Friday, March 17, 2017

இன்று - 17.03.2017

இன்று -  17.03.2017

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்


செல்வம், செல்வாக்கு யார் மூலம் கிடைக்கும்?
-     &முனைவர் முருகு பாலமுருகன்

இந்த வார பஞ்சாங்கம்    &முனைவர் முருகு பாலமுருகன்

வார ராசிபலன் 19&3&2017 முதல் 25&3&2017 வரை
                              &முனைவர் முருகு பாலமுருகன்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!
&டாக்டர் இரா. ரகு M,Sc Astro

நூறாண்டு வாழும் யோகம்குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!                          &பி. ராஜசேகரன் M.Phil Astro

நலம் பெருக்கும் நாளும் செயலும்!
&மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

மூலத்தில் பிறந்தோர் முன்னேறும் நெறிகள்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
&ஜோதிஷண்முகம்

கடன் சுமை அகற்றும் சதுரங்க பந்தம்!
&விசு அய்யர்

அண்ணனை பகைக்கும் தம்பிகள் யார்?
&. சரவணன் Gendral Sec ICAS

உலக அழகிக்கும் தாமதத் திருமணம் ஏன்?
&ஜோதிடச்சுடர் . ஞானரதம் M.A.Astro. M,Phil
உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி!
&முனைவர் முருகு பாலமுருகன்


இன்றைய  பஞ்சாங்கம்
17.03.2017, பங்குனி -4, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி பின் இரவு 03.26 வரை பின்பு தேய்பிறை சஷ்டி,               விசாகம் நட்சத்திரம் பின்இரவு 03.19 வரை பின்பு அனுஷம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 0, அம்மன் வழிபாடு உத்தமம்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  
சூரிய புதன்
சுக்கி(வ)
செவ்


கேது 
               
               
திருக்கணித கிரக நிலை
17.03.2017
ராகு
சனி

சந்தி  
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  17.03.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அனுபவமுள்ளவரின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். ஆடம்பர பொருட்களால் வீண் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும்.
கடகம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
சிம்மம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு ஈடுபடுவார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். பெற்றோரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியான வெளிவட்டார நட்பு ஏற்படும். வீட்டுதேவைகள் பூர்த்தியாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.
துலாம்
இன்று உறவினர்கள் மூலம் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அடைவீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் எதிரிகளால் பிரச்சனைகள் தோன்றும். குடும்பத்தில் பெரியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும்.
தனுசு
இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை கூடும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். புதிய நட்பு ஏற்படும். பொருளாதாரம் மேலோங்கும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை காணப்படும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். பணபற்றாக்குறை ஓரளவு குறையும்.
மீனம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.
Post a Comment

Intha Naal