Rasi palangal

Saturday, March 25, 2017

தமிழ் புத்தாண்டு பலன்கள் ரிஷபம்

தமிழ் புத்தாண்டு பலன்கள் ரிஷபம் 

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

 


ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே தன்னுடைய இனிமையான சுபாவத்தால் பிறரை எளிதில் வசப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும், கடன்களும் படிப்படியாகக் குறையும். சிலருக்கு வீடு வாகனம் வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமையும். ஆண்டின் தொடக்கத்தில் 5ல் சஞ்சாரிக்கும் குரு ஆவணி 27ம் தேதி முதல் 6ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதாலும் ஜப்பசி 9ம் தேதி முதல் சனி 8ம் வீட்டிற்கு மாறுதலாவதால் அஷ்டமச்சனி தொடங்கவுள்ளதாலும் ஆண்டின் பிற்பாதியில் கவனமாக செயல்படுவதே உத்தமம். நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடும் என்பதால் விட்டுக் கொடுத்துச் நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் மறைமுக எதிர்ப்புகள், வேலையாட்களின் ஒத்துழைப்பற்ற நிலை போன்றவற்றால் அபிவிருத்தி குறையும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்த கொண்டால் மட்டுமே அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு அஷ்டமச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதி என்பதால் அதிக கெடுதியை செய்யமாட்டார். ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசிக்கு 4ல் ராகு 10ல் கேது சஞ்சாரம் செய்வதால் தேவையில்லாத அலைச்சல், தொழில் வீண் பிரச்சனை ஏற்படும் என்றாலும் ஆவணி 2ம் தேதி ஏற்படவிருக்கும் சர்ப கிரக மாற்றத்தால் 3ல் ராகு 9ல் கேது சஞ்சரிக்க இருப்பதால் குரு சனி சாதகமற்று சஞ்சரித்தாலும் எதையும் சமாளித்து முன்னேற்றங்களை பெற முடியும்.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அவ்வப்போது சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஆண்டின் முற்பாதியில் சாதகமான பலன்களை அடைய முடியும். ஜப்பசி மாதம் 9ம் தேதி முதல் அஷ்டச்சனி தொடங்க இருப்பதால் உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. உற்றார், உறவினர்களால் தேவையற்ற மன கவலைகள் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும் பெரிய கெடுதிகள் இல்லை. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது மன நிம்மதியை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொலைதூர பயணங்களால் அலைச்சல் அதிகரித்து உடல்நிலை சற்று சோர்வடைந்தாலும் அதன் மூலம் சற்று அனுகூலம் பலன்களை அடைந்து விட முடியும். குடும்பத்திலுள்ளவர்களால் சற்று மருத்துவ செலவுகளை எதிர்கொள்வீர்கள்.
உத்தியோகம்
ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் இந்த கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். ஊதிய உயர்வுகளால் வாழ்க்கை தரம் உயரும். பணியில் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி உயர்வினை அடைவீர்கள். பிற்பாதியில் எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரிங்களை ஆண்டின் முற்பாதியில் செய்வது நல்லது. புதிய கூட்டாளிகளின் சேர்க்கை கிடைக்கப் பெறும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் அலைச்சல் இருந்தாலும் ஓரளவுக்கு அனுகூலமும் இருக்கும் அரசு வழியில் கடனுதவிகள் தாமதப்படும்
கொடுக்கல் வாங்கல்
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்றவற்றை எதிர்பார்த்த லாபம் கிட்டும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளிக்க முடியும்.
அரசியல்
செல்வம், செல்வாக்கு, புகழ், பெருமை யாவும் உயரும். ஆண்டின் முற்பாதி வரையில் ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். மாண்புமிகு உயர் பதவிகள் கிடைக்கப் பெறும். பிற்பாதியில் மக்களின் தேவையை உணர்ந்து அவற்றை நிறைவேற்றினால் மட்டுமே நற்பெயரை எடுப்பீர்கள்.
விவசாயிகள்
மகசூல் சற்று சிறப்பாக இருக்கும். சந்தையில் விளை பொருட்கள் நல்ல விலைபோகும். தாராள தன வரவுகளும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபத்தைப் பெறுவீர்கள். ஆழ்கிணறு போடுவது புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவையும் நிறைவேறும். ஆண்டின் பிற்பாதியில் பங்காளிகளை அனுசரித்துச் செல்வதும் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் மிகவும் நல்லது.
கலைஞர்கள்
எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் கொண்ட படவாய்ப்புகள் கிடைக்கப் பெறும், வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அமையும். இசை மற்றும் பாடல் துறைகளில் உள்ளவர்களும் ஏற்றமிகு பலன்களைப் பெற முடியும். ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார நிலையில்  நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் சுக வாழ்வு பாதிப்படையும்.  
பெண்கள்
தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியம் அமையும். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். புதிய பொருட் சேர்க்கைகளும், ஆடை, ஆபரணமும் சேரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பணிபுரியும் பெண்கள் ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறுவா£ர்கள்.
மாணவ  மாணவியர்
கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சாதனைகள் படைக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பெற்றறோர், ஆசிரியருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிக்கும் நல்ல பெயரை வாங்கித் தருவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் உடன் பழகும் நண்பர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண்                    - 5,6,8
நிறம்                  - வெண்மை, நீலம்,
கிழமை           - வெள்ளி,சனி
கல்                      - வைரம்,
திசை                                 - தென்கிழக்கு,
தெய்வம்        - விஷ்ணு, லட்சுமி


No comments: