Thursday, March 30, 2017

இன்று - 30.03.2017

இன்று -  30.03.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



 வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

மின் சாதனங்களை எங்கு அமைக்கலாம்?-  -முனைவர் முருகு பாலமுருகன்

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்!-  -சரவணன் Gendral Sec ICAS


வார ராசிபலன் (02-04-2017 முதல் 08-04-2017 வரை) பங்குனி 20 முதல் 26 வரை 
முனைவர் முருகு பாலமுருகன்

இந்த வார பஞ்சாங்கம்!--                  முனைவர் முருகு பாலமுருகன்

உன்னதப் பலன்களை உடனடியாகத் தரும் 30 வகை பரிகாரங்கள்!-
ஜோதிட ஞானி சிரோன்மணி கடகம் இராமசாமி

குறியீடுகளின் தத்துவம்! –                  சித்தயோகி சிவதாசன் ரவி

உத்திராடத்தினரின் உயர்வு பெறும் வழிகள்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

ராகு காலத்திலும் நல்ல நேரம்!
-மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro

ஆபரண்ங்களை அள்ளிச் சேர்க்கும் ஆறுமுகன்! (வாரம் ஒரு பரிகாரம்)-                                                -விசு அய்யர்

ஒளிமயமான எதிர்காலம் மூவரிடத்தில்!
சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

பாலாரிட்டங்கள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பிராஜசேகரன் M.Phil Astro

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     
-முனைவர் முருகு பாலமுருகன்

இன்றைய  பஞ்சாங்கம்
30.03.2017, பங்குனி - 17, வியாழக்கிழமை, திரிதியை திதி இரவு 11.43 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி, அஸ்வினி நட்சத்திரம் காலை 09.24 வரை பின்பு பரணி, அமிர்தயோகம் காலை 09.24 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, சுபமுகூர்த்த நாள், சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சூரிய சுக்கி(வ)
செவ் சந்தி புதன்


கேது 
திருக்கணித கிரக நிலை
30.03.2017



ராகு
சனி
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  30.03.2017
மேஷம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை தரும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும்.
மிதுனம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
கடகம்
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் பிரச்சனைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கன்னி
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவைவியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
துலாம்
இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். ஒருசிலர் பொன்பொருள் வாங்கி மகிழ்வர்கள். உறவினர்கள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை தரும்.
விருச்சிகம்
இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். புதிய பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
தனுசு
இன்று குடும்பத்தினருக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
மகரம்
இன்று உங்களின் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து சந்தோஷம் கூடும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவர். புதிய பொருள் வீடு வந்து சேரும்.
கும்பம்
இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.
மீனம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை கூடும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கடன் பிரச்சனை தீரும்.
Post a Comment

Intha Naal