Rasi palangal

Saturday, March 25, 2017

தமிழ் புத்தாண்டு பலன்கள் மிதுனம்

தமிழ் புத்தாண்டு பலன்கள்  மிதுனம்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

 

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே பலர் முன்னிலையில் ரசிக்கும் படி பேசக்கூடிய ஆற்றலும், சமூகவாழ்வில் ஆர்வம் உடையவராகவும் விளங்கும் உங்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சனி அதிசாரமாக 7ல் சஞ்சரிப்பதாலும், ஆண்டு கோளான குரு சுக ஸ்தானமான 4ம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் அலைச்சல் டென்ஷன், அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும் என்றாலும் சனிபகவான் ஆனி 6ம் தேதி முதல் ஜப்பசி 9ம் தேதி வரை ருண, ரோக ஸ்தானமான 6ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சிறப்பான லாபம் இருக்கும். 3ம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களின் உதவியால் எந்தவித நெருக்கடிகளையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். ஆவணி 27ம் தேதி முதல் குரு பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். அழகிய குழந்தை பாக்கியமும் அமையும். பண வரவு தாராளமாக இருப்பதால் வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்பிள்ளைகளால் மகிழ்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்து வழியில் இருந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் அதனால் பொருளாதார மேன்மைகளும் உண்டாகும். உங்கள் ராசிக்கு 3,9ல் சஞ்சரிக்கும் சர்ப கிரகங்கள் ஆவணி 2ம் தேதிக்கு பிறகு 2ல் ராகு, 8ல் கேதுவாக சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு வயிறு சம்மந்தப்படட பாதிப்புகள், அஜீரண கோளாறு போன்றவையும் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்வீர்கள். சனி ஜப்பசி 9ம் தேதி முதல் 7ம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளதால் கண்ட சனி தொடங்கவுள்ளது. இதனால் கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப சூழல் ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமாகவே இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளித்து விட முடியும். உற்றார், உறவினர்களின் ஆதரவு திருப்தி தரும். வருட முற்பாதியில் குரு 4ல் உள்ளதால் எதிலும் சற்று நிதானமாக நடந்து கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகள் ஆவணி மாதத்திற்கு பிறகு எளிதில் கைகூடும், வீடு மனை வாங்கும் முயற்சிகளில் கடன்கள் உண்டாகும்
உடல் ஆரோக்கியம்
உடல்நிலை ஓரளவுக்கு சுறுசுறுப்பாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களால் அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும். சுப செய்திகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும் என்றாலும் அலைச்சலும் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மூலம் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றாலும் அதனால் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். சில நேரங்களில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் எடுத்த பணிகளை ஒழுங்காக முடிக்க முடியாமல் போகும். எந்த காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை எதிர்கொண்டாலும் உங்களுக்கு கிடைக்க வேண்டி லாபம் தடையின்றி கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் இருந்த தேக்க நிலை படிப்படியாக விலகி முன்னேற்றங்கள் ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மட்டும் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது வேலையாட்களிடம் கவனமாக இருப்பது நல்லது.
கொடுக்கல் வாங்கல்
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபம் அமையும். முடிந்த வரை கொடுக்கல் வாங்கலில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சில தடைகள் நிலவினாலும் திருப்திகரமாக வசூலாகும்.
அரசியல்
பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மக்களின் ஆதரவைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிவரும். தேடிவரும் கௌரவ பதவிகளைத் தவற விடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வருவாய்க்கு குறை இருக்காது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உடல் நிலையில் பாதிப்பு போன்றவை உண்டாகும்.
விவசாயிகள்
விவசாயத்தில் பட்டபாட்டிற்கேற்ற பலனைப் பெற்று விட முடியும். சில நேரங்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் பயிர்கள் வீணாகும் நிலை ஏற்பட்டாலும் தகுந்த நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை முடித்து விடுவீர்கள். காய்கனி மற்றும் பழவகை, கீரை வகைகளாலும் ஒரளவுக்கு லாபம் கிட்டும். கால் நடைகளுக்கு சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவற்றின் மூலம் அடைய வேண்டிய லாபங்களை அடைந்து விட முடியும்.
கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் சிறப்பாக இருந்தாலும் பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். வரவேண்டிய பாக்கி பண தொகைகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். இடைவிடாத பயணங்களால் உடல்நிலை சோர்வடையும். விடா முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றிகளை பெற்று விடுவீர்கள்.
பெண்கள்
பொருளாதார நிலை சிறப்பாக அமையும் என்றாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் ஆவணி மாதத்திற்கு பிறகு கைகூடும். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை அடைவீர்கள். புதிய பொருட் சேர்க்கைகள் அமையும். உடல் நிலையில் சற்று கவனம் செலுத்தவது நல்லது. தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும்.
மாணவ  மாணவியர்
கல்வியில் சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பது நல்லது. உயர் கல்விக்காக எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்கு பின் அமையும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு திருப்திகரமாக இருக்கும்

அதிர்ஷடம் அளிப்பை
எண் - 5,6,8
நிறம் - பச்சை, வெள்ளை
கிழமை - புதன், வெள்ளி
கல் - மரகதம்
திசை - வடக்கு
தெய்வம் -விஷ்ணு


No comments: