Rasi palangal

Sunday, March 26, 2017

தமிழ் புத்தாண்டு பலன்கள் கடகம்

தமிழ் புத்தாண்டு பலன்கள்  கடகம்  

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


 

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே உயர்ந்த லட்சியங்களும், நல்ல அறிவாற்றலும் மிகுந்த கற்பனை சக்தியும், கொண்டவராக விளங்கும் உங்களுக்கு ஹேவிளம்பி வருடத்தில் சனி ருண ரோக ஸ்தானமான 6ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலனை அடைவீர்கள்உங்களுக்குள்ள பிரச்சினைகள், சங்கடங்கள் எல்லாம் முழுமையாக குறைந்து முன்னேற்றத்தை அடைவீர்கள் 6ல் அதிசாரமாக சஞ்சரிக்கும் சனி ஆனி 6ம் தேதி முதல் ஜப்பசி 9ம் தேதி வரை பின்னோக்கி 5ம் வீட்டில் சஞ்சரித்து விட்டு பின்பு முழுமையாக ஜப்பசி 9ம் தேதி முதல் 6ல் சஞ்சரிக்கவுள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகளும் ஓர் முடிவுக்கு வரும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்ஆண்டு கோளான குரு பகவான் இந்தாண்டு 3,4 ஆகிய பாவங்களில் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சிறப்பான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவும். உற்றார், உறவினர்கள் உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கடன் பிரச்சனைகளும் ஒரளவுக்கு குறையும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். சனிபகவான் சாதகமான சஞ்சரிப்பதால் எந்த வித சிக்கலையும் சமாளித்து அனுகூலமான பலன்கள் அடைவீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்குபின் வெற்றி கிட்டும். உங்கள் ராசிக்கு 2,8ல் சஞ்சரிக்கும் ராகு கேது ஆவணி மாதம் 2ம் தேதி முதல்  1,7ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மற்றவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் மட்டுமே அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். அடிக்கடி வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். வீடு மனை வாங்கும் முயற்சிகள் தாமதப்படும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சுபகாரியங்கள் தடைக்கு பின்பு கைகூடும். சற்று கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்
உடல்நிலையில் முன்னேற்றமான பலன்களே இருக்கும். சிறுசிறு பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது வீண் அலைச்சலைக் குறைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். எதிரிகளின் பலம் குறையும். தெய்வ வழிபாடுகளால் மன நிம்மதி உண்டாகும்.
உத்தியோகம்
எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சல் டென்ஷனை உண்டாக்கும். எந்த கரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க நேரிடும். அதிகாரிகளின் ஆதரவைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள நேரிடும். ஜப்பசி மாதத்திற்கு பின்பு எதிர்பார்க்கும் உயர்வுகளையும் தடைப்பட்ட நிலுவைத் தொகைகளையும் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளு சற்று குறையும்
தொழில் வியாபரம் 
தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை வென்று லாபம் அடைவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் கவனம் தேவை. சனியின் சாதகமான சஞ்சாரத்தால் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றத்தை பெற முடியும். கூட்டாளிகளிடம் கவனம் தேவை. புதிய முயற்சிகளில் சில தடை தாமதங்கள் நிலவினாலும் முடிவில் சாதகப்பலன் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்றவற்றில் சில சோதனைகளைச் சந்தித்தாலும் தடைக்கு பின்பு அனுகூலமான பலன்கள் அடைவீர்கள். கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி இருக்கும் என்பதால் பெரிய முதலீடுகளைத் தவிர்த்து விடுவது நல்லது. பழைய கடன்கள் கடின முயற்சிக்கு பின் வசூலாகி பிரச்சனைகளை குறைக்கும்.
அரசியல்
எதிலும் கவனமுடன் செயல்பட்டால் பெயர், புகழை தக்க வைத்துக் கொள்ளலாம். மூத்த தலைவர்களிடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் சில தடைகள் உண்டாவதால் நிம்மதியின்றி இருப்பீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உடனிருப்பவரை அனுசரித்து நடப்பது நல்லது.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நீர் பற்றாக்குறை வரப்பு தகாரறு என சில பிரச்சனைகளை சந்தித்தாலும் பட்ட பாட்டிற்கான பலனை அடைந்து விட முடியும். அரசு வழியிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியினை அடைவீர்கள். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்குவது, பூமி, மனை வாங்குவது போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது உத்தமம்.
கலைஞர்கள்
கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது உத்தமம்எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் அமைய சில தடைகள் இருக்கும். நண்பர்கள் உதவியால் நெருக்கடிகள் குறையும். பொருளாதார நிலை ஒரளவுக்கு திருப்தி தரும். வெளிநாட்டு பயணங்களால் சற்றே அலைச்சல் அதிகரிக்கும்.
பெண்கள்
உடல்நிலை சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் சில தடை தாமதங்களை சந்தித்தாலும் விடா முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை ஓரளவுக்கு அமையும் என்றாலும் வீடு வாகனம் வாங்கும் முயற்சிகளில் கடன்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் நிலவும். புதிய வேலை தேடுபவர்களுக்கு ஜப்பசி மாதத்திற்கு மேல் சிறப்பான வேலை வாய்ப்பு அமையும்.
மாணவ மாணவியர்
கல்வியில் சற்று மந்த நிலை நிலவினாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும். தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பதும், நண்பர்களின் சகவாசங்களைக் குறைத்துக் கொள்வது நன்மை தரும். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - திங்கள் வியாழன்
கல் - முத்து
திசை - வடகிழக்கு
தெய்வம் - வெங்கடாசலபதி


No comments: