கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in
astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33
வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
இன்றைய பஞ்சாங்கம்
27.02.2017 மாசி 15 திங்கட்கிழமை, பிரதமை திதி இரவு 07.06 வரை பின்பு வளர்பிறை துதியை, சதயம் நட்சத்திரம் காலை 06.49 வரை பின்பு பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.56 பின்பு உத்திரட்டாதி, சித்தயோகம் காலை 06.49 வரை பின்பு மரணயோகம் பின்இரவு 05.56 பின்பு சித்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 0, கரிநாள், தனியனாள், சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
செவ் சுக்கி
|
|
|
|
சூரிய சந்தி கேது புதன்
|
திருக்கணித கிரக நிலை
27.02.2017
|
|
|
|
ராகு
|
||
சனி
|
|
|
குரு (வ)
|
இன்றைய ராசிப்பலன் - 27.02.2017
மேஷம்
இன்று உங்கள் பேச்சு திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வங்கி சேமிப்பு உயரும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
மிதுனம்
இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்க்காத செலவுகள் தோன்றும். வீட்டில் ஒற்றுமை குறையும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாராம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கடகம்
நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
சிம்மம்
இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் கிட்டும். பணவரவு தாராளமாக இருக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாக முடியும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற தடைகள் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புடன் செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும்.
துலாம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் டென்ஷனை ஏற்படுத்தும். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். கடன் சுமை ஓரளவு குறையும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும்.
மகரம்
இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி குறையும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் வேலைபளு குறையும். சேமிப்பு குறையும்.
கும்பம்
இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்சியை கொடுக்கும். சொத்துக்கள் வாங்க விற்க நல்ல அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். வருமானம் பெருகும்.
மீனம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.
No comments:
Post a Comment