Saturday, March 18, 2017

இன்று - 18.03.2017

இன்று -  18.03.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


இன்றைய  பஞ்சாங்கம்
18.03.2017, பங்குனி -5, சனிக்கிழமை,      சஷ்டி திதி பின் இரவு 05.53 வரை பின்பு தேய்பிறை சப்தமி, அனுஷம் நட்சத்திரம் பின் இரவு 06.14 வரை பின்பு கேட்டை, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1/2,சஷ்டி விரதம் முருக வழிபாடு உத்தமம்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.

சூரிய புதன் சுக்கி (வ)
செவ்


கேது 
திருக்கணித கிரக நிலை
18.03.2017



ராகு
சனி
  சந்தி
               
குரு (வ)

இன்றைய ராசிப்பலன் -  18.03.2017
மேஷம்
இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. எந்த செயலிலும் கவனம் தேவை.
ரிஷபம்
இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் சிறப்புடன் இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். புதிய இடம் பொருள் வாங்க அனுகூலமான நாளாகும்.
மிதுனம்
இன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு புது தெம்பைத் தரும்.
கடகம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளால் பிரச்சனைகள் ஏற்படும். சுபகாரியங்களில் மந்த நிலை இருக்கும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.
சிம்மம்
இன்று உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும்.
கன்னி
இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
துலாம்
இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். திருமண சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். ஆன்மீக காரியங்களில் அதிக ஈடுபாடு உண்டாகும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
தனுசு
இன்று உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றத்தால் டென்ஷன் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிலும் நிதானம் தேவை.
மகரம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய சொத்துக்கள் வாங்க நல்ல அனுகூலமான நாளாகும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைகள் பாராட்டப்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சேமிப்பு உயரும்.
மீனம்

இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் குறையும்.
Post a Comment

Intha Naal