கொடுக்கும்.
பரிகாரம். பிரதோஷ வழிபாடு, அம்மன் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் நன்மைகிட்டும்.
சந்திராஷ்டமம்  06.03.2017 காலை 08.24 மணி முதல் 08.03.2017 பகல் 11.59 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் ஒதுங்கி நடந்து கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பது நெருக்கடிகளை தரும் அமைப்பென்றாலும் மாத முற்பாதியில் 3ல் சூரியன், 4ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். 10ல் சஞ்சரிக்கும் குரு வக்ர கதியில் இருப்பதால் பணவரவிலிருந்த தேக்கங்கள் விலகி சாதகமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களில் அகூலபலன் அமையும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தி ஆகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொககளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும் என்றாலும் சற்று கவனமாக செயல்படுவது நல்லதுஉத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்துக் கொள்ளலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று முன்னேற்றப் பலன்கள் உண்டாகும்.
பரிகாரம். சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்  08.03.2017 பகல் 11.59 மணி முதல் 10.03.2017 மாலை 04.59 மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால்  மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பழகும் நிதானம் கொண்ட உங்களுக்கு 2ல் சூரியன், கேது 2ம் தேதி முதல் 4ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானமாக இருப்பது நல்லது. மாத பிற்பாதியில் சூரியன் 3ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினை பெற முடியும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். புத்திர வழியில் வீண் செலவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதாரம் சுமாராக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமற்ற பலனே கிடைக்கும். நெருங்கியவர்களே எதிரிகளாக மாறும் சூழ்நிலை உருவாகும்உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷனை சந்திப்பீர்கள். திறமைகளுக்கு தகுந்த உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும்.
பரிகாரம். துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்  10.03.2017 மாலை 04.59 மணி முதல் 12.03.2017 இரவு 11.55 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டு எல்லா இடத்திலும் மதிப்புடன் வாழும் உங்களுக்கு ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதும் 2ல் சுக்கிரன், 2ம் தேதி முதல் 3ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்ககூடிய மாதமாக இம்மாதம் இருக்கும். 1,7ல் கேது ராகு சஞ்சரிக்க இருப்பதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்பட கூடும் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களும் சில நேரங்களில் பகைமை பாராட்டுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலப்பலன் ஏற்படும். எதிர்பாராத தீடீர் பண வரவுகளால் பொருளாதார நிலை உயர்வடைந்து கடன்களும் குறையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் சமுதாயத்தில் செல்வாக்கு உயரும்வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் லாபமும் அனுகூலமும் உண்டாகும். தொழில் வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களுக்கு எல்லா வகையிலும் உயர்வுகள் உண்டாகும்.
பரிகாரம். சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  12.03.2017 இரவு 11.55 மணி முதல் 15.03.2017 காலை 09.11 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன  ராசி நேயர்களே தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு ராசியதிபதி குரு வக்ர கதியில் இருப்பதாலும், 12ல் சூரியன் புதன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் சுக்கிரன் 6ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் தேவையற்ற வீண் பிரச்சனைகள் தோன்றும். உடல்  ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலார்களை அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம். பிரதோஷ காலங்களில் சிவனை வணங்குவதும், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் நன்மையை தரும்.
சந்திராஷ்டமம்  15.03.2017 காலை 09.11 மணி முதல் 17.03.2017 இரவு 08.40 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

02.03.2017 மாசி 18 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்த்திதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

09.03.2017 மாசி 25 ஆம் தேதி வியாழக்கிழமை துவாதசிதிதி பூச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை

15.03.2017 பங்குனி 02 ஆம் தேதி புதன்கிழமை திருதியைதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை

16.03.2017 பங்குனி 03 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்த்திதிதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை

23.03.2017 பங்குனி 10 ஆம் தேதி வியாழக்கிழமை தசமிதிதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை

26.03.2017 பங்குனி 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரயோதசிதிதி சதய நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை


30.03.2017 பங்குனி 17 ஆம் தேதி வியாழக்கிழமை திரிதியைதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். வளர்பிறை
Post a Comment

Intha Naal