Thursday, April 6, 2017

இன்று - 06.04.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com




வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

ராஜா, எஸ்.பி.பி மோதல் ஏன்?-             அம்சி விவேகானந்தன்

கும்பிட வேண்டிய குலதெய்வம் எது? (வாரம் ஒரு பரிகாரம்)-     விசு அய்யர்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro

கல்விக்கு ஜோதிடம் அவசியம்!-       சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

அரிட்டமும் ஆயுளும்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பிராஜசேகரன் M.Phil Astro

வேண்டுதல்களை நிறைவேற்றும் முத்திரைகள்! – சித்தயோகி சிவதாசன் ரவி

எமகண்டம், குளிகை காலம்!
-மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்!-  -சரவணன் Gendral Sec ICAS

சித்திரை 1-ல் மலரும் “ஹேவிளம்பி” புத்தாண்டுப் பலன்கள்!-     -
முனைவர் முருகு பாலமுருகன்

திருவோணத்தினரின் திறன் பெருக்கும் பரிகாரங்கள்! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

வெளிநாடு செல்லும் யோகமுடையவர் யார்?- ஜோதிடச்சுடர் ந. ஞானரதம்

வார ராசிபலன் (09-04-2017 முதல் 15-04-2017 வரை) பங்குனி 27 முதல் சித்திரை 2 வரை

முனைவர் முருகு பாலமுருகன்

இன்றைய  பஞ்சாங்கம்
6.04.2017, பங்குனி - 24, வியாழக்கிழமை, தசமி திதி காலை 09.16 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 11.00 வரை பின்பு மகம், சித்தயோகம் இரவு 11.00 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, நவகிரக வழிபாடு உத்தமம், தனிய நாள், புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சூரிய
சுக்கி (வ)
செவ்
புதன்


கேது 
திருக்கணித கிரக நிலை
06.04.2017

சந்தி

ராகு
சனி
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  06.04.2017

மேஷம்
இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறைந்து பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவாகும்வியாபார ரீதியான செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த நெருகக்கடிகள் சற்று குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும்.
கடகம்
இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் முலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக் கூடும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக அமைவார்கள். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் ஏற்படாது.
கன்னி
இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
துலாம்
இன்று உடல்நிலையில் புது தெம்பும் உற்சாகமும் இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகதான் இருக்கும். உத்தியோகத்தில் சுலபமான காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
தனுசு
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பது, அல்லது கடன் பெறுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மகரம்
இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.
கும்பம்
இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். மனஅமைதி இருக்கும்.
மீனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும்வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கடன்கள் விலகும்.

No comments: